ரஜினியும் டிவிட்டர் அரசியலும்!

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களை தாண்டிய வெளியுலகம் விசாலமானது. அதில் இதன் தாக்கம் ஒரளவிற்கே.

தன் சார்ந்த துறையில் மக்களால் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும் ரஜினி அவர்களுக்கு பிரதிபலனாக ஒன்றை செய்ய எத்தணித்து (1/10)
ஒரு முடிவை அறிவிக்கிறார். அது அரசியலுக்கு வருவதென்று. இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. அந்த அறிவிப்பையொட்டி அவர் தெளிவுபடுத்திய நிலைப்பாடு.

அது அரசியல் மாற்றம் வேண்டும் என்பது.

அடிப்படையை மாற்றுவது, அது மாறாமல் இங்கு எதுவும் மாறாது. வெறும் நானும் ரவுடி தான் (2/10)
என்று களத்திற்கு வந்து சில ஓட்டுக்களை பெறுவதால் எந்த பலனும் இல்லை. இங்கு தேவை மாற்றம்.

நமது குறிக்கோள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான தமிழகம். அதை அடைய அடிப்படை மாற்றமே இங்கு அவசியம்.

அதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார் ரஜினி. அதையொட்டி அவர் பேசிய உரையில் (3/10)
எழுச்சி ஏற்பட வேண்டும் என்று கோடிட்டு காட்டினார். ஏனென்றால் வெறும் பேச்சால் ஒன்றும் செய்துவிட முடியாது. செயலில் இறங்க வேண்டும்.

அனைவர் மனதிலும் இது நமது மாநிலம் இதை நாம் தான் முன்னெடுத்து செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் இது என் கடமை என்ற எண்ண ஓட்டம் ஏற்பட வேண்டும் (4/10)
அந்த ஓட்டமே அலையாகி சமூக எழுச்சியாக மாற்றமடையும். இதுதான் ரஜினி கூறுவது.

இதில் இருப்பது ஒன்றே ஒன்று தான். அது தன்னை கொண்டாடும் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை முடிந்தவரையில் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற ரஜினியின் எண்ணம் மட்டுமே.

இங்கு இதை சொல்வதற்கு காரணம் (5/10)
ரஜினிக்கு என் ஓட்டு கிடையாது என சிலர் பொங்குவது. உங்களுடைய ஓட்டு எந்த கட்சி கொள்கை பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு செலுத்தலாம் தடையேதுமில்லை.

ஆனால் இங்கு என் கேள்வி ரஜினிக்கு போட
முடியாது என கூறுவதற்கு சமுக நலன் சார்ந்த காரணம் ஏதாவது ஒன்று இருக்கிறதா?

இரண்டாவது ரஜினிக்கு (6/10)
எதிராக பிரச்சாரம் செய்வோம் என்ற அறைகூவல். ரஜினிக்கு எதிராக என்றால், அவர் கூறும் அரசியல் மாற்றத்திற்கு எதிராகவா? இல்லை ஆட்சிக்கு வரும் பட்சத்தில் படித்த பொறுப்புள்ள இளைஞனை முதல்வர் பதவியில் அமர்த்துவேன் என கூறிய நல்லெண்ணத்திற்கு எதிராகவா?

மேற்சொன்ன அனைத்து கேள்விகளுக்கும் (7/10)
சிலரின் பதில் ரசிக சண்டை என்றால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க முடியாது.

இதற்கு பின்னால் வெறும் சிலர் தன் நடிகர்களுக்காக அடித்து கொள்வது மட்டுமே இருக்கிறது என நினைக்கும் அளவிற்கு நாம் அரசியல் அறியாதவர்கள் அல்ல.

இது தன்னிச்சையானது என்பதை விட கட்டமைக்கப்படுகிறது என்பதே (8/10)
நிதர்சனம். அற்ப சண்டைகளுக்காக அரசியல் சமுக மாற்றத்தை விரும்பும், நிறுவ எத்தணிக்கும் ஒருவரை ஆதரிக்க மாட்டேன் என்பதற்கு பின்னால் இருப்பது எது என புரிந்தும் புரியாத மாதிரி நடித்தால் நம்மைவிட சிறந்த நடிகர்களான இன்றைய அரசியல்வாதிகளிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை (9/10)
பார்க்க வேண்டியதுதான்.

ரஜினிக்கு எதிராக கதறும் பெரும்பாலானோர் கிள்ளிவிடப்பட்ட குழந்தைகள் என புரிந்து கொள்வோம்.

கிள்ளிவிட்டவர்களுக்கு ரஜினியின் மேல் உள்ள பயத்தின் வெளிப்பாடே இது.

ஏனென்றால் அவர் ரஜினி! (10/10)

#தலைவர் @rajinikanth

#ரஜினிகூறும்அரசியல்மாற்றம்
You can follow @parthispeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: