நீதிமன்றங்களில் மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது

அதிலிருந்து ஒரு சில இந்த இழையில்

1963 ஆம் ஆண்டு வந்த தீர்ப்பு

"தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை மணம் செய்யும் உயர் சாதியினரும் தாழ்ந்து விடுவார்கள்"

https://indiankanoon.org/doc/1078904/ 
1964 ஆம் ஆண்டு

சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு என்பதற்கு மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டியிருக்கிறார் நீதிபதி

வாரிசு இல்லாதவர்கள், சாதியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், பார்வை இல்லாமலோ காது கேளாமலோ பிறந்தவர்கள், இவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது

https://indiankanoon.org/doc/495668/ 
1953 ஆம் ஆண்டு

இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு

பெண் குழந்தைகளை மட்டுமே பெறுபவளை ஒதுக்கி விட்டு கணவன் வேறு திருமணம் செய்யலாம் என்று ஸ்ம்ரிதிகளில் இருப்பதை நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

https://indiankanoon.org/doc/801259/ 
1962 ஆம் ஆண்டு

ஒரு திருமணம் அசுர மணமா அல்லது பிரம்ம மணமா என்ற வழக்கு. இதற்கு மனுவை நாம் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம் என்கிறார் நீதிபதி

https://indiankanoon.org/doc/457910/ 
விடுதலை பெறுவதற்கு முன்பு நிலைமை இன்னும் மோசம்

1926 ஆம் ஆண்டு, ஒரு வழக்கில், சூத்திரர்களை நீதிமன்றத்தில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று மனுஸ்ம்ரிதியில் இருப்பதாக நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

https://indiankanoon.org/doc/1242249/ 
1912 ஆம் ஆண்டு

ஜீவனாம்சம் கோரி நடந்த வழக்கில், சூத்திர பெண்களை பிராமண சத்திரிய வைசியர்கள் திருமணம் செய்வதை மனு கண்டிப்பதாக மனுஸ்ம்ரிதியை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கிறார்

https://indiankanoon.org/doc/621387/ 
சரி...அது அந்தக் காலம். இப்ப எப்படின்னு பார்க்கலாமா?

2017 ஆம் ஆண்டு

மூளை வளர்ச்சி குறைபாடுள்ள மகனின் சீறுநீரகத்தை தானம் கொடுப்பது பற்றிய வழக்கு

மீமாம்சையில் இருக்கும் தத்துவங்களை வைத்து வழக்கை அணுகியிருக்கிறார் நீதிபதி!

https://indiankanoon.org/doc/179156463/ 
2015 ஆம் ஆண்டு

மனுஸ்ம்ரிதியில், சாட்சிகளின் உடல்மொழியை வைத்து அவர்களை எடை போடுவதை குறித்து எழுதப்பட்டுள்ளதை, நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

https://indiankanoon.org/doc/190174798 
இப்படி இன்னும் நிறைய தீர்ப்புகள் இருக்கிறது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுஸ்ம்ரிதியை உயர்வாக கருதும் நீதிபதிகளின் கையில்தான் நம் நீதிமன்றங்கள் இருக்கிறது

நீதிமன்ற வளாகத்திலேயே மனுவின் சிலையை நிறுவி, பார்ப்பனீயம் நம்மை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது
https://twitter.com/angry_birdu/status/1278193486982811648
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: