செவிலியர் பிரிஸில்லா மரணத்தில் உள்ள மர்மம் என்ன?

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரிஸில்லா நேற்றிரவு உயிரிழந்தார். காவல்துறையில் இருந்து வந்த முதல்கட்ட தகவலில் அவர் கொரோனால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

(1/5)
இன்று காலை ”பிரிஸில்லாவுக்கு கொரோனா தொற்று இல்லை., அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்” என மருத்துவமனை தலைவர் ஜெயந்தி தெரிவித்தார். மேலும் அவரது உடலை அஞ்சலிக்காக பொது வெளியிலும் வைத்தார். செவிலியர்கள் பலர் பிரிஸில்லாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

(2/5)
பிரிஸில்லாவின் உடல் அஞ்சலியின்போது அங்குவந்த அவரது தம்பி ஆன்டுரூஸ், அவரது சகோதரியின் Case sheetஇல் கொரோனா பாசிடிவ் என்று எழுதப்பட்டிருந்த ஆவணங்களை காண்பித்தார். மேலும் அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

(3/5)
ஆன்டுரூஸின் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை தலைவர் ஜெயந்தியிடம் கேட்டபோது, "Case sheetஇல் யாராவது தவறாக எழுதியிருக்கலாம். ரிப்போர்ட்டில் நெகட்டிவ்தான் வந்துள்ளது” என்றார். Corona Suspect wardஇல்தான் பிரிஸில்லா இருந்ததாகவும் கூறினார்.

(4/5)
இப்படி காவல்துறை, மருத்துவமனை தலைவர், உறவினர் என மாற்றி மாற்றி வரும் தகவல்களால் இந்த விவகாரத்தில் குளறுபடி நீடிக்கிறது. செவிலியருக்கே இந்த நிலையா என்றால் மக்களின் நிலை என்ன?!

(5/5)
செவிலியர் பிரிஸில்லாவின் உடலை நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரும் ஊழியர்கள் முழு கவச உடை அணிந்திருந்தனர்.

@News18TamilNadu @sara_reports
You can follow @AnandAathiraa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: