வட மாநிலங்கள் வளம் மிகுந்தவை. Indo-Gangetic-Brahmaputra plain என அழைக்கப்படும் பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதி உலகிலேயே அதிக நீர் வளமும் நில வளமும் மிகுந்த ஒரு பகுதி.

உலகின் மிக உயரமான மலை தொடரில் இருந்து வரும் நதிகள் வருடம் முழுவதும் வற்றாத நீரையும், வளமான வண்டல் மண்ணையும்
அந்த பகுதியில் மிகுதியாக கொடுக்கின்றது.

விவசாய வளம் மட்டுமின்றி கனிம வளமும் நிரம்ப பெற்ற பகுதிகள் அவை.

தொப் (Doab) என அழைக்கப்படும் கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட பகுதி காலம் காலமாக செல்வ வளம் நிறைந்த பகுதியாகும். அதனாலே 2000 ஆண்டுகளாக அந்த doab பகுதியை சேர்ந்த
பேரரசுகள் இந்திய துணைக்கண்டத்தை கோலோச்சி வருகின்றன. டெல்லி இந்திய துணைகண்ட தலைநகராக வேறு வேறு பெயர்களில் காலம் காலமாக விளங்கிவர காரணம் அதுவே.

இந்த வட இந்திய பகுதிகளை ஒப்ப்பிடும்போது தென்னிந்திய பகுதிகள் மிக குறைவான வளம் கொண்டவை. மேற்கு கடற்கரை பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள்
வறண்ட பீடபூமி பகுதிகளாகும். காவேரி, கிருஷ்ணா, கோதாவரி கழிமுகம் தவிர்த்து வளமான வண்டல் மண் பிரதேசங்கள் இங்கு இல்லை. கனிம வளங்களும் மிக குறைவே.

தென்னிந்திய நதிகள் பருவ கால நதிகள். வருடத்தில் 4 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே நீர் வரும். மழையும் மிக குறைவு.
அதிலும் தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகள் மழை மறைவு பகுதிகள். அப்படி இருப்பினும், தமிழகம் விவசாய வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்க காரணம் என்ன?

தமிழகத்தின் சராசரி ஏக்கருக்கான பயிர் விளைச்சல் வட இந்திய மாநிலங்களை விட பன் மடங்கு அதிகம்.
சிந்து சமவெளியில் அமைந்த, வளமான விவசாய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானவிற்கு ஈடாக வறண்ட மாநிலமான தமிழகம் விவசாயம் செய்ய காரணம் என்ன?

வளமான வடக்கில் இருந்து வறண்ட தெற்கிற்கு, கூலி வேலை செய்ய இளைஞர்கள் படையெடுத்து வருவது எதனால்?
தமிழக இளைஞர்கள், நாடோடிகள் போல, புலம் பெயர்ந்து வட மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று, ஊரடங்கு காலத்தில், ஆயிரக்கணக்கான மயில்கள் நடை பயணமாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருக்க என்ன காரணம்?

1950களில் இந்தியாவின் ஏழை மாநிலமாக இருந்த மதராஸ், 2010ல் இந்தியாவின்
முன்னேறிய தமிழகமாக மாறியது எதனால்?

1950ல் மும்பைக்கு கூலி வேலைக்கு சென்ற தமிழர்கள், 2000களில் Silicon Valleyக்கு பொறியியல் வேலைக்கு லட்சம் லட்சமாக செல்வது எதனால்? அதிலும் பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களும் மேலை நாட்டு வேலை வாய்ப்பை அடையும் அளவு முன்னேறியது எதனால்?
இது போன்ற முன்னேற்றங்கள் பிற பகுதிகளில் வராமல், தமிழகத்தில் வர காரணம் என்ன?

இவற்றிற்கான விடையே இன்றய தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் சக்தியாக விளங்கும்.

இன்றைய இளைஞர்கள் இவற்றிற்கான விடைகளை தேடி உணர்வதும், அவர்களை உணரச்செய்வதுமே நமது நாளைய அரசியலாக இருக்க முடியும்.
கடந்த 50 ஆண்டு முன்னேற்றம் அடுத்த 50 ஆண்டுகள் தொடர அந்த தேடலை இளைஞர்கள் மத்தியில் விதைக்க வேண்டியது தலைவர்களின் கடமையாகும்.

#திராவிடத்தால்_வாழ்கிறோம்
You can follow @NeoDravidam.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: