நாங்கள் தலித்தை தலைவராக்கினோம்!
அதுசரி, நீ ஏன் அவர்களை தலித் ஆக்கினாய் என்று நாம் கேட்கும் முன்பே அவர்கள் ஒட்டுமொத்த மக்களையும் இன்னும் பல பிரிவுகளாக்கி அதிகார ஆசையைத் தூண்டி தங்கள் வலைக்குள் வீழ்த்திக் கொண்டார்கள்.
இதுவும் ஒருவகை ஜனநாயகத் தன்மைதான்.

திராவிடக் கட்சிகள் மாவட்டம், வட்டம், பேரூர், சிற்றூர், கிளைச்செயலாளர் என்று அதிகாரத்தைப் பகிரும்போது, பாஜக இதையும் உடைத்து அதற்குள் SC, ST, OBC, Minority என்று அனைவரையும் உள்ளீர்த்து வருகிறது. இந்த அதிகாரப் பரவலாக்கம்தான் திராவிடக் கட்சிகளிடம் இல்லாமல் போயிற்று.
நீ ஏன் அவர்களை தலித் ஆக்கினாய் என்று கேட்டுவிட்டு கடந்து போகிறோமே தவிர அவர்கள் செய்ததைப் போன்று நாம் அதே தலித்துகளுக்கான பிரதிநிதித்துவத்தை அளிப்பதில் நேர்மையாகவே தவற விட்டுவிட்டோம் என்பதை இன்றுவரை உணர மறுக்கிறோம். நாம் விட்ட இடம்தான், இன்று அவர்கள் தொட்ட இடம்!
திராவிடக் கட்சிகள் தாங்கள் வெட்டும் கேக்கில் ஒரு சிறு துண்டு தலித்துகளுக்கு ஒதுக்குமே தவிர, கேக்கினை வெட்டும் உரிமையினை ஒருபோதும் தலித்துகளுக்கு அளிக்காது; அப்படி ஒருபோதும் நடக்காது.
திராவிடக் கட்சிகளின் இந்தத் தவறிலிருந்துதான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் இந்தத் தவறிலிருந்துதான் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
ஆடுகள் தாங்கள் வெட்டப்படுவதை அறிவதில்லை என்று பலர் ஆதங்கப்படுகின்றனர். தலித்துகள் ஏன் எப்போதுமே ஆடுகளாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
அந்த ஆடுகளுக்கு நீங்கள் வழங்காத அரசியல் அதிகாரத்தை அவர்கள் வழங்குகிறார்கள் எனும்போது அவர்களது பாதை மாறுவது இயல்பானதே!
அந்த ஆடுகளுக்கு நீங்கள் வழங்காத அரசியல் அதிகாரத்தை அவர்கள் வழங்குகிறார்கள் எனும்போது அவர்களது பாதை மாறுவது இயல்பானதே!
திராவிடக் கட்சிகளில் ஒரு மாவட்டச் செயலாளரின் பணியை, பாஜகவில் ஒரு மாவட்டமும், SC, ST, OBC, Minority பிரிவுகளின் மாவட்டச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி என்று திராவிடக் கட்சியினர் சொல்லலாம். ஆனால் வாக்கு வங்கி அரசியலின் தேவை இதுதான்!
இதுதான் அரசியலில் சரியான பிரதிநிதித்துவமும் கூட.
10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக என்றொரு கட்சி இருந்ததே இங்கு பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஆனால் இன்று ஒவ்வொரு தெருவிலும் அதன் கொடிகள் பறப்பது திராவிடக் கட்சிகள் தங்களது கள செயல்பாட்டில் கவனம் செலுத்தத் தவறியதையே உணர்த்துகிறது.

ஒரு பக்கம் போலித் தமிழ்தேசியம் பேசுவோரும், மறுபக்கம் இந்துத்துவத்தை முகமாகக் கொண்டவர்களும் சூழ்ந்திருக்கும் வேளையில் திராவிடக் கட்சிகள் அதன் ஜனநாயகத்தன்மையைக் காப்பாற்ற அதிகாரப் பரலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்.
தங்களது செயல்பாட்டை சீராய்வு செய்ய வேண்டும்.
தங்களது செயல்பாட்டை சீராய்வு செய்ய வேண்டும்.
பாஜக SC,ST, OBC, Minority என்று அனைவரையும் உள்ளடக்கி இடமளிப்பது மக்களை ஜாதிரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி என்று திராவிடக் கட்சிகள் கருதினால் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய கட்சிகள் என்ற அடையாளத்தை நாம் சுமந்து திரிவதில் பொருள் ஏதுமில்லை.
அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்போம்!
அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்போம்!