Thread: மாவீரன் காடுவெட்டி குரு என்னும் ஆளுமை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன்-கல்யாணியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் குருநாதன் என்று அழைக்கப்படும் குரு. சொந்த ஊரான காடுவெட்டியை
1/n
#மாவீரன்காடுவெட்டியார் #MaaveeranGuruPMK
தன் பெயருடன் இணைத்துக்கொண்டதால் 'காடுவெட்டி குரு' என்று பெயர் வந்தது. இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை/கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1986-ல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் குரு, தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம்
2/n
கொடுக்கப்படவில்லை என்பதாலும், வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காகவும் எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் ஆகியோர் குருவை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். அவர், ராமதாஸின் நெருங்கிய உறவினரும்கூட.

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
3/n
படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பா.ம.க-வில் வளர்ந்தார்.

பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். 2001-இல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-இல்

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
4/n
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எளிமையாக இருந்துள்ளார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாற்று சமுதாய சமநிலையை கருத்தில் கொண்டு 7அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தார்.

5/n
நாடக காதலை கடுமையாக எதிர்த்ததால் காரணமாக பலரால் சாதி வெறியன் என முத்திரை குத்தப்பட்டவர். இருப்பினும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை அரணாக நின்று காத்தவர் என அரியலூர் மாவட்ட தலித் மக்களால் போற்றப்பட்டவர். தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர்.

6/n
குரு மீது போலீஸார் தவறான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிய நிலையில் பத்திரிகையாளர் ஒருவரின் அனுபவமே குருவின் நேர்மைக்கு சான்று. 19 வருடங்களுக்கு முன், காடுவெட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும், அதற்கு குருவே காரணம் என்றும் போலீஸ் தகவல் பரப்பியிருந்தது.
#MaaveeranGuruPMK
7/n
இதையடுத்து காடுவெட்டி ஊருக்குள் சென்று நேருக்கு நேர் சந்தித்து போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எடுத்துச் சொன்னார் அந்த பத்திரிகையாளர். கம்பீரமான சிரிப்போடு எழுந்து அந்த பத்திரிகையாளரின் தோளைத் தட்டிக்கொடுத்த குரு, ஒரு டூ வீலரும்

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
8/n
உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி சாராயம் காய்ச்சுவதைப் படம் எடுத்து வாருங்கள் பிறகு நான் பதில் சொல்கிறேன் என்றார். அந்தப் பத்திரிகையாளரும் பயம் அறியாமல் சாராயம் காய்ச்சும் பகுதிக்குச் சென்று ஆற்று ஓரத்தில் நீண்டதூரம் சாராயம் காய்ச்சுவதை படம் எடுத்துவந்தார்.

#MaaveeranGuruPMK

9/n
அதன் பின் குரு அந்த பத்திரிகையாளரிடம், “சாராயம் காய்ச்சுகின்றவர்களை பிடிச்சுட்டுப் போங்கனு நானே பல முறை போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா அவங்க மாமூலுக்கு ஆசைப்பட்டு என் மீது அழுக்கைப் பூசினார்கள்’’ என்ற குரு, இதோ வீட்டு எதிரில் உள்ள ஷெட்டில் இருப்பவர்கள் போலீஸ்தான் என்று

10/n
அவர்களை அழைத்தார். ஆனால் உண்மையிலே குற்றங்களை குறைக்க போலீஸ்போல செயல்படும் என் மீது தவறான தகவலைப் பரப்புகிறார்கள்” என்று சொன்ன குரு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொன்னார், ‘தம்பி, உண்மையிலயே திருடன் யாருன்னா அது போலீஸ்தான்’என்று.

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
11/n
திமுக ஆட்சிக்காலத்தில் பாமக கூட்டணியில் இருந்தது. அப்போது ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கு என்.எல்.சி, முயற்சித்தது. இதற்கு பாமக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது அதிகாரிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தபோது

#மாவீரன்காடுவெட்டியார்
12/n
“நீங்கள் பாமக தலைவர் ராமதாஸை பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார். அதன்படியே என்.எல்.சி, அதிகாரிகள் ராமதாஸை சந்தித்து விரிவாக்கத்தைப் பற்றி சொன்னபோது, “நீங்கள் காடு வெட்டி குருவைப் பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டார் ராமதாஸ். என்.எல்.சி.அதிகாரிகள் காடுவெட்டி குருவைச் சந்தித்தபோது

13/n
“எங்க மக்களையும் என் மண்ணையும் அழிக்க பார்க்கறீங்களா?” என்று கோபமாக பேசி அனுப்பிவிட்டார்.

முக்கிய வழக்குகள்:
29.12.1995-ம் ஆண்டில் அம்பலவர் கட்டளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினார்
#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
14/n
என்று கூறி, விக்கிரமங்கலம் போலீஸாரால் வழக்கு பதியப்பட்டது.

அதேபோல் 20.1.2005-ம் ஆண்டு தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய வீராணம் திட்டத்துக்கு எதிராகப் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்

15/n
6.1.2006 அன்று ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் "வெள்ளம்பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் சரிவர வழங்கப்படவில்லை" என அரசை விமர்சித்ததாக கூறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர் இரண்டுமுறை குண்டர் சட்டம் பாய்ந்து சிறை சென்றுள்ளார்.

16/n
15.7.2008 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு கைது செய்யப்பட்டார். 26.11.2008 அன்று ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் விலக்கப்பட்டது. 30.11.2008 அன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து குரு விடுதலை செய்யப்பட்டார்.

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்

17/n
6.1.2008 அன்று பா.ம.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோரைத் தவறாக பேசியதாக அரியலூர் போலீஸார் குரு மீது வழக்கு பதிவு செய்தனர்.

தமிழ் தேசிய கொள்கைகள் மீது அதீத ஆர்வம்

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்

18/n
கொண்டவரின் அலுவலக சந்திப்பு கூடத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இருப்பதை இன்றளவும் காணமுடிகிறது

நுரையீரல் தொற்று காரணமாக இரண்டு மாத காலமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார் 20/n
பின் சிகிச்சை பலனின்றி 25-05-2018 அன்று உயிரிழந்தார்.

குரு மறைவைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், காடுவெட்டி கிராமத்திலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கண்ணீர் உரையாற்றிய ராமதாஸ்.

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார் 21/n
ஜெ. குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும். வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் குரு பெயர் சூட்டப்படும். அந்த வளாகத்தில் குரு நடந்து வருவது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். 22/n
சட்டக்கல்லூரி வளாகத்திற்கு ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவரது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.18 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர்
#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்
23/n
கல்வி அறக்கட்டளை நிலத்தில் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

வெளியே அதிரடியான ஆளாகத் தெரிந்தாலும் முரட்டுக் குழந்தை அவர் என்கிறார்கள் காடுவெட்டி கிராமத்தில். குரு தன் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக வாழ்வின் இறுதிநாள் வரைப் போராடியுள்ளார்.

24/n
Sources: Internet
Images: Google

#MaaveeranGuruPMK
#மாவீரன்காடுவெட்டியார்

25/25

---- End of Thread ----
You can follow @iSathishKumarS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: