மோடி வெட்டியாக ஊர் சுற்றுகின்றார், தேவையின்றி அமெரிக்கா கிழக்காசியா பறக்கின்றார் என சொல்லிகொண்டிருந்த கோஷ்டிகள் செவிட்டில் செருப்படி விழும் நேரமிது

இந்தியாவுக்கு ஆதரவாக ஜப்பான் முதல் வியட்நாம் என பல நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன, தைவான் இந்தியாவினை தலைக்கு மேல் வைத்து
கொண்டாடுகின்றது, சீனாவுக்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை

சீன முறுகலை தொடர்ந்து முன்பே மோடி செய்துவைத்த பலத்த உலக முன்னேற்பாடுகள் கைகொடுக்கின்றன, அமெரிக்காவுடன் செய்து கொண்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் படி இந்தியா அமெரிக்க தளங்களை அவசரத்துக்கு பாவிக்கலாம்

இதனால் நாளை சீனாவுடன் யுத்தம்
வந்தால் கிழக்காசியா எங்கும் அதாவது பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான் இது போக ஆங்காங்கே அந்நாடு நிறுவியிருக்கும் ஏகபட்ட நிலைகளில் இருந்து சீனாவினை நொறுக்கி போடலாம்

டிரம்ப் ஏன் குஜராத் வந்தார், இவர் ஏன் அமெரிக்கா போனார் என்ற கேள்வி அது நேற்று சீன எல்லையில் மிக அழகாக விடை அளித்தது
ஆம், இரவிலும் தெளிவாக ஊடுருவலை கண்காணித்து தேவையெனில் இலக்கு தவறாமல் ஏவுகனை வீசும்
அமெரிக்க தயாரிப்பான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை நேற்று களமிறக்கிவிட்டது இந்தியா.

பெரிய அளவில் வெடிபொருளை எடுத்து செல்லுதல், ரேடார் நுட்பம், எதிரி ஏவுகனையால் தாக்க முடியா வகையில் பாதுகாப்பு,
எல்லா காலநிலையிலும் செயலாற்றுதல் என பல நுட்பங்களை கொண்டது அப்பாச்சி, சுருக்கமாக சொன்னால் பறக்கும் டாங்கி ரகம்

மகா திறன் வாய்ந்த அந்த அப்பாச்சி ரகம் சமீபத்தில் இங்கே கொண்டுவரபட்டது , மோடியின் முயற்சி அது

மோடி தனக்கு பறக்க‌ இத்தாலியில் இருந்து அகஸ்டா ஹெலிகாப்டர் வாங்கவில்லை
என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

இன்னும் ஏகபட்ட தகவல்கள் வருகின்றன, பாகிஸ்தானின் பலுஸ்சிஸ்தான் ஊடாக செல்லும் சீனாவின் முக்கிய சாலைக்கு பலுசிஸ்தான் பக்கம் எதிர்ப்பு வலுக்கின்றது, இது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சி

கல்வான் பள்ளதாக்கில் விடாபிடியாக நிற்கும் இந்தியாவின் நிலைப்பாட்டோடு
பலுசிஸ்தான் விவகாரத்தை பொருத்தி பார்க்கும் சீனா தலைகுனிகின்றது

இது புதிய இந்தியா என அஞ்சும் சீனா தயங்குகின்றது, இந்நிலையில் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டோம் என போர் அறிவிப்பினை செய்திருக்கின்றார் ராஜ்நாத் சிங்

ஆம்,ராணுவ பரிபாஷையில் அதற்கு போர் என்றே பொருள்,
சொல்லிவிட்டு இரு தினங்களில் ரஷ்யா செல்ல தயாராகின்றார் ராஜ்நாத் சிங்

மகா பதற்ற காலங்களில் இந்திய ராஜதந்திரி மாஸ்கோ சென்றால் விஷயம் ஒன்று தீரா போர் அல்லது இந்தியாவுக்கு சாதகமான முடிவு என்பது உலக அரங்கில் தெரிந்த விடயம்.

சிக்கலை உணரும் சீனா தன் ஜாகையினை கல்வான் பக்கம் இருந்து
ஹாங்காங் பக்கம் மாற்றுகின்றது

ஆம் தேசிய பாதுகாப்பு சட்டம் எனும் அதி முக்கிய சட்டத்தை ஹாங்காங் மேல் ஏவ போவதாக சொல்லிவிட்டது,அப்படி ஏவும் பட்சத்தில் ஹாங்காங்கின் தனி தன்மை ஒழிந்து அதன் எல்லா கட்டுப்பாடும் சீனாவுக்கு வரும்

இதனால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் கொந்தளித்து எழ
கவனத்தை ஹாங்காங் பக்கம் கொண்டு சென்றுவிட்டது சீனா

"நீ ஹாங்காங் போ,குவாம் போ, ஆனால் எங்கள் எல்லையில் நாங்கள் கடும் காவலாய் இருப்போம்" என நவீன அப்பாச்சி சகிதம் இன்னும் பல அதிமுக்கிய ஆயுதம் சகிதம் எல்லையில் நிற்கின்றது இந்தியா

அப்பாச்சி களமிறக்கபட்டு,இந்தியாவின் அதி முக்கிய படைகள்
லடாக்கில் குவிக்கபட்டு ராணுவத்துக்கும் சுதந்திரம் அளிக்கபட்ட நிலையில் பாகிஸ்தான் அரண்டு கிடக்கின்றது, சீனா தயங்கி நிற்கின்றது

6 வருடமாக மோடி உலகம் சுற்றி என்ன செய்திருக்கின்றார் என்றால் நாட்டுக்கு உலக அரங்கில் என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்திருக்கின்றார், இன்னமும் செய்வார்.
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: