#Pudhupettai படத்துல அப்படி என்ன இருக்குனு கேட்பவர்களுக்கு இந்த டிவீட் சமர்ப்பணம் 🤗

பெரிய த்ரெட் போட்றேன் புடிச்சா சப்போர்ட் பன்னுங்க 👍🏻

#Dhanush | #JagameThandiram
தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணியில் வந்த மிகப்பெரிய கேங்ஸ்டார் படம்தான் புதுப்பேட்டை. படம் வந்து 15 வருடத்துக்கு கிட்ட ஆனாலும் இப்ப பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும் . இந்த படத்துக்கு மொதல்ல "ஓரு நாள் ஒரு கனவு " தான் டைட்டில் வெச்சாங்க பிறகு பல பிரச்சன காரணமாக மாத்திட்டாங்க.
தனுஷ் - இந்த படத்துல இவருக்கு பதிலா வேற யாராச்சும் இப்படி நடிச்சுருபாங்கலானு தெரியல. பள்ளி படிக்கும் ஓர் மாணவனின் தாயை கொன்றது போல தன்னையும் தன் தந்தை கொன்று விடுவாரோ என பயந்து ஓடிச்செல்லும் தனுஷ் எப்படி கேங்ஸ்டார் ஆகிறார் என்பது தான் கதை. தனுஷ் கொக்கி குமாரா வாழ்ந்துருப்பாரு.
படத்தோட டைட்டில் கார்டுல
"Survival Of The Fittest " அப்டினா (உயிர் வாழ தகுதி உள்ளவை மட்டுமே உயிர் வாழும் ) இந்த வார்த்தைகள் தான் படமே. படத்தின் திரைக்கதையும் இந்த வார்த்தைகள வெச்சு தான் நகரும். செல்வா படத்தோட தொடக்கத்துலயே Hint கொடுத்தராரு.
செல்வா -
திரைக்கதை பிண்ணி எடுத்துருப்பாரு இறுதி வரை படத்துல இருக்கற எல்லா கேரக்டரையும் மிக அருமையா காட்டிருப்பாரு

யுவன் -
படத்துக்கு உயிர் ஊட்றது அந்த பிண்ணனி இசை. முக்கியமா படத்துல வர பாடல்கள் படத்தோட மிக கச்சிதமாக பொருந்தும். அந்த கொக்கி குமார் பி.ஜி.எம் புல்லரிக்க வைக்கும்.
படத்தோட மிகப்பெரிய பலம் பால குமாரோட வசனங்கள். குறிப்பா கொக்கி குமார் பேசுர வசனங்கள் அவ்ளோ அற்புதமா இருக்கும்.
இந்த படத்துல சிவப்பு , பச்சை நிறத்த அதிகமா யூஸ் பன்னிருப்பாங்க.
இதுல பச்சை நிறம் SAFE Zone க்கும்
சிவப்பு நிறம் Danger Zone குறிக்கும்.
படம் முழுக்க இந்த நிறங்கள் குமாரோட செயல்களை பொருத்து அமையும்.
படம் தொடக்கத்துலயே கொக்கி குமார் பிண்ணாடி இருக்குற ஜெயில் சுவர்ல தன் வாழ்க்கையில வந்து போனவிங்க பெயர கிறுக்கி வெச்சுருப்பாரு ( செல்வி , சந்தானம் )
இந்த சீன்ல அன்புக்கு பக்கத்துல ஒரு காலி நாற்காலி இருக்கும் அதுக்கு நேரா கொக்கி குமார் இருப்பார் அப்பவே அன்புக்கு அடுத்து கொக்கி தான் அந்த இடத்துக்கு போவாருனு முன்னாடியே சொல்லாம சொல்லிருபாங்க.
இந்த சீனுல மூர்த்தி தம்பிய குமாரு ஒரே அடி நெஞ்சுல அடிச்சு கொன்றுவாரு. இந்த சீனுக்கு முன்னாடி கார்ல மூர்த்தி தம்பிக்கிட்ட இரும்பும் போது மருந்து சாப்டியானு கேட்பாரு அதுலயே அவருக்கு ஹெல்த் இஸு இருக்ன்றத சொல்லிருப்பாங்க.
அந்த சண்ட முடிஞ்சதும் கொக்குகுமார மணி காப்பாத்தி வண்டில ஏத்துனதும் குமாருக்கு பின்னாடி சூரியன் உதிக்கும்

இந்த சம்பவத்துக்கு பின்னாடி தான் குமார் பெரிய ரௌடி ஆவாரு
இந்த சீன்ல அந்த தெருவிளக்கு விட்டு விட்டு எரியும் இத கொக்கி குமாரோட மனநிலையோட ஒப்பிடலாம் ஏன்னா குமாரும் பதட்டமா இருப்பாரு
படத்துல பல இடங்களில் கேன்டில் 🕯️எரியிரத பாக்கலாம் இதுவும் ரௌடி வாழ்க்கையோட பொருந்தும். தன்ன உருக்கி தான் வெளிச்சத்த கொடுக்கும். அதுவும் இல்லாம ரொம்ப நேரம் எரியாது அதே மாரி தான் இவிங்க வாழ்க்கையும் எப்பவுமே டேஞ்சர்ல தான் இருக்கும்
இந்த சீன்ல கொக்கி குமாருக்கு பிண்ணாடி ஒரு Spark வரும்
இந்த சீன்ல இருந்து தான் குமாரு அன்பு இடத்துக்கு வருவாரு இந்த சீன்ல இருந்து தான் அரசியலையும் இறங்குவாரு .
கொக்கி குமார் தன்னோட அப்பாவ கொல பன்னும் போது மட்டும் அந்த காட்சிகள் BLACK and WHITE ல இருக்கும் இதுலயே தெரிஞ்சுக்குலாம்
பழிவாங்க போறாருனு.
செல்வி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பாட்டு வரும் அந்த பாட்டுல

" காலைல என்ன ஆகும்
அட கல்யாணம் யாருக்கு ஆகும் "

இந்த லிரிக்ஸுக்கு ஏத்த மாறியே காலைல குமாரு செல்விய கல்யாணம் பன்னிருவாரு.
இந்த படத்தோட ஆரம்பத்துல இருந்தே கொக்கி குமார் கழுத்துல ஒரு டாலர் இருக்கும்.
இதுல நல்லா பார்த்தா மூர்த்தி பாவம்-னு குமார் எழுதி வெச்சுருப்பாரு அதற்கு ஏற்ற மாதிரி க்ளைமாக்ஸ் ல மூர்த்தி னா அன்பு, தாய்மை , அப்படிங்கிற டயலாக் பேசுவாரு. மூர்த்தி கட்சிலயே இணஞ்சுருவாரு.
படத்தோட இடையிலயே தலைவர் கொக்கிகுமார நம்ம பக்கம் இழுத்துக்கலாம்னு மூர்த்தி கிட்ட சொல்லுவாரு. கடைசில அதுவே நடந்துரும்.
கடைசில குமார ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வரும்போது சிவப்பு நிறம் காட்டிருப்பாங்க இதுக்கு அர்த்தம் என்னனா இதோட குமார் வாழ்க்கை முடியல அடுத்த கட்டத்த நோக்கி போகப்போகுது #புதுப்பேட்டை2 வரும்னு செல்வா சொல்லாம சொல்லிருக்காரு.
இந்த படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும் போது இடையில தனுஷ் இந்த கதைக்கு சரியா வர மாட்டாருனு மீடியா முதற்கொண்டு கணிச்சாங்க ஆனா படம் ரிலீஸ் ஆனதும் #தனுஷ் தவிர வேற யாரும் இந்த கதாபாத்திரம் பன்ன முடியாதுனு பேச வெச்சாரு தலைவன் @dhanushkraja ❤️🙏🏻
படம் ரிலீஸ் ஆனதும் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாவும் பெரிசா ஒன்னும் பேசபடல ஆனால் 10 வருஷம் கழிச்சு அந்த படம் பேசபடுதுனா ஜீனியஸ் @selvaraghavanமட்டுமே சாத்தியம்.

புதுப்பேட்டை தமிழ்சினிமாவில் கொண்டாட தவறிய படம்

#புதுப்பேட்டை2 தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாட பட்ட படமாக அமையும்.
You can follow @its_MKP.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: