மனச ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை இங்க ஷேர் பன்னிக்க தோணிச்சு அதுக்கோசரம் த்ரெட்.

எங்க ஊர் பெரும்பான்மை இந்து சமூக மக்கள் வாழும் ஊர்தான். எங்க தெருவுல ரெண்டோ மூனோ கிறிஸ்தவ வீடும் எங்க வார்டுல கூட்டிப்பார்த்தா இருபத தொடாது. ஊர்ப்பொதுக்கோவிலா தென் மாவட்டங்களில் மட்டும் பிரதிப்பெற்ற
அய்யா வைகுண்டர் கோவிலும் ஒரு இசக்கியம்மன் கோவிலும் இருக்கு. பத்து வருசத்துக்கு முன்னாலவரை ஊர்ல தங்கியிருக்கும் எந்த மத/ஜாதி மக்களும் கோவில் வரிக்கொடுக்கலாம்னும், அவங்க கோவில் வரலாம் அனைத்து விழாக்களிலும் பங்கெடுக்கலாம், எதும் பிரச்சினை/துக்கம்னா மொத்த ஊரும் துணை நிற்க்கும்னு
இருந்துச்சு.

அப்றம் ஊர் சில்வண்டு, வாலிப பசங்க, கிழடுங்க கூடி அரட்டை அடிக்க விளையாடனு விளையாட்டு திடல் + நூலகம் உண்டு. தாயக்கட்டை முதல் புட்ஃபால் வரை எல்லாம் உண்டு, யார்வேணா வரலாம் எடுத்து விளையாடலாம் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

எங்க தெருவுல நியூ இயர், பொங்கல் தொடங்கி தீபாவளி
எல்லாமே களைக்கட்டும். பெரும்பாலும் கிறிஸ்டின் பசங்கதான் முன்ன நின்னு நடத்துவாங்க எந்த பிரச்சினையும் வந்ததில்ல வேறுபாடும் காட்டினதில்ல.

மேலும் ஊர்ல 200+ வருட பழமையான ஒரு பள்ளிக்கூடம் ஒன்னுருக்கு ஆங்கிலேயர் காலத்துல உருவாக்கினது, கூடவே இரு தனியார் இலவச மாணவர் விடுதி இருக்கு.
இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிறிஸ்தவ அமைப்புக்கள் உருவாக்கினது அவங்கதான் பராமரிச்சும் வர்றாங்க.
ஊர்ல உள்ள 90% மக்கள் இந்த கல்வி நிறுவனங்களால் பயனடைந்தவர்கள்தான்.

காலம் மெல்ல மெல்ல மாறிச்சு கல்லூரியிலே இல்லாத படிப்பில் பட்டம் பெற்ற டீக்கடைக்காரர் பிரதமர் ஆகிறார்.
அதுவரை பிஜேபினு ஒரு கட்சி உண்டுனு மட்டுமே தெரிஞ்ச ஊருக்குள்ள பிஜேபி குழுக்கள் அங்கங்க ஆரம்பமாச்சு.

திமுகவா அதிமுகவா னு சண்டைப்போட்டுட்டுந்த வாக்குவங்கி பிஜேபி ஆதரவு அல்லது பிஜேபி எதிர்ப்புங்குற நிலை உருவாகிச்சு.

இப்போ கடந்த சில வருடங்களா சில வீடுகள் மேல காவிக்கொடி பறப்பதையும்
காணமுடியுது.

கிரவுண்ட்ல எந்த மதம்/ஜாதிங்குற பாகுபாடு தெரியாம ஒன்னா கிரிக்கெட் விளையாடிட்டு திரிஞ்ச பசங்க மனசுல விசத்தை விதைச்சு பெரிய பிரச்சனை உருவாகி இப்ப யாரும் அடுத்த மத பசங்களோட விளையாடுறதில்லை.

விளையாடுற இந்து பசங்களுக்கு ஜெர்ஸி ஸ்பான்சர் பன்றோம்னு அதுல காவிக்கொடியையும்
சத்ரபதி சிவாஜி ஃபோட்டோவயும் ப்ரிண்ட் பன்னி குடுக்குறாங்க.

அடுத்ததா ஊருக்கே கல்வி சேவை குடுத்த பள்ளியில கை வச்சாங்க, அது கிறிஸ்தவ பள்ளி அங்க மதமாற்றம் நடக்குது அதனால அங்க நம்ம பிள்ளைங்கள சேர்க்கக்கூடானு தனியார் பள்ளியை இந்து பள்ளினு காமிச்சு அங்க சேர்க்க வைக்கிறாங்க.
ஊர்ப்பொதுக்கோவிலுக்கு யார்வேணா வரிக்கொடுக்கலாம்னு இருந்தது மாறி இப்போ மதம் பார்த்து மட்டும்தான் வரி வாங்குறாங்க.

விளையாட்டு அரங்கம்+நூலகத்துக்கு வளாகத்தையே சுவர் ஏழுப்பி அடைச்சிட்டாங்க எதுக்காம் அடுத்த மதக்காரங்க வர்றாங்க அவங்க பைக்க பார்க் பன்றாங்கனு(என்ன கொடுமைடா).
அடுத்ததா நாங்க எங்க தெருவுல சேர்ந்து கொண்டாடிட்டுருந்த பொங்கல், திருகார்த்திகை போன்ற விழாக்கள்ல எப்டி கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கலாம்னு அதுலயும் மண்ணள்ளி போட்டாங்க.

ஒருசில வீட்டு வாசல்ல இது இந்து வீடு தி.க கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேணாம்னு ஸ்டிக்கர் இருக்குது(ஷப்பாஆஆ).
கொஞ்ச நாள் முன்ன பக்கத்து வீட்டு பையனுக்கு(கிறிஸ்தவ நண்பன்) வேலை பார்க்கும் போது கால்ல பெரிய கல் விழுந்து அடிபட்டதால ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. அப்பா இல்ல கஷ்டப்படுற குடும்பம்னு பசங்களும் அக்கம்பக்கத்தினரும் காச புரட்டி பாத்துக்கிட்டாங்க. நான்கூட டுவீட் போட்ருந்தேன்
சரி இதுனால என்னனு கேட்குறீங்களா, அடிப்பட்டது கிறிஸ்தவனுக்குத்தானே ஏன் நீங்க உதவனும்னு ஊர் பெரியத்தலைக்கட்டுகள்லாம் உதவி பன்ன பசங்க வீட்டுக்கு போய் வார்ன் பன்னிருக்காங்க. அடிப்பட்டா சர்ச்ல கொண்டுபோய் போடலாமே ஏன் ஆஸ்பத்திரி கொண்டு போகனும் போன்ற தத்தவங்களையும் அள்ளிவீசிருக்காங்க.
இன்னும் நிறைய இருக்கு பட் உங்களுக்கு போர் அடிச்சிடும்.

ஃபைனலி ரொம்ப நாள் அப்றம் நேத்து என் நண்பனோட தம்பியை மீட் பன்னேன் அப்போ அவன் பேசிட்டே "இந்த ஊர்ல இருக்கவே பிடிக்கல எப்போ அடிக்கலாம்ங்குற மாதிரியே பாக்குறாங்க, வேற மதத்துல பிறந்தது என்ன தப்பா"னு கேட்டதை அவ்ளோ ஈசிய கடக்கமுடியல.
இத்தனைக்கும் ஊர்ப்பொதுக்கோவிலின் முகப்பு வாசகம் "சமத்துவமே அய்யாவழி, தாழக்கிடப்பாரை தற்க்காப்பதே தர்மம்".

ஆகையால் விட்றாதீங்க கண்டிப்பா விட்றாதீங்க உங்க ஊர்ல RSS/பிஜேபியை மட்டும் வளர விட்றாதீங்க. 🙏
You can follow @DineshRainaa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: