அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் தரத்தை விட குறைவாக இருக்கிறதா ?
ஆம்

ஏன்
தனியார் பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகையை விட அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கும் தொகை குறைவு

அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு செலவழிக்கப்படும் தொகை எவ்வள்வு
வருடத்திற்கு 1300.
மாதத்திற்கு 110 ரூபாய்

இந்த பணத்தில் அரசு கல்வி மட்டும் வழங்கவில்லை
சத்துணவு
முட்டை
புத்தகங்கள்
சீருடை
பாடப்புத்தகப்பை
அட்லஸ்
டிக்சினரி
மிதிவண்டி
பஸ்பாஸ்
சானிடரி நாப்கின்
லேப்டாப்
என்று அனைத்தும் இந்த 1300குள் அடக்கம்
இந்த அளவு குறைந்த செலவில்
எந்த தனியாராவது பள்ளி நடத்த முடியுமா
கண்டிப்பாக முடியாது

பிறகு அரசால் எப்படி முடிகிறது
அரசு ஆசிரியர்களின் கடின உழைப்பு தான்

அரசு ஆசிரியர்கள் தான்
அங்கு ஆசிரியர், ஸ்டோர் கீப்பர்,
மேலும் ஒரே ஆசிரியர்
ஒன்றிற்கு மேற்பட்ட வகுப்புகள் எடுக்க வேண்டும்
ஏனென்றால்
அரசு நிதி குறைவு

தனியார் பள்ளி போல் ஆசிரியர்கள் ஒரு வகுப்பிற்கு போதிக்கும் பணி மட்டும் செய்வதாக மாற்ற முடியாது
முடியும்
அதற்கு நிறைய ஆசிரியர்கள், நிறைய ஊழியர்கள் வேண்டும்
அதாவது இன்று ஒதுக்கப்பும் 1300ஐ விட அதிகம் ஒதுக்க வேண்டும்
அதற்கு நிதி இல்லை
ஆசிரியர்களின் சம்பளத்திற்கே நிதி சென்றால் மீதி எங்கு நிதி கிடைக்கும்
ஐயா
ஆசிரியர்களின் சம்பளமே இந்த 1300ல் இருந்து தான் வழங்கப்படுகிறது

அரசு பள்ளிகள் தனியார் பள்ளி போல் மாற என்ன செய்ய வேண்டும்
அதிக நிதி வேண்டும்

ஆசிரியர்கள் அதிகம் வேலை பார்த்தால் முடியுமா
முடியாது
ஏற்கனவே ஆசிரியர்கள் அதிக வேலை தான் பார்க்கிறார்கள்
இதற்கு மேலும் அவர்களால் பார்க்க முடியாது

ஆசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிறீர்கள்
ஆனால்
தனியார் பள்ளி அளவு தேர்ச்சி இல்லையே
காரணம் - அரசு பள்ளி, தனியார் பள்ளி நிதி ஒதுக்கீடு தானே தவிர ஆசிரியர்கள் குறைவாக வேலை செய்வது அல்ல
அரசு பள்ளி - ரிக்‌ஷா
தனியார் பள்ளி - ஆட்டோ

ரிக்‌ஷாவை விட ஆட்டோ சீக்கிரம் செல்கிறது
அதற்கு காரனம் ஆட்டோ ஓட்டுபவரின் திறமை என்று கூறுவது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ
அதே போன்ற முட்டாள் தனம் தான்
அரசு ஆசிரியர்கள் திறமை குறைவு, அல்லது வேலை குறைவாக செய்வதால் தான் அரசு பள்ளிகள் தனியார்
பள்ளி அளவு தேர்ச்சி இல்லை என்று கூறுவது

ரிக்‌ஷா ஓட்டுபவரின் ரிக்‌ஷாவில் அவரது பையன் ஏறினால் அந்த ரிக்‌ஷா ஆட்டோவை விட வேகமாக செல்லும் என்று கூறுவது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ
அதே போன்ற முட்டாள் தனம் தான்
அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு
பள்ளிகளின் தரம் உயரும் என்று கூறுவது

அரசு பள்ளி - அம்மா கேண்டீன்
தனியார் பள்ளி - ஐந்து நட்சத்திர ஹோட்டல்
அதாவது
அம்மா கேண்டினில் வேலை செய்ப்வர்களின் குடும்பம் அம்மா கேண்டினில் சாப்பிட்டால் அம்மா கேண்டின் தாஜ் ஹோட்டல் ஆகிவிடும் என்றூ கூறுவது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ
அதே போன்ற முட்டாள் தனம் தான்
அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு பள்ளிகளின் தரம் உயரும் என்று கூறுவது
You can follow @spinesurgeon.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: