சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய தரேட் தலைவர் வெறியர்கள் மட்டும் படிக்கவும்:-

எனது பார்வையில் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உணர்வு, உரிமை சம்பந்தப்பட்டது அதை எங்கள் தலைவரே விரும்பினாலும் நாங்கள் யாருக்கும் விட்டுதர முடியாது.

#SSR
#Annaatthe
சும்மா ஒன்றும் கிடைக்க வில்லை சூப்பர் ஸ்டார் பட்டம் எவ்வளவு அவமானங்கள், ஏமாற்றங்கள், கேலிப்பேச்சுக்கள் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், தோல்விகள்,அனைத்தையும் நெஞ்சில் சுமந்து திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டி இந்த தேசத்தையும் தாண்டி பெரும் புகழ் ஈட்டிவிட்ட மிகப்பெரிய ஈர்ப்பான வார்த்தை.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,

தனி மனிதனால் மட்டுமே இவ்வளவு பெரிய சாதனையை ஈட்டிட முடியுமா என்ன? இல்லை நிச்சயம் இல்லை,

தலைவரின் இமாலய வெற்றிக்குப் பின்னே மிகப்பெரிய பட்டாளம் இருக்கிறது.
அவர்களின் தோளில் ஏறி நின்றுதான் சிகரத்தை தொட்டிருக்கிறார் தலைவர் இவர்களை எந்த நாளிலும் மறந்ததே இல்லை,

இயக்குநர் கே.பாலசந்தர் தலைவருக்கு சினிமா உலகின் விசிட்டிங்கார்டே இவர்தான்

இயக்குநர் மகேந்திரன் தலைவரின் நடிப்பை பட்டைத்தீட்டி அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்
தயாரிப்பாளர் தாணு‘சூப்பர்ஸ்டார் எனும் பட்டத்தை வழங்கியவர் கணிசமான படங்களின் மெகா வசூலுக்கு இவரே அடிப்படை காரணம்,

ஏ.வி.எம். நிறுவனம் முரட்டுக் காளையின் மூலம் தலைவரை தென்தமிழக பகுதிகளில் ஷூட்டிங்குக்கு கூட்டிவந்து தலைவருக்கு தமிழகமெங்கும் ஜனரஞ்சக ரசிகர்களை உருவாக்கிய நிறுவனம்,
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைவரை அதிரிபுதிரி மாஸ் ஹீரோவாக கட்டி எழுப்பிய மிக முக்கிய இயக்குநர் இவர் மூலமாகதான் தலைவருக்கு HIT Vibration தொடர்ந்தது,

தலைவரை மக்களிடம் பெரிதாய் கொண்டு சேர்த்தது இளையராஜாவின் இசையே.

தலைவருக்கு ஓப்பனிங் மாஸ் சாங் SPB இல்லாமல் சூப்பர் ஹிட்டாகாது
பாடலாசிரியர் வைரமுத்து மாஸ் நடிகர் ரஜினியை தலைவர் ரஜினியாக தூக்கிப் பிடித்தது இவரது வரிகள்தான் தமிழர்களின் உணர்ச்சிகளோடு தலைவரை பின்னிப் பிணைய வைத்தவை வைரமுத்துவின் வார்த்தைகள்தான்.

திமுக தலைவர் கலைஞர்க்கும், தலைவருக்கும் இடையில் ஒரு உறவுப் பாலமாகவே இருந்தார் இவர் தான்,
இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா 1990 களில் தலைவரின் மார்க்கெட் திடீர் டல்லடித்தபோது இவர் தந்த அண்ணாமலை,வீரா,பாட்ஷா போன்ற படங்கள் அவரை மீண்டும் உச்சத்தின் உச்சத்தை தொட வைத்தன.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தலைவரின் One Of The Fav Director அதிரிபுதிரியான ஹிட்களை தந்தவர்.
படையப்பா எனும் ரெக்கார்டு பிரேக் படத்தை தந்தவர்.

தலைவருக்கு ஜப்பானிலும் ரசிகர்களை உருவாக்கியது, இவரது முத்து தான்,

இயக்குநர் ஷங்கர் தலைவரை அறிவியல் ஆளும் காலத்துக்கு ஏற்ப மாற்றியது இவரே. சிவாஜியில் இளமையாக்கி, எந்திரன் மற்றும் 2.0 வில் அவரை ரிலோட் செய்து தெறிக்க விட்டதும் இவரே,
காலா கபாலியில் அரசியல் பேசவைத்த ரஞ்சித்

நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரை இளமை துள்ளலுடன் பேட்ட யில் பட்டையை கிளப்பிய கார்த்திக் சுப்புராஜ்

தர்பாரில் தலைவரை 70 வயது இளைஞனாக மாற்றிய முருகதாஸ்

இப்படி பட்டியல் மிக பெரியது அந்த ஆளுமைகள் இல்லாமல் ரஜினியின் வெற்றிச் சரித்திரம் இல்லை
இவை அனைத்துக்கும் மேல் பல எதிர்ப்புகளை மீறி தலைவரை முதன் முதலில் கதாநாயகனாக பைரவி’படத்தை தயாரித்த கலைஞானம்

(இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்)

இவர்களையெல்லாம் தாண்டி தலைவர் தொடர்ந்து வெற்றிக் குதிரையாகவே இருப்பதற்கு காரணம் வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்கள்.
கமல் அவருடனான போட்டி தலைவரை தொடர்ந்து ஹிட்டை நோக்கி வெறியெடுத்து ஓட வைத்தது,

ஆனால் கமல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டத்தில் சம நடிகர்கள் போட்டியிலும் தலைவரின் மார்க்கெட் மங்கிடாமல் 40 வருடங்களுக்கு மேலாக அவரை தலையில் தூக்கி வைத்து ஓடிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்தான் மிக மிக முக்கியம்.
கலைப்புலி தாணு அவருக்கு பைரவி படத்தின் போது இதை அளித்தாலும் அது அப்போது ஒரு பட்டம் என்ற அளவிலேயே இருந்தது. பிறகு மக்களாக அவருக்கு விரும்பி அதை அவருக்கு ஒரு அந்தஸ்தாக அளித்தார்கள்.

தனது வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகளை குவித்து பெற்ற அந்தஸ்து அது.
வெறும் பட வெற்றிகளால் மூலம் கட்டப்பட்டதல்ல இந்த சூப்பர் ஸ்டார் சிம்மாசனம்.

அவரது பல்வேறு நற்பண்புகளால் கட்டப்பட்டது அவரது நடிப்புக்காக அவரது ரசிகர்களாக ஆனவர்களைவிட அவரது குணத்துக்காக ரசிகர்கள் ஆனவர்கள் நாங்கள் தான் இங்கு நிறைய பேர் சிறு குழந்தையும் சொல்லும் அதை,

#Annaatthe
வெற்றி, பொறுமை, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, தன்னிலும் எளியவரிடம் பரிவு காட்டுவது, ஈகை, துணிவு, கொடை, எளிமை, அடக்கம், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருத்தல், பக்தி, குடும்ப நலன், தேசப்பற்று, தெய்வபக்தி இப்படி பட்ட பல நற்குணங்களால் கட்டப்பட்டுள்ள எங்கள் தலைவரின் சிம்மாசனம் அது.
மேற்கூறிய ஏதாவது ஒரு குணம் இருக்குமா இப்போது உள்ள நடிகர்களிடம் ?

வணிக வெற்றிக்காக வழங்கப்படும் பட்டம் என்றே வைத்துக்கொண்டாலும் இன்னும் என் தலைவரின் வியாபாரத்தை முந்தியது யார் ?

இருக்கிற பட்டம் வேண்டாம் என்றால் வேறு ஏதாவது ஒரு பட்டத்தை வைத்து கொள்ளலாம்.

#Annaatthe
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று அடம்பிடிப்பது அழகல்ல,

சூப்பர் ஸ்டார் பட்டத்தை எங்களை மீறி யாரும் யாருக்கும் வாரி வழங்கிட முடியாது,

நடிகர்கள் நினைக்கவில்லை பல ரசிகர்கள் அப்படி நினைக்கிறார்கள்

எங்கள் தலைவர் போல் அனைத்து நடிகர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம்.
சூப்பர் ஸ்டாரின் ரசிர்கர்களல்லவா நாங்கள் அவரது குணங்களின் தாக்கம் எங்களிடம் சிறிதாவது இருக்காதா என்ன?

பட்டங்களால் எவரும் பெருமையடையவும்,பெரியலாகவும் முடியாது ஒருவரின் பிரபலம்,மதிப்பு என்பது அவர் நடந்து கொள்ளும் முறையில் தான் உள்ளதே தவிர,சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களால் அல்ல.
மக்கள் திலகம் என்றால் அது எம் ஜி ஆர்,
சூப்பர் ஸ்டார் என்றால் அது தலைவர் ரஜினி,

அவ்வளவு தான் Dot.

நன்றி வணக்கம் 🙏
#SSR
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR
#Annaatthe
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: