Thread!

#அண்ணா

போப்பாண்டவரை சந்திக்க 5நிமிடம் ஒதுக்கப்பட்டது பேரறிஞர் அண்ணாவுக்கு

"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ்நாட்டின் முதல்வர் நான்" என ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி 5நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார்

(1/8)
போப்பாண்டவர் சொன்னார், "அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.

அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

(2/8)
"என்ன கேட்டாலும் தருவீர்களா?" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.

"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்ததை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கு போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்"

(3/8)
"உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. "சரி" என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

(4/8)
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு சென்றார்.

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காக போராடினேனோ அந்த கோவா மக்களே"

(5/8)
"என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே?" என்று கேட்டார்.

"அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா.

(6/8)
நாஞ்சிலாரை ரானடேவுக்கு அறிமுகப்படுத்தியப்பின், "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார்.

(7/8)
அன்னை இந்திரா அவர்கள் ரானடேவை நாஞ்சிலாருடன் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்

அண்ணா துயில்கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டார் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தன் பேரறிஞர் அண்ணா

(8/8)
இந்த ரானடே அவர்கள் வலதுசாரி சிந்தனை கொண்டவர். ஆனாலும் அவரை காப்பாற்ற எந்த பார்ப்பானும் முயற்ச்சிக்கவில்லை. விடுதலையை வாங்கி கொடுத்தவர் திராவிட பேரரக்கன் பேரறிஞர் அண்ணா 😍😍😂
You can follow @Surya_BornToWin.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: