தமிழகத்தில் தொழில்முனைவோர் என்றால் மரியாதையை விட ஒருவித சந்தேகமும், வெறுப்பும், சங்கோஜமுமே மேலோங்கி உள்ளது.

இந்தக் கரையிலிருந்து அக்கரைக்குச் சென்றவன் என்பதாலும், நிதர்சனத்தை அறிவதில் அக்கறை உள்ளவர்களுக்காகவும் ஒரு பதிவு.

#விகடன் விடயமும் இதற்கு ஒரு உந்து.
தொழில்முனைவோர் மேலான எதிர்மறை அவதானிப்புகள் செல்வம் (Capital), செல்வாக்கு (Social and political capital) உடைய அல்லது அடைய விழைந்து அகங்காரத்தையும், அதிகாரத்தையும் செலுத்தி வளர்ந்த/வீழ்ந்த குழுமங்களை மட்டுமே நமது அப்பாக்கள் அனுபவித்ததும்...
தொழில் செய்வோரெல்லாம் அயோக்கியர் என்ற அரசுகளின் நிலைபாடுமே முக்கிய காரணங்கள்.
தொழில் துவங்குபவர் யமகாதகர் என்றும், அது நலிவடைந்தால் மூடுபவர் கையாலாகாதவர் என்றுமே சமூகமும், அரசின் சட்டங்களும் அவர்களை அணுகின. இந்த நிலை மெதுவாகவே மாறி வருகிறது.
உண்மையில் உற்பத்தி மற்றும் அறிவுசார் தொழில் துவங்குபவர்கள் துறைசார்ந்த வல்லுநர்கள். அவர்களுக்கு social/economic achievement என்பதைக் காட்டிலும், better tech/better approach என்பதாலேயே தொழில்முனைவிற்கான முடிவிற்கு வருகிறார்கள்.
இவ்வாறான MSME & startups தொண்ணூறு சதவிகிதம் தோல்வியே அடைகின்றன. Understanding market, marketing, deal making, capital raising, cash flow management என்று குறுகிய காலத்தில் அவர்கள் ஒரு ஆர்க்கெஸ்றா maestro ஆக மாறவேண்டும்.
நுட்பமான அறிவும், பல்லாண்டுக்கான திட்டமிடலும், Data கிடைக்கப்பெறாத நேரங்களில் expertise-சார்ந்த guess/estimate based முடிவுகளும் எடுக்க வேண்டும். 70% சரியான முடிவுகள் எடுத்தால்தான் வெற்றி. நடுவில் வரதா புயலோ, கொரொனாவோ வந்தால் நிலைமை சங்கடம் தான்.
இதில் ரிஸ்க் என்ற கூறு மக்களுக்கு பிடிபடுவது இல்லை. முதல் ஆறு ஏழு வருடங்களுக்கு market salaryயைக் காட்டிலும் 70%-90% குறைவாகவே அறிவுசார் தொழில்முனைவோர் ஈட்டுகின்றனர்.
Reducing savings/increased borrowings என தொழிலிலும், தனிப்பட்ட வாழ்விலும் பல வருடங்கள் balance செய்துகொண்டே தொழிலாளிகளிடம் confidence/clarity என உயரிய கூறுகளைத் தப்பாமல் பின்பற்றவேண்டும்.
Market/sales uncertainties என்பவை தினசரி நிகழ்வுகள். இவற்றை 7 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் வேறோருவர் உங்களை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்துள்ளார் என் அர்த்தம் கொள்ளுங்கள்.
ஞாயிறு காலை 5 மணிக்கு அவர் excel sheet அனுப்புகிறார் என்றால் அவர் sadistic workaholic என்பதல்ல அர்த்தம். It means one more thing kept him or her up at night.
கொரோனா போன்ற நொடிவு காலங்களில் கருணையே இன்றி வீட்டுக்கு அனுப்புகிறார்களே? அது பற்றி?
We are all in the same storm. We are not in the same boat - இதை எங்கோ படித்தேன். சில நிறுவனங்களில் cash reserve நன்றாக இருக்கும். பலவற்றில் அப்படி இல்லை. Age of business, market cycle, past decisions என பல விஷயங்களை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.
சரியா decide பண்ணலென்னா நீயெல்லாம் என்னடா மொதலாளி என்பவர்களுக்கு - அகலக்கால் வைத்து தேவைக்கு மேல் investment வாங்கிய startup நிறுவனங்களே இன்று மூடும் அபாயமின்றி உள்ளன. இப்போது இதற்கு என்ன சொல்வீர்கள்? Decisions are counter-intuitive. No one can predict future beyond a point.
உங்களை வீட்டுக்கு அனுப்புவதும், நிறுவனத்திற்கு diabetes மோசமாகி கால்களை அகற்றுவதும் ஒன்றுதான். Experts fired = expertise fired. It sets the org back by years. மீண்டும் மீண்டு வர மனதில் தெம்பும், தெளிவும், நிறைய luckம் தேவை. கூடுதலாக, நம்பகத்தன்மையை மறுநிலைநாட்டவேண்டும் - தனியாக!
Should I save the boat with leaks in the storm or should I keep all the people and surely sink? Should I keep underperformers and distribute suffering or keep the best and don’t cut pay for them?
இவற்றிற்கான பதில் ஒரு கேள்வி - மார்க்கெட் எப்போது சரியாகும்? யாருக்கு சார் தெரியும்! இன்னும் மோசமானால் அப்போது - ச்ச, மொதல்லயே இன்னும் கொஞ்சம் emotional ஆகாம இருந்திருந்தா, we could have survived for another 6 months என்று தோன்றும். If it is too late the worst affected யாரு?
அடுத்த 12 மாதங்கள் நீங்கள் வேலை இல்லையென்றால் தெருவுக்கு வரமாட்டீர்கள் என்றால் நீங்கள் உங்கள் முதலாளியை விட நல்ல நிலையில் இருக்க வாய்ப்பு அதிகம்.
பத்து வருட உழைப்பு, 10% மார்க்கெட் salary, மனச்சோர்வு, legal formalities என போரில் தோற்று அடிபட்டு வீடு திரும்பும் மாவீரனுக்கான எல்லா இன்னல்களையும் எதிர் நோக்கும் தொழில்முனைவோர் இவ்வளவு இக்கட்டுக்கு இடையே இம்மி பிசகாத சரியான முடிவுகள் மட்டுமே எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
Business owners have foresight but they’re not astrologers. They make good decisions but aren’t immune to uncertainties. They are resilient but not shielded from stress. They may have money but have the responsibility to plan for an even worse future.
சம்பளக்காரர்கள் மிஞ்சிப் போனால் ஒருவருடத்திற்கு திட்டமிடப் பழகியிருக்கிறார்கள். தொழில்முனைவோரின் தொலைநோக்குத் திட்டமிடலும், அதனால் அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளும் உங்களுக்கு ஒப்பிவருவதில்லை.
நிச்சயமற்ற காலங்களில் அனுமானத்தின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் “scenario-led decisions” உங்களுக்கு பாதகமாகவே படுவதற்காக வாய்ப்பு உண்டு. You must realise that you & your company owner are conditioned to think differently. Your horizons are different. Your stakes are different.
பிகு : இந்தப் பதிவு சிறு, குறு, மத்தியனிலை அறிவு மற்றும் உற்பத்திசார் நிறுவனங்களை மனதிற்கொண்டு எழுதியது. I believe in graceful, kind and least damaging severances in the cases of layoffs.
You can follow @CussMaulum.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: