அவரவர் சாப்பிட்ட இலையை எடுத்துப்போடுவதில் எந்தச் சிக்கலும் இல்லையென்றாலும் உணவுவிடுதிக்குச் செல்வது வயிறை நிரப்ப மட்டுமே என்பதைத்தாண்டி ஒரு வசதி என்றாகிவிட்ட நிலையில் இலையை எடுத்துப்போடுவது சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்வது எல்லாம் ஹோட்டல் ஊழியர்களே செய்யவேண்டும் என்பது இயல்பே.
உட்கார இருக்கை கூடத் தர இயலாத கையேந்திக் கடைகளில் இத்தகைய வசதியை யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் 4 பேர் உண்பதற்கு 2000-3000 பில் வரும் இடங்களில் இதுபோன்ற வசதிகளை எதிர்பார்ப்பதில் தவறும் இல்லை.

உன் இலையை நீ எடுக்கமாட்டியா என்றால் அதற்கு வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாமே?
ஒரு ஹோட்டலுக்குச் செல்வதே விதவிதமாகச் சாப்பிட, அதற்கேற்ற வசதிகளை அனுபவிக்க என்று செல்லும்போது இலையை எடுத்தல் என்பது வசதிக்குறைவாகவே இருக்கும்.

இதில் எலைட் மனநிலை என்றெல்லாம் இல்லை. ஹோட்டல் போன்ற ஒரு சேவைத்துறையில் நாம் எதிர்பார்க்கும் அடிப்படை சேவைகள் இதெல்லாம்.
இதில் இலையை நாமே எடுத்துக்கொள்ள வலியுறுத்துவதற்கு ஒரு ஹோட்டல் நிர்வாகத்துக்கு உரிமை இருக்கிறது.

அங்கே செல்லாமல் தவிர்க்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. இதெல்லாம் சேவைத்துறையின் கூறுகள். நிற்க.

இதில் சாதி எங்கே வருகிறது தீண்டாமை எங்கே வருகிறது என்பதே கேள்வி.

இரு காரணங்கள் உண்டு.
1. அந்த ஹோட்டலில் இதற்கான ஆள் இல்லை. நேரம் இல்லை. அவரவர் இலையை அவரவரே எடுத்துச்சென்றுவிட்டால் அடுத்தவர் வந்து உட்காரும்போது யாரோ ஒருவர் வந்து துடைத்துவிட்டால் போதும். இது பல இடங்களில் நடக்கக்கூடியது. சம்பள மிச்சம் ஒரு காரணம்.

2. இதில் தான் சாதி தீண்டாமை எல்லாம் வருகிறது.
You can follow @BlitzkriegKK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: