My #CORONA experience
........

சென்னைல இருந்து ஊருக்கு போனதும் மாமனார்க்கு ஃபீவர் அதிகமா இருந்தது.
அதுக்கு முன்னாடி எனக்கும் மைல்ட் ஃபீவர், டேஸ்ட்டிங் சென்ஸ் இல்லாம இருந்துச்சு.
சரி #CORONA test எடுத்துடலாம்னு மயிலாடுதுறை GH க்கு ஜூன் 4ஆம் தேதி போய் சாம்பிள் குடுத்தோம்.
10 - 15 cm நீளமுள்ள ரெண்டு குச்சி மூக்கு உள்ள ஒன்னும், வாய் உள்ள விடுறாங்க.
பெருசா வலிக்கல. ஆனா ரெண்டு செகன்ட் கண்ணுல இருந்து தண்ணீ வந்துருச்சு. மொத்தமே 1 நிமிஷ வேலை தான்.
சாம்பிள் குடுத்து ரிசல்ட் வர ரெண்டு நாள் ஆகும். அது வரைக்கும் ஹாஸ்பிடல்லதான் இருக்கணும். நெகட்டிவ் வந்தா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க, positive வந்தா Corona வார்டுக்கு அனுப்பிடுவாங்க.
நாங்க ஸ்பெசல் பெர்மிஷன்ல வீட்டுக்கு போயிட்டோம்.
எப்படியும் நெகட்டிவ் தான் வரும் என்ற நம்பிக்கையில
6 ஆம் தேதி காலைல நாகப்பட்டினம் கலெக்டர் ஆஃபிஸில் இருந்து ஃபோன் வந்துச்சு.
உங்களுக்கு Corona Positive ரிசல்ட் வந்துருக்கு, ரெடியா இருங்கன்னு.
இவ்வளவு நாள் செய்தியா இருந்த ஒரு நோய், இப்ப நமக்கு வந்துட்டு அடுத்து என்ன ஆகுமோன்னு ஒரு கவலை.
நம்ம செய்தியும் நியூஸ் பேப்பர்ல வந்துச்சு
அடுத்த ஒரு மணி நேரத்துல ஏரியா ஹெல்த் இன்ஸ்பெக்டர் டீம் ஒரு 20 பேரு வீட்டுக்கு வந்துட்டாங்க.
நீங்க எங்கெங்க போனிங்க, யார் யார் கூட கான்டாக்ட்ல இருந்தீங்க, வீ‌ட்டுல யார் யார் இருக்கீங்கனு ஃபுல் டீடெய்ல்ஸ் வாங்கிட்டாங்க.
அடுத்ததா முனிசிபாலிட்டி ஆளுங்க வந்து ஃபுல் வீட்டையும் சானிடைஸ் பன்னிட்டாங்க.
தெருவுல குறுக்கால 6 அடிக்கு ஒரு லைன் பிளீச்சிங் பவுடர் போட்டாங்க.
வீட்டுல ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல ரெண்டு ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வந்துச்சு.
ஒன்னு ஏற்கனவே பாசிடிவ் ரிசல்ட் வந்த எனக்கும் எங்க மாமாவுக்கும்.
இன்னொன்னு இதுவரை டெஸ்ட் எடுக்காத வீட்டுல உள்ளவங்களுக்கு.
சரி எல்லாரும் கொஞ்ச நேரம் அழுது ஃபீளிங்ஸ்லாம் முடிஞ்ச அப்புறம் ஆம்புலன்ஸ்ல புறப்பட தயாரானோம்.
நேரா எங்கள மயிலாடுதுறை GH க்கு கூட்டிட்டு போய் Corona வார்ட்ல அட்மிட் பன்னிட்டாங்க.
வீட்டுல உள்ள மத்தவங்கள சாம்பிள் எடுத்துட்டு Isolation வார்ட்க்கு அனுப்பிட்டாங்க, ரிசல்ட் வர்ற வரை அங்க இருக்கனும்.

இது தான் கொரோனா வார்ட்.
மயிலாடுதுறை GHல இப்பதான் ஒரு புது பில்டிங் கட்டியிருந்தாங்க, அதையே Corona வார்ட்டா மாத்திட்டாங்க, அதுனால floor, ரெஸ்ட்ரூம் எல்லாம் க்ளீனாவே இருந்துச்சு.
2 IWC
2 EWC
2 Washbasin
4 பாத்ரூம்
மத்த GHல இவ்ளோ க்ளீனா எதிர்பார்க்க முடியாது.
இதுவே எங்களுக்கு மிகபெரிய நிம்மதியா இருந்துச்சு
அடுத்த ரெண்டு நாள்ல வீட்டுல டெஸ்ட் எடுத்த எல்லாருக்கும் ரிசல்ட் வந்துச்சு
மத்த எல்லாருக்கும் நெகட்டிவ்.
அக்காக்கு(மாமியார்) மட்டும் positive.
அவங்களயும் எங்க கூட Corona வார்ட்ல அட்மிட் பன்னிட்டாங்க.
மத்தவங்கள திரும்ப ஒரு காலேஜ்ல(AVC) ரெண்டு நாள் வச்சிட்டு அனுப்பிட்டாங்க.
நாங்க Corona வார்டுக்கு போனதும் லோக்கல் ஒன்றிய தலைவர் மூலமா தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வந்தது.
1. பக்கெட்
2. குளிக்கிற கப்
3. கைலி
4. T.Shirt
5. பனியன்
6. ஜட்டி
7. பிரஷ், பேஸ்ட், சோப்பு
8. தேங்காய் எண்ணெய்.
இதுல்லாம் இருந்தது
அட்மிட் ஆன அடுத்த நாள் பிளட் சாம்பிள், ECG எடுத்தாங்க.
ஆனா கடைசி வரை டாக்டர பார்க்கவே இல்லை.
வெறும் ஃபோன் கான்டாக்ட் மட்டும் தான்.
டெய்லி ஈவினிங் நம்ம நம்பர்க்கு கால் பன்னி என்ன செய்துனு கேட்பாங்க, அதுக்கு ஏத்த மாத்திரை சிஸ்டர்ட்ட குடுத்து அனுப்புவாங்க.
ட்ரீட்மெண்ட்னு பார்த்தீங்கன்னா, டெய்லி காலைல இந்த மூனு மாத்திரை எல்லாருக்கும் பொதுவா குடுத்துருவாங்க. அப்புறம் நமக்கு ஏதாவது பிரச்சனை(காய்ச்சல், சளி, இருமல், மூட்டு வலி, சுவாச பிரச்சனை) இருக்குனு சொன்னா அதுக்கு தனி தனியா டேப்ளட் குடுப்பாங்க.
காலை மாலை ரெண்டு வேளை கபசுர குடிநீர்
ஹாஸ்பிடல்ல குடுத்தது
7 மணிக்கு பால்
8 மணிக்கு கபசுர குடிநீர்
10 ம‌ணி‌க்கு இட்லி & வெந்நீர்
12 மணிக்கு veg சூப்பு
2 மணிக்கு சாப்பாடு with முட்டை
4 மணிக்கு veg சூப்பு & கபசுர குடிநீர்
9 மணிக்கு இட்லி.
சாப்பாடு சுத்தமா நல்லாவே இல்ல.
ரெண்டு மூனு நாள் பார்த்தோம், அப்புறம் நாங்க வெளில அர்ரேஞ் பன்னிக்கிட்டோம். வெளில இருந்து சாப்பாடு எடுத்து வர்றவங்க நேரிடையா நம்மள்ட்ட குடுக்க முடியாது.
வெளிலயே ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ட்ட குடுத்துடனும். அவங்க நம்மள்ட்ட வந்து குடுத்துடுவாங்க.
உங்களுக்கு அல்லது தெரிஞ்சவங்களுக்கு யாருக்காவது Corona வந்து GHல அட்மிட் ஆகுற மாதிரி இருந்தா, வெந்நீர் வைக்கிற இந்த எலக்ட்ரிக்கல் kettle கண்டிப்பா வாங்கி வச்சிக்குங்க. இது தான் எங்களுக்கு பெருசா உதவுச்சு.
கபசுர குடிநீர் கூட இதுலயே நாங்க போட்டுக்கிட்டோம்.
பெரிய கொடுமை என்னென்னா நம்மளே தீண்டதகாதவர்கள் மாதிரி உணர்வோம்.
சாப்பாடு குடுக்குற ஸ்டாஃப் நம்ம கைல குடுக்க மாட்டாங்க. ஒரு டேபிள்ள வச்சிடுவாங்க, ஒவ்வொருத்தரா லைன்ல போய் எடுத்துக்கனும்.
இந்த ஜன்னல் வழியா மட்டும் தான் உலகத்த பார்க்க முடிஞ்சது.
இப்படி ரொட்டீன்னா போயிட்டு இருந்தப்ப ரெண்டு வாரம் கழிச்சி ரெண்டாவது டெஸ்ட எடுக்க வர சொன்னாங்க.
முதல் போடுடோல இருக்குற அளவு உள்ள ஸ்டிக்க, ரெண்டாவது போட்டோல உள்ள அளவு வரைக்கும் உள்ள விட்டு குடஞ்சி எடுத்து அந்த லிக்யூட் டப்பால போட்டு மூடி வச்சிடுவாங்க.
திரும்ப ரிசல்ட் வர்ற ரெண்டு மூனு நாள் ஆகும்னு சொன்னாங்க. 10th exam எழுதிட்டு ரிசல்ட் தேதி சொன்னதுக்கு அப்புறம் இருக்குற படபடப்போடயே மூனு நாள் வெயிட் பன்னினோம்.
மூனாவது நாள் ரிசல்ட் வந்துடுச்சு.
எனக்கும் மாமாக்கும் நெகட்டிவ்.
அக்காக்கு திரும்ப பாசிடிவ்.
ஒரு வழியா எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு போறோம்னு முழுசா சந்தோஷ பட முடியாம, ஒரு வித மிக்ஸட் ஃபீளிங்லயே கிளம்புனோம்.
ஆம்புலன்ஸ்லயே திரும்ப வீட்டுக்கு வந்து விட்டாங்க. 2 வாரம் ஹோம் க்வாரன்டைன் இருக்கனும்னு சொல்லிட்டு போனாங்க.
ஒரு பெரிய போராட்டத்துக்கு போயிட்டு வந்த ஃபீளிங்.
எது எப்படியோ இந்த புது நோயிலிருந்து காப்பாற்றிய தமிழ்நாடு அரசாங்கம், மயிலாடுதுறை GH டாக்டர், நர்ஸ், ஸ்டாஃப்ஸ் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி. நன்றி.. நன்றி...
🙏🙏🙏
You can follow @er_surendher.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: