1/ நிர்மலா சீத்தாராமன் மிகபெரும் பொருளாதார நலதிட்டங்களை அறிவித்திருக்கின்றார், நிச்சயம் நாட்டினை இக்கட்டான நேரத்தில் இருந்து மீட்கும் மிகபெரும் காரியமிது

பெட்ரோல் ஏன் அந்த விலைக்கு விற்றது? ஏன் அதை செய்யவில்லை? ஏன் இதை செய்யவில்லை என வழக்கமாக ஏக கேள்வி கேட்கும் யாரும் இந்த
2/ 20 லட்சம் கோடி இந்த நெருக்கடியான நேரத்தில் எப்படி வந்தது என ஒருவார்த்தையும் கேட்கவில்லை

வாழ்க அவர்களின் தேசபற்று

மோடி அரசு சிக்கனமாக இருந்தது, அவர்களுக்கு கலர்டிவி கொடுக்க தெரியாது, அம்மா உணவகம் அமைக்க தெரியாது, சமத்துவபுரம் அமைக்க தெரியாது, இலவசமாக மிக்ஸி கிரைண்டர்,
3/ ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலமெல்ல்லாம் கொடுக்க தெரியாது

அவர்களுக்கு நாட்டுக்காக திட்டமிட தெரியும், அவசர காலத்துக்கு நிதி சேர்க்க தெரியும், சேர்ந்திருக்கும் நிதியின் ஒரு பகுதியினை எப்பொழுது களமிறக்க வேண்டும் என்பதும் தெரியும்

இதோ மிக சரியாக 20 லட்சம் கோடி எடுத்து
4/ வீசிவிட்டார்கள், எப்பொழுது எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்தார்கள்

அமெரிக்கா சர்வ சக்திவாய்ந்த பொருளாதார நாடு, அரபு நாடுகள் எண்ணெய் விலை 0 க்கு விற்றாலும் இன்னும் ஈராண்டு தாங்குமளவு ரிசர்வ் வைத்துள்ளன‌

சீனாவிடம் குவிந்திருக்கும் பணம் அதிகம், சில ஆண்டுகள் தாக்குபிடிக்க
5/ முடியும், மகா முக்கியமாக 70 ஆண்டுகளாக ஒரே ஆட்சி

ஆனால் இந்திய அரசு சட்டென 20 லட்சம் கோடியினை எடுத்து வீசியிருப்பது உலக அரங்கில் உற்று நோக்கபடுகின்றது, எப்படி சட்டென எடுத்தார்கள்? அதுவும் மூன்றுமாதம் தொழில் முடங்கியிருக்கும் பொழுது எப்படி எடுத்தார்கள்?

ஆம், மிக சரியான முன்
6/ தயாரிப்பில் இருந்திருகின்றார்கள். முன் சேர்த்த நிதி நீண்ட காலங்களுகான நிதி எல்லாம் சேர்த்து களத்தில் இறக்கிவிட்டார்கள்

ஜி.எஸ்டி பற்றி பேசிய பொருளாதார நிபுணர்களையோ, பெட்ரோல் விலை ஏன் என கேட்ட அறிவு ஜீவிகளையோ இன்னும் பலரையோ இப்பொழுது காண முடியாது

மக்கள் பணம் மக்களுக்கே
7/ கொடுக்கபட்டிருக்கின்றது

உடல் இயங்க ரத்த சுழற்சி அவசியம், நாடு இயங்க பண சுழற்சி அவசியம். உடலுக்கு சிக்கல் வந்தால் எப்படி காப்பாற்ற ரத்த ஒட்டம் தடையின்றி செய்யவேண்டுமோ அப்படி தேசத்துக்கும் செய்திருக்கின்றது அரசு

இந்த ஏற்ப்பாட்டால் தொழில் உலகம் முடங்கி போகாது, ஆசுவாசம்
8/ கிடைக்கும். ஓரளவு சுழற்சி அதிகரிக்கும் அது தேசத்தை காக்கும்

நிர்மலா சீத்தாராமனின் ஒவ்வொரு வரிகளையும் கவனியுங்கள், எதெல்லாம் மகா முக்கிய துறைகளோ, எதை எல்லாம் காக்க வேண்டுமோ அதை எல்லாம் ஒன்று விடாமல் சரியாக காத்திருக்கின்றார்

மிகபெரும் நலதிட்டத்தை மிக அசாத்தியமான
9/ செயல்திட்டத்தை மிக இக்கட்டான நேரத்தில் செய்து தேசம் காத்திருக்கின்றார் மோடி

வாடிய பயர் கண்ட வயலை கண்டவுடன் நீர்பாய்சும் விவசாயி போல மிக சரியாக செய்திருக்கின்றது அரசு

இப்பொழுதும் ஆலமரத்தடியிலோ இல்லை மண்சுவரின் ஓரத்திலும் மல்லாக்க கிடந்து கட்டை பீடி இழுத்து கொண்டு இதனால்
10/ எனக்கென்ன என கேட்பான் அல்லவா?

அவன் திக, திமுக என தேச விரோத கட்சிக்காரனாக இருப்பான், அவனுக்கு இந்தியா நன்றாக இருப்பதோ உருப்படுவதோ ஒரு காலமும் பிடிக்காது

அவனிடம் பேசவே பேசாதீர்கள், பேசி ஒன்றும் ஆகபோவதில்லை.
You can follow @US1bV2botKD1dm4.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: