ஆச்சார்யார் கிருபளானியை நாம் நினைவுகூற வேண்டிய நேரம் இது.இந்திய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முதலில் கொண்டு வந்தது கிருபளானிதான்.1963 ல் சீனப்போரில் இந்தியா தோற்றதை மையமாக வைத்து நேரு தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கொண்டு வந்தார்.காங்கிரஸ் என்கிற 1/17
வலுவான இயக்கத்தின் முன் இது தோற்றது,ஆனால் இந்தியர்களின் மனதை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது கிருபளானிதான்.

அதுமட்டுமல்ல 1962 ல் நடந்த இந்திய தேர்தலின் போதே கிருஷ்ணன் மேனனை எதிர்த்து பம்பாயில் பொது வேட்பாளராக நின்றார் கிருபளானி.அதை கம்யூனிஸ்டுகளை தவிர்த்து அனைத்து 2/17
கட்சிகளும் ஆதரித்தன.ஒரே காரணம்தான்,பாதுகாப்புதுறை அமைச்சர் மேனன் கம்யூனிஸ்ட்டுகளின் கைகூலி,அவர் நேருவின் அணுக்கனாகி நேருவையும்,இந்தியாவையும்
கெடுக்கிறார் என்பதுதான் அவரது பார்வை.

இவர் மட்டுமல்ல ராஜாஜி,ஜெய்பிரகாஷ் நாராயணன்,ஜென்ட்ரல் கரியப்பா,அப்போதைய ராணுவ தளபதி திம்மய்யா 3/17
என எல்லோருக்குமே இதே நிலைப்பாடுதான்.ராஜாஜி சொன்னார் கிருஷ்ணன் மேனன் வென்றால் இந்திய கம்யூனிட்டுகளுக்கு ஒரு துருப்புச்சீட்டு,ஆனால் சீனாவுக்கோ இந்தியாவில் இரண்டு துருப்புச் சீட்டு என்று.ஜெய்பிரகாஷ் நாராயணனும் மேனன் வென்றால் அதை கம்யூனிஸ்ட்டின் வெற்றியாகத்தான் பார்க்க 4/17
முடியும் என்றார்.

இறுதியாக,கிருபளானியே சொன்னார்.அதாவது, கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து மேனன் ஒரு அறிக்கை கொடுத்து,நான் கம்யூனிஸ்ட் ஆதரவாளன் இல்லையென்று சொல்லட்டும்.நான் இப்போதே போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றார்.கடைசியில் 1962 தேர்தலில் காங்கிரஸ்ஸின் அமைப்பு 5/17
பலமும்,நேருவின் ஆளுமையும் மேனனை வெற்றி பெற வைத்தது.தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே முட்டிக் கொண்டிருந்த சீனா போரைத் தொடுத்தது.

நாளுக்கு நாள் சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.வட இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட் கிருஷ்ணன் மேனனை பதவியில் இருந்து நீக்கச் சொல்லி மக்கள் கிளர்ச்சி 6/17
செய்தார்கள்.இந்தியாவின் அபாய கட்டத்தில் அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கக்கூடாது என்று பல தலைவர்கள் வெகுண்டெழுந்தார்கள்.ஆனால் தன் நம்பகமான நண்பனை நேரு காத்தார்.கடைசியில் காங்கிரஸ்ஸின் பார்லிமென்டரி குழு நேருவையே ராஜினாமா செய்யச் சொல்லும் அளவுக்கு போகலாம் என பிரச்சனை 7/17
வந்து நின்றது.

ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தொடங்கி பலர் நேருவுக்கு சொன்னது கிருஷ்ணன் மேனனை நீக்குங்கள் என்றுதான்.கடைசியில் ஆயிரக்கணக்கான வீரர்களை எல்லையில் பலியாகக் கொடுத்து,சீனாவிடம் பலரை சிறையாகக் கொடுத்து,
1962 நவம்பர் 20 ல் அஸ்லாம் சமவெளிகளுக்குள் சீனப்படை 8/17
புகுந்துவிட்டது.அதன் பின்னர்தான் கிருஷ்ணன் மேனனை நீக்கினார் நேரு.தற்காலிகமாக பொறுப்பை நேரு எடுத்துக் கொண்டார் அப்போது.சண்டை நிறுத்ததிற்கு கொண்டு வருவதற்கு முன்பு பல இடங்களில் தோல்வியை தழுவ வேண்டியிருந்தது.

நெஞ்சுறுதிமிக்க படை இருந்தது.ஆனால்,அன்றைய நிலையில் நாங்கள் போரை 9/17
விரும்பவில்லை என்று பேசிச்பேசி ராணுவ பலத்தை,ஆயுத பலத்தை பெருக்காமல் விட்டுவிட்டோம் என்கிறார் ஜென்ட்ரல் கரியப்பா.இறுதியில் கிருஷ்ணன் மேனனை வெளியே தள்ளி Y.P.சவான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனார்.தாப்பரை வெளியே தள்ளி ஜென்ட்ரல் சௌத்திரி சேனாதிபதி ஆனார்.இதன் பின்னால்தான் 1962ல் 10/17
சீனா தன் படைகளை பின் வாங்கியது.

இதில் மிக முக்கியமானது,அமெரிக்காவிடம் உதவி கேட்டு கென்னடிக்கு கடிதம் எழுதினார் நேரு.அதற்கு சம்மதித்து உதவியும் செய்தது அமெரிக்கா.நமக்கு நண்பன் என்று சொல்லப்பட்ட சோவியத்தோ போரில் நடுநிலை வகித்தது,ஆனால் அமெரிக்காவும்,பிரிட்டனும் அன்று 11/17
ஆயுதங்கள் கொடுத்து உதவின.இதன் பின்னால்தான் சீனா பின் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை நேரு கொடுக்க வேண்டியிருந்தது.ஆனால் இன்று நரேந்திர மோடி உலக நாடுகளிடமிருந்தே பாகிஸ்தானை தள்ளி 12/17
வைத்துவிட்டார்.அப்படியானால் இத்தனை காலம் காங்கிரஸ்ஸை எப்படியெல்லாம் மழுங்கடித்து,இந்தியாவையே கம்யூனிஸ அடிமை தேசமாக வைத்திருந்திருக்கிறார்கள்? சீன கம்யூனிஸ்ட்டுடன் ஒப்பந்தம் போடுகிற அளவுக்கு காங்கிரஸ் கட்சி சென்றுள்ளது என்றால் அது சொல்ல வருகிற செய்திதான் என்ன இந்தியாவுக்கு? 13/17
அன்று கிருபளானி,ஜெய்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் சோஷியலிஸம்தான் பேசினார்கள்.ஆனால் ரஷ்ய,சீன கொத்தடிமைகளாக இல்லை.நேர்மையான உளத்தூய்மை கொண்ட இந்தியனாக இருந்தார்கள்.ரஷ்ய பத்திரிக்கைகள் அன்று ராஜாஜி,கிருபளானி,JP யை பழித்து எழுதின.இத்தனை காலம் இவர்கள் இங்கே புறக்கணிக்கப்பட 14/17
காரணமே இடதுசாரிய அறிவுஜீவிகள் என்ற கைகூலிகள்தான் காரணம்.

நான் 2012 ல் இருந்து தொடர்ச்சியாக கவனிக்கிறேன் எல்லா வருடமும் ஆச்சார்யர் கிருபளானி,லோகியா போன்றவர்களை நினைவுகூர்ந்து, இவர்கள் சாதி-சமூகம்-மதம்-கட்சி என்கிற எல்லைகளின் தடைகளைத் தாண்டிய தலைவர்கள் என்பதை விடாமல் 15/17
நரேந்திர மோடிதான் பேசி வருகிறார்.

நான் தெளிவாக ஒரு புள்ளியில் இருக்கிறேன்.அது கண்ணை மூடிக்கொண்டு மோடியை நம்புவதுதான்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை இதை விட தகுதி வாய்ந்த மாற்றே கிடையாது.இதை எதிர்த்து பேசுகிறேன் என்று பேசுபவனை கவனியுங்கள் அதில் ஒருவன் கூட தேசபக்தனாக இருக்க 16/17
வாய்ப்பே இல்லை.ஹிந்து,இந்தியா,பண்பாடு இவற்றின் ஒட்டு மொத்த விரோதி இயல்பாகவே மோடி விரோதியாக இருப்பான்.

********************************
நன்றி : Sundar Raja Cholan
******************************** 17/17
You can follow @usraju1965.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: