🚩சிவசிதம்பரம்🚩

சிதம்பரம் நடராஜப் பெருமான் மே 13 இன்று மகாருத்ர மகாபிஷேகம்

Retweet

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மே .13-ம் தேதி புதன்கிழமை மகாபிஷேகமும், உலக அமைத்திகாகவும்,

(👇 இது சிதம்பரம் இல்லை)
கரோனா வைரஸ் நோயிலிருந்து விடுபடவும் வேண்டி மகாருத்ர யாகமும் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத
ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் மே .13-ம் தேதி புதன்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ,மார்கழி, மாசி, மாதங்களில்
ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும்
மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் என உ.வெங்கடேச தீட்சிதா் தெரிவித்தார்

சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் மே .13-ம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால்,தயிர், தேன்,
சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனர்.
முன்னதாக காலை உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து மந்த்ரக்ஷத்தை ,
லக்ஷாரச்னை நடைபெறும்.
யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ருத்ர கிரம அர்ச்சனை செய்து , தீபாராதனை நடைபெறும். மதியம் மஹாருத்ர
மகா ஹோமம் பின்னர் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
You can follow @Rudra_Virabadra.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: