படித்தேன். பிடித்தது. பகிர்கிறேன் உங்களுக்கும்

ஒரே தலைவலி. மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில்
இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.
அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி
2. சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!

என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!

அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன்.
டாக்டர் யோகா செய்து
3. கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.
அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட
4. சீட்டை வாங்கிக் கொண்டேன்.

ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப்
5. பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார்
6. அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன்.

அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை
7.என்றும் அவர் சொன்னார்.

பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.
சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம்
8.ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.

நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.
இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக்
9.காண்பிப்பது கூட இல்லை.
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்!
நாம் சிந்திப்போமா!!!?????
@wataboutery @Kishoreciyer1 @rspchary @MuraliAthreya @HelloNNewman other
You can follow @anexcommie.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: