சீனா இந்தியாவை எளிதில் அடக்கிவிடலாம் என தப்பு கணக்கு போட்டிருந்தது ஆனால் தற்போது சீனாவின் எதிர்ப்புகளை உதாசீனம் செய்துவிட்டு வழக்கம் போல எல்லையோரம் தனது பணிகளை தொடர்ந்து வருகிறது.

லடாக்கில் தார்புக் – ஷியோக் – தவ்லத் பெக் ஒல்டி வரை செல்லும் 285கிமீ நீளம் கொண்ட சாலையை
இந்தியா சமீபத்தில் கட்டி முடித்தது.
இதன்மூலம் இந்தியா எல்லை பகுதிகளுக்கு மிக விரைவாக தளவாடங்கள் மற்றும் வீரர்களை நகர்த்த முடியும்.
இந்த சாலை எல்.ஏ.சி க்கு நேராக சென்று காரகோரம் கணவாயில் முடிகிறது.

இத்தகைய பணிகளால் விரக்தி அடைந்துள்ள சீனா ஊடுருவல்களில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இந்தியா அசால்ட்டாக தனது பணிகளை தொடர்ந்து வருகிறது.

இனியும் 4,643கிமீ நீளம் கொண்ட 73 சாலைகளை கட்ட முடிவு செய்யப்பட்டு 2012 ஆண்டில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் 3417கிமீ நீளம் கொண்ட 61சாலைகளை கட்டமைக்க பணிகள் தொடங்கியது.
தற்போது இதில் 35 சாலைகள் கட்டி முடிக்கப்பட்டது.இந்த வருட முடிவில் 11சாலைகளின் பணி முடிவடையும் எனவும் 2022ம் ஆண்டு 61சாலைகளும் கட்டமைக்கப்படும் எனவும் தெரிகிறது.

இதை தவிர 14வியூக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
விமானப்படை தளங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, லடாக்கில் 3 அருணாச்சல பிரதேசத்தில் 6 என மொத்தத்தில் 9 விமானப்படை தளங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
You can follow @NiRa_twits.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: