அண்ணா நகர் பார்க்ல வாக்கிங் முடிச்சிட்டு ஒரு ஒரத்துல போயி அப்பாடான்னு உட்காரந்துட்டு இருந்தேன் அப்ப அங்க உட்காரந்து இருந்த ஒருத்தர் வந்து இவன் எதோ மெசேஜ் அனுப்பிட்டே இருக்கான் என்னானே புரியல கொஞ்சம் படிச்சி சொல்லுங்க மெசேஜ் டெலிட் பன்னாலும் விடமாட்ரான்னு சொன்னாரு
அது டிக்டாக் ஆப்.. அதுல ஒரு வெள்ளகாரன், இவரு வீடியோவ பாத்தா தான் அவனுக்கு பொழுதே விடியும்னும் அவன் வீட்டுக்காரியும் இவர் வீடியோக்கு பேன் னும் போட்ருந்தான்.. படிச்சி சொன்னதும் அவருக்கு அவ்ளோ சந்தோஷம்..விருது வாங்குன நடிகர் மாதிரி அவ்ளோ பெருமை
அதான் சொல்லிருக்கானா நான்கூட திட்ரான் போலனு நினைச்சிட்டேன்னு சொன்னார்.. என்ன பன்றிங்கனானு கேட்டதுக்கு எதோ கவர்மென்ட் ஆபிசருக்கு டிரைவரா இருக்கேன்னு சொன்னார்.. அந்தாளு காலலை வாக்கிங் வர்ரதுல இருந்து இவருக்கு வேலை ஆரம்பிக்குமாம் நைட்டு 9 மணி ஆயிடுமாம் முடிய
இதுல எப்டி வீடியோ போடுரிங்கன்னு கேட்டதுக்கு.. நைட்டு தூக்க போகும் முன்னவே வீடியோ டயலாக் எல்லாம் எடுத்துவச்சி பேசி பயிற்சி பண்ணிடுவாராம் அதுக்கு அப்புறம் லொகேஷன் எங்க எல்லாம் அமையிதோ அங்கெல்லாம் வீடியோ எடுத்துருவாராம்.. நம்ம டேலன்ட அவ்ளோ சீக்கிரம் விட்றமுடியாதுல்லனு சொன்னாரு
ஒரு நாளைக்கு நாலு இல்ல அஞ்சு வீடியோ போட்ருவாராம்.. நம்ம டெலன்ட எதாச்சும் டைரக்டர் பாத்தா நமக்கு ஒரு விடிவுகாலம் வந்துரும்லனு சொன்னாரு.. எனக்கும் அவரு நடிச்ச வீடியோ எல்லாம் காட்னாரு.. நல்லாருக்கானு எல்லாம் வீடியோக்கும் கேட்டாரு..
நாம என்னதான் கலாச்சாலும் அந்த Appஅ ஒரு ஸ்டேஜ் மாதிரிதான் பாக்குறாய்ங்க.. யாராவது நம்மள பாராட்டணும்குற ஆதங்கம் நடிகர் நடிகை மேல உள்ள மோகம், இது எல்லாதையும் விட நாமளும் கேமரா முன்னாடி மக்கள பாக்குற மாதிரி நிக்கிறோம்குற பீல்...
பேக்ரவுண்ட் பிஜிஎம் ஸீலோ மொஷன் ஷாட் எல்லாம் ஆப்ல இருந்தாலும் இத உபயோகபடுத்துர சில போரோட கிரியேட்டிவிட்டியும் நல்லா இருக்கும்.. அவுங்களுக்காச்சும் சீக்கிரமே புது ஆப் வரட்டும் 🙌
You can follow @Sagacious_Chap.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: