மச்சம் பற்றிய மருத்துவ தகவல்கள்:உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள்.

'அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா' என்று வெற்றி பெறும் நண்பனைப்
பார்த்து சொல்கிறோம் தானே..

மச்சம் என்பது, நமது தோலில் உள்ள மெலனோசையிட்ஸ் என்ற நிற அணுக்கள் அதிகமாக சேர்ந்தால் வரும் புள்ளிகள் ஆகும்.
மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு, அல்லது பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது.
மச்சங்கள், சிறுவயதிலேயே (பிறவியிலிருந்து பதின்பருவம் வரை) தோன்றுபவை.மருத்துவத்தில், மச்சம், நீவஸ் (nevus) என்றழைக்கப்படுகிறது.
ஒரு மனிதனின் உடலில்,10-40 மச்சங்கள் வரை இருக்குமாம்.

கர்ப்பகாலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களுக்கு, மச்சம் மேலும் கருப்பாகவும், பெரிதாகவும் தோன்றலாம்.

மச்சங்கள் பெருமளவில் கேடு விளைவிப்பதில்லை. என்றாலும், மச்சம் வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும்.
மேலும், கைகளில் 20க்கும் மேலாகவோ, மொத்தமாக 50க்கும் மேலாகவோ, மச்சங்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம்.
Congenital Melanocytic Nevi என்ற ஒருவகை பிறவிமச்சம் உலகளவில் 1% குழந்தைகளுக்கு காணப்படுகிறது.
Cong. nevus போன்ற அரிதான மச்சங்கள் புற்றுநோயாகும் தன்மையும் உடையது.
மெலனோமா (Melanoma) என்பது மெலனோசைட்ஸ் என்ற நிறமி திசுக்களில் ஏற்படுகின்ற புற்றுநோயாகும்..
தோல் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தில் பெரும்பான்மையான (75%) பகுதியை (Malignant melanoma) கரும்புற்றுநோய் வகிக்கின்றது.
மச்சத்தில், ஏற்படும் சமச்சீரின்மை (asymmetry), ஒழுங்கற்ற விளிம்பு (irregular Borders), பல நிறம் (variegated color) புற்றுநோயைக் குறிக்கும்..
உடனே கவனிக்கவும்..
-பரவுகின்ற மச்சம்.
-புண்ணாகின்ற மச்சம்.
-அடிப்பாகம் தடிக்கும் மச்சம்.
-கறுத்துப்போகும் மச்சம்.
ஆண்களைவிட பெண்களே மெலனோமாவினால், அதிகளவு பாதிப்படைகின்றனர். பெண்களில் பொதுவாகப் பாதிப்படையும் பகுதி கால்கள் ஆகும்..
இதற்கான சிகிச்சை அறுவை மருத்துவம் ஆகும். கரும்புற்றுநோய் பரவியுள்ளதை (staging) வைத்துக் குணமடைவதைத் (prognosis) தீர்மானிக்கலாம்.
உலகளவில், மெலனோவினால், ஏறத்தாழ 48,000 இறப்புகள் நிகழ்கின்றன.
மச்சங்களை,அதிர்ஷ்டம் என்று மட்டுமே கருதாமல், சில சமயங்களில் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க..
🙏🙏🙏🙏
You can follow @DrMubarak_Mbbs.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: