இந்தியா சீனா இடையில் போர் வந்தால் யாருக்கு வெற்று?

இந்தியா சீனா பக்கம் யார் யார்?

இரண்டு நாடுகளின் பலம் பலவீனம் என்ன?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்போதுமே உறவு சுமூகமாக இருந்தது கிடையாது. சீனாவில் எப்போது கம்யூனிஸ்ட் ஆட்சி ஆரம்பமானோதோ அப்போதே சீனா ஆக்கிரம்பை தொடங்கியது.
இமாலையை எல்லை அத்துமீறல்,திபெத் ஆக்கிரமிப்பு,பாகிஸ்தானுக்கு மறைமுக உதவி,வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறல், இன்னும் ஒரு படி மேலே போய் அருணாச்சல் பிரதேசத்தை சீனாவின் வரைபடத்தில் சீனா போட்டுக்கொண்ட கதையெல்லாம் உண்டு.
இந்தியாவிலும் சீனாவிலும் சேர்த்து மொத்தம் 270கோடி பேர் உள்ளனர்.இந்த நாடுகளுக்கு இடையே போர் என்று வந்தால்.அது இதுவரை உலகம் காணாத ஒரு போராகவும் பேரழிவாக இருக்கும் எனக் கூறப்படும். இந்தியாவிட நீர் நிலம் ஆகாயம் என்று மூன்று படையிலும் சீனா எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது.
இதை வைத்து பார்க்கும்போது சீனா வலு உள்ளது போல் தோன்றினாலும்,சீனா இந்தியாவை எளிதில் வென்று விட முடியாது.ஏனெனில் இந்த இரண்டு நாடுகளும் அணைத்து ஆயுதங்களை வைத்துக் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவு. வெற்றி பெற பல தந்திரங்கள் மற்றும் உத்திகளை முக்கியத்துவம் பெறும்.
இமயமலையில் இதே எல்லை விவகாரத்தில் 1962ல் போர் வெடித்தது. அதாவது 58 வருடத்திற்கு முன் நடந்த போரில் சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு உயிரிழப்பு அதிகம் எனினும் காலப்போக்கில் கடந்து 58 வருஷத்துல ராட்சச மலைகளில் இந்தியாவின் போர்த்திறன் சீனாவை காட்டிலும் கூர்மையடைந்து உள்ளது.
சீனா இந்தியாவில் ஊடுருவினால் இந்தியா தோற்கடிக்கப்படும்.அதே போல் இந்தியாவும் சீனாவில் ஊடுருவினால் சீனா தோற்கடிக்கப்படும்.சீனா நிலத்தின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ நினைத்தால் இமாலையத்தை கடக்க வேண்டும்.ஆனால் இந்தியா நிறுத்தி வைத்துள்ள பீரங்கிகளை சமாளித்து முன்னேறுவது கடினம்.
சீனாவின் எல்லை அருகே போர் விமான ஓடு தளங்களை அமைத்து இருக்கிறது இந்தியா.இது மலைப்பாங்கான இடம் இஙகே கப்பல்களுக்கு வேலை கிடையாது ஒன்று போர் விமானம் அல்லது காலாட்படை.அப்படிப் பார்க்கும்பொழுது சீனாவின் எல்லையோரம் இந்தியா நிறைய போர் விமான ஓடுதளங்கள் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை போர் விமானங்கள் 338 சீனாவை பொறுத்தவரை 157.மலைப்பாங்கான இடத்தில் போர் விமான ஓடுதளம் அமைக்க சீனா முயற்சி எடுக்கவில்லை இது சீனாவிற்கு பின்னடைவு.இந்திய ரக போர் விமானங்கள் சீனாவை காட்டிலும் சிறந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் வழியாக ஊடுருவ வேண்டுமானால் “மலாக்கா ஜலசந்தி”வழியாகவே சீன விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் வர முடியும்,ஆனால் அதற்கு அருகே உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளும் இந்திய போர்க் கப்பல்களும் அதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
வலுவான விமானப்படையை வைத்துள்ள இந்தியாவிடம் தரையிலிருந்து விண்ணுக்கு ஏவும் ஏவுகணைகளும் இருப்பதால் சீனப் போர் விமானங்களால் இந்தியாவுக்குள் ஊடுருவ முடியாத.பாகிஸ்தான் உடனான சமீபத்திய சண்டையில் போர் விமான பயன்பாட்டு கூடுதல் திறன் பெற்றுள்ளது இந்தியா.
சீனாவிற்கு இதுபோன்ற சமீபத்திய சண்டை அனுபவம் கிடையாது. வியட்நாம் யுத்தம் அதாவது வியட்நாமுக்கு சீனாவுக்கும் கம்போடியா என்ற நாடு தொடர்பாக ஒரு பிரச்சனை 1979ஆம் ஆண்டு ஒரு மாதகால போரில் சீனாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது .
திபெத் புரட்சி;அமெரிக்காவுடன் சண்டை;ரஷ்யா பிரச்சனை இதற்காக சீனா தன் ராணுவத்தை தயார்படுத்தி உள்ளது,இந்தியா எல்லை போன்ற மலை பிரதேஷத்தில் சீனாவிற்கு சமீபகால அனுபவம் இல்லை. இது இந்தியாவிற்கு சாதகம்
இந்தியாவின் பொருளாதாரத்தை விட சீனாவின் பொருளாதாரம் ஐந்து மடங்கு பெரியது.அதிக ராணுவ பட்ஜெட்டை ஒதுக்குகிறது சீனா புதிய ஆயுதங்கள் வைத்திருக்கிறது நவீன தொழில்நுட்பம் இதெல்லாம் சீனாவின் பலம்.
சீனாவிற்கு எதிரி என்று பார்த்தால் அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா,இவர்கள் இந்தியாவிற்கு உதவி செய்ய வாய்ப்புள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான்,நேபாளம்,வங்கதேசம்,இலங்கை இவங்கல்லாம் சீனாவின் நட்பு நாடுகள்.ரஷ்யா யார் பக்கம் என்று ஒரு கேள்வி இருக்கிறது.
ரஷ்யா சீனா பக்கமா இந்தியாவின் பக்கமா என்று வெளிப்படையான நிலைப்பாடு எதுவும் எடுக்காத ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.போர்க்களக் கூட்டணி என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
1964ஆம் ஆண்டு அணு ஆயுத நாடாக மாறியது சீனா,பத்து வருஷம் பொறுத்து 1974ஆம் ஆண்டு அணு ஆயுத நாடாக மாறியது இந்தியா.இந்தியாவைக் காட்டிலும் சீனாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இரு நாட்டின் கொள்கைகளும் அமைந்துள்ளது.
அதாவது நாங்கள் தாக்கப்படும் வரை அணு ஆயுதத்தை கொண்டு தாக்க மாட்டோம் என கொள்கையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக இருப்பது அணு ஆயுதப்போர் மட்டுமே.இரண்டு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
இந்தியா தனது அக்னி-6 ஏவுகணைகள் வாயிலாகவும் DF 41 ஏவுகணை மூலம் அவற்றை
பயன்படுத்தினால்,ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியம் உள்ள இந்தியாவும் சீனாவும் மீண்டு வராத அளவுக்கு முழுமையாக அழிய வாய்ப்புள்ளதால் அணு ஆயுதப் போரில் இரு நாடுகளும் ஈடுபடாது என்றே கருதப்படுகிறது.
You can follow @karthi_Nan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: