அக்ரஹாரத்தின் வழியே ...ஆஷ் துரை அழைத்துச் சென்ற ஸ்ரீஜன கர்ப்பிணிப் பெண்...அதை எதிர்த்தாராம் வாஞ்சி..🙄

திராவிட ...கிறிஸ்துவ ஆதிக்கத்தால் திரிக்கப்பட்ட வரலாறு.. #n

வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள்.

ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ 1/22
ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை.

இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை.

பரப்பப்பட்டவை. அதில் 2/22
ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறிதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.

கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி 3/22
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி.

அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்...

இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்...
4/22
இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்!

கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு 5/22
ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?

இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை.

பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, 6/22
சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!

செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் 7/22
இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை.

1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி 8/22
என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க 9/22
வேண்டும். இது உடன்படிக்கை.

மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.

இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும்.

குற்றாலத்தில் 10/22
குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது.

இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் 11/22
கிடையாது.

அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் 12/22
புரிந்துகொள்ளலாம்.

இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும்.

மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், 13/22
கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி.
இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும்.

ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் 14/22
செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை.

அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை.

அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் 15/22
வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.

இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் 16/22
போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள்.

காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை.

1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன 17/22
பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை.

எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை.

செண்பகராமன் பிள்ளை என்ற மாவீரன் ஜெர்மனியின் ஹிட்லரைக் கலங்கடித்தவர். 18/22
நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க உந்து சக்தியாக இருந்தவர்.

ஜெய்ஹிந்த் கோஷம் கொடுத்த புண்ணியவான்.

அடிமை இந்தியாவில் என் உடல் அடக்கம் செய்யப் படக் கூடாது, என் உடலின் அஸ்தி கூட அங்கே விழக்கூடாது என்று சபதம் இட்ட வீரர்.

செண்பகராமன் இறந்து வெகு காலம் வரை அவரது 19/22
மனைவியால் பாதுகாக்கப்பட்டிருந்த அஸ்தி,...

இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடி பறந்த கப்பலில் எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றின் கரையில் சுதந்திர இந்தியாவில் தூவப்பட்டது என்பதைக் கேள்விப் படும்போது எவ்வளவு சிலிர்ப்பும் மரியாதையும் நமக்கு வரவேண்டும்?!
20/22
ஆனால்... சாதி வெறியின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமுதாயத்தில் செண்பகராமனின் வீரம் ஏன் கொண்டாடப் படாமல் போனது என்பது தெளிவாகத் தெரிகிறதே!

சுதந்திரம் பெற்ற பின்பு இப்படியெல்லாம் சாதிப் பிரிவினை பேசும் பொய் வரலாற்று பகிர்வுகளால் இன்று நாம் கண்ட பலன்,..

கிறிஸ்துவ 21/22
மயமாக்கலும், தாழ்த்தப் பட்ட இனம் என்று சொல்லிச் சொல்லி அவர்களை சர்ச்சுகளுக்கும்..மசூதிகளுக்கும்... பேரம் பேசும் திராவிட புரோக்கர்களின் ஆதிக்கமும்தான்...

வாழிய பாரதி மணித் திருநாடு!

செண்பகராமா ஜெய்ஹிந்த்!! 22/22
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: