உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிதான் முதல் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட ஆதாரங்கள்.

முதலில் அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த வாக்குமூலம்
கொலையை முன் நின்று செய்த A4 (சின்னசாமியின் நண்பர்) கொடுத்த வாக்குமூலம். சின்னசாமியிடம் இருந்து ரூ 50,000 வாங்கியதாக கூறியிருக்கிறார்.

இப்போதைய தீர்ப்பில் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சின்னசாமி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கிலிருந்து, கொலை நடந்ததற்கு சில நாட்களுக்கு முன்பு, ரூ 50,000 ஏடிஎம்மில் இருந்த எடுக்கப்பட்டிருப்பதை வங்கி அதிகாரி உறுதி செய்திருக்கிறார்.
கொலை செய்தவர்களுக்கும் சின்னசாமிக்கும் இடையே பலமுறை தொலைபேசி உரையாடல் நடந்ததை தொலைபேசி நிறுவனங்கள் உறுதி செய்திருக்கிறது
கொலை செய்தவர்களை சின்னசாமி தனது லாட்ஜில் தங்க வைத்ததாக லாட்ஜ் உரிமையாளர் சாட்சி அளித்துள்ளார்
கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு சின்னசாமியை கொலை செய்தவர்களோடு பார்த்ததாக ஒரு சாட்சி. தான் சின்னசாமியோடு பார்த்தது இவர்களைத்தான் என்று நீதிமன்றத்திலேயே உறுதி செய்திருக்கிறார்.
கொலை செய்யதவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக், தான் சின்னசாமியிடம் கடன் பெறுவதற்காக அடமானம் வைத்தது என்று பைக் உரிமையாளர் அளித்த வாக்குமூலம்
இத்தனை தரவுகள் இருந்தும் A1 மீதான குற்றம் ஏன் நிரூபிக்கப் படவில்லை? நீதிமன்றம் சொல்லும் காரணங்கள் இதோ.

வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலும், அதை சின்னசாமிதான் எடுத்தார் என்பதற்கான ஏடிஎம் சிசிடிவி பதிவை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை
சின்னசாமி கொலையாளிகளை தங்கவைத்த லாட்ஜ் ரசீது புத்தகத்தை காவல்துறை கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை
கொலையாளிகள் பயன்படுத்திய பைக் சின்னசாமியிடம் அடமானமாக கொடுப்பட்டதாக கூறப்பட்ட சாட்சியத்தில், அடமானம் வைக்கப்பட்டது என்பதை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை!
சின்னசாமியை கொலையாளிகளோடு பார்த்ததாக கூறிய சாட்சியத்தில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அதை சரியான முறையில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்காமல் குற்றவாளியை தப்ப வைத்த வகையில், இந்த வழக்கின் முதல் குற்றவாளி அரசுதான்!

Judgement Link http://164.100.79.153/judis/chennai/index.php/casestatus/viewpdf/532773
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: