Money Management Apps!

வரவு செலவுகளை கண்காணிக்க உதவும் மொபைல் செயலிகள்!

நீங்க செலவு செய்யற பணம் உங்க காலடில கொட்டிக்கெடக்கு, அதை அள்ளியெடுக்குறதும் கிள்ளியெடுக்குறதும் உங்க கைல தானிருக்கு.
#Thread
#MoneyManagementApps
2020 பிப்ரவரி மாசம் நாம யாராவது நெனச்சுப் பாத்துருப்போமா, அடுத்த நாலு மாசத்துக்கு வீட்லயே முடங்கப் போறோம்னு. எனக்கு சாப்பிட கூட நேரமில்ல, கால்ல றெக்கைய கட்டிக்கிட்டு பறந்துக்கிட்டு இருக்கேன்ன்னு சீன போட்டவங்கள கூட றெக்கைய பிரிச்சு hangerல மாட்டி உக்காரவச்சுருச்சு இந்த Quarantine.
வேலையிழப்பு, வருமானமின்மை தாண்டி இந்த Quarantine நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கத்துக்குடுத்துருக்கு. அது இவ்வளவு நாள் நாம செஞ்சுக்கிட்டுருந்ததுல எது ஆடம்பரம் எது அத்தியாவசிய செலவுகள்ன்னு அப்பட்டமா நம்ம கண்ணுல கட்டுனது.
Bachelorரோ Familyயோ, சம்பாதிப்பது போலவே நாம செய்யும் செலவுகளுக்கும் நாமே பொறுப்பு. அந்த செலவுகளை ஒரு நெறிப்படுத்தி இது தான்டா அய்யாசாமி நீயின்னு மாசாக்கடைசில ஒரு Progress ரிப்போர்ட் போல கண்முன் காட்டும் ஒரு சில appகளை நாம பாக்கப் போறோம்.
இப்போ சொல்லப்போற appகளில் ஒன்றை 6 மாசமா உபயோக்கிறேன். எனக்கும் என் மனைவிக்கும் வரவு செலவுகளில் ஒளிவுமறைவு என்று எதுவும் இல்லாததால எங்களுக்குள் ஒரே என்ட்ரியிலேயே முடிஞ்சுடுது. மாசம் இவ்ளோன்னு அவகிட்ட குடுத்துடுவேன், மிச்ச செலவு நம்ம தான் என்பவர்கள் தனி என்ட்ரி வைத்துக்கொள்ளலாம்.
எந்தவொரு appக்கும் அடிப்படை ஒன்று தான். அது நாம் செய்யும் செலவின் 'category'. சில appகளில் Preloaded categories இருக்கும். அது உங்களுக்கு ஒத்துவந்தால் அதையே உபயோகிக்க ஆரம்பிக்கலாம். அல்லது நீங்களே சில unique categoryகளை உருவாக்கி உள்ளீட்டு உபயோகிக்கலாம்.
Categoryகளை உள்ளீடுவதற்குமுன் ஒரு நிமிடம் கண்ணைமூடி காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் நேரம் வரை ஒரு சராசரி நாளில் நீங்கள் செய்யும் செலவுகளை பட்டியலிடுங்கள். அதாவது காலை எழுந்து ஒரு டீ தம்மு, பேப்பர் ஆரம்பித்து இரவு Swiggyயில் வரவழைத்த Fried riceவரை அத்தனைக்கும் categories.
நான் உபயோகிப்பது Money Manager Expense & Budget என்னும் app. Google PlayStoreரிலேயே கிடைக்கும். இந்த appக்கு specialty என்று ஒன்றுமில்லை. உபயோகிக்க ஈஸியானது என்பதை தவிர. இந்த app வழியே ஒரு செலவை உள்ளீட ஆரம்பிப்போம். 
Link - https://play.google.com/store/apps/details?id=com.realbyteapps.moneymanagerfree&hl=en_IN
காலைல Breakfastக்கு ஒரு கடைக்கு போறீங்க 35ரூவாய்க்கு பூரிசெட் சாப்பிடறீங்கன்னு வச்சுப்போம். பில் pay பண்ணினதும் மறக்காம app ஓபன் பண்ணி இந்த நாள்ல + சிம்பல் அழுத்தி Expensesல செலவை dataவா மாத்திடுங்க.
Expenses tabல நாள் நேரம் போக Account Category Amount Contentsனு இருக்கும். இதுகளை எப்படி வரைமுறைபடுத்தறீங்க ங்கிறத பொறுத்து உங்க செலவு கணக்கு இன்னும் தெளிவா தெரியும். உதாரணமாக நீங்க உபயோகிக்கும் அத்தனை mode of paymentகளையும் categorize செய்யலாம். You can see my a/c category here
இதன்மூலம் cash/card/Sudaxo/Wallet களில் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று மாச இறுதியில் Cumulativeவாக தெரிந்துகொள்ளலாம். அடுத்தது Category. இது தான் ரொம்ப த்ரில்லிங்கான இடம். இதை எந்தளவுக்கு deepபா Categorize பண்றீங்களோ அந்தளவுக்கு உங்களை நீங்களே தெரிஞ்சு வச்சுருக்கீங்கன்னு அர்த்தம்
உதாரணமா Food ஆர்டர் பண்றீங்க, Onlineன்னு வச்சுப்போம்,
அது http://B.fast/Lunch/Dinner ?
Dinnerனா Swiggy/Zomato. இந்த மாதிரி. இதுனால என்ன use? மாச கடைசில எந்த வேளைக்கு அதிகம் வெளிய சாப்ட்ருக்கோம், Swiggyல எவ்ளோ Zomatoல எவ்ளோ செலவாகிருக்குன்னு தெரிஞ்சிடும்.
வண்டிக்கு பெட்ரோல் போடுறீங்களா? Car or Bike? Essentials வாங்குறீங்களா? Groceries/Shop items/Vegetables? Online Shoppingகா? Flipkart/amazon/Myntra? அட சரக்கு வாங்குறீங்களா? Whisky/Brandy/Beer?
இது போல categorize செய்யலாம். @iParisal அவர்களின் Categories அவரோட அனுமதியோடு பகிரறேன். இதெல்லாம் வேற லெவல் Categories. https://twitter.com/iParisal/status/1239052330298773505?s=20
மாச ஆரம்பத்துல கட்டுற EMI, வீட்டு வாடகை, EB பில், போன் ரீசார்ஜ், haircut, threading, நகை சீட்டு, மருத்துவ செலவுன்னு எவ்ளோ வேணாலும் Categorize பண்ணலாம். ஒரு மாசம், ஒரே ஒரு மாசம் பல்ல கடிச்சுக்கிட்டு இந்த உள்ளீடுகள் செஞ்சுட்டா மாச இறுதில நம்மள பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கலாம்.
ஜிம்முக்கு போக ஆரம்பத்துல கடியாருக்கும். அப்புறம் பழகிட்டா ஒவ்வொருநாளும் போக மனசு ஏங்கும். அது போல தான் இதுவும். தம்ம வாங்கி பத்தவச்ச வொடனே மொபைல் app ஓபன் பண்ணி உள்ளீட்டிறணும். அல்லது ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி அந்த நாளை அசைபோட்டு செலவுகளை உள்ளீடலாம்.
இந்த app உபயோகிக்கும் தவவாழ்க்கை அப்போ செலவுகளை கட்டுப்படுத்தணும்ங்கிற எந்த controlம் அவசியம் இல்ல. நீங்க நீங்களாவே இருக்கலாம். அப்போ தான் மாச இறுதில வார வாரியாவோ, நாள் வாரியாவோ செலவுகள் பாக்கும்போது உங்களை பத்தி தெரிஞ்சுக்க முடியும்.
முதல்ல நீங்க உபயோகிச்சுட்டு குடும்பத்துல பகிர்ந்து அவங்களையும் ஊக்குவிச்சீங்கனா அவங்களும் Cylinder, Cable, Can தண்ணி, காய்கறி தாண்டி செலவுகள தெரிஞ்சுப்பாங்க. ரெண்டுபேரும் சேர்ந்து ஒரே அக்கௌன்ட் யூஸ் பண்ணினா இன்னும் சிறப்பு. அன்யோன்யம் ஓங்கும். (அனுபவத்துல சொல்லுறேன்) 😜
Android/iOSகளில் டசனுக்கும் மேல appகள் இருக்கு. முக்கியமா Androidக்கு Money Manager, ET Money, iOS userகளுக்கு Spending சிறந்தது. எல்லாத்துலயும் Day/week/month wise review பாக்கலாம். மாசம் பூரா என்டர் பண்ணிட்டு calendar wise viewல பாத்து தெளிவடையுற அந்த feel வித்தியாசமா இருக்கும்
இதன்மூலம் டீக்கடையார் பரிந்துரைக்கும் மினிமலிஸ்டிக் வாழ்க்கைக்கு உங்களை நகர்த்திச்சென்று வாழ்வில் வளம் பெறலாம். அவர் அட்வைஸ் கேட்டனால தான் நான் இங்க ட்வீட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நான் வாங்கவேண்டிய BMW கார் ஷோரூம்ல நிக்கிது, அதுக்கு மேல உங்க இஷ்டம் :)
You can follow @nkchandar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: