Thread .
இந்த poll வைத்ததற்கு காரணமே ஆண்கள் சமையல் செய்வதை தெரிந்து கொள்ள அல்ல , அதற்கு அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதை சொல்வதற்க்காக தான் ..
இந்தியாவில் பெண் அடிமைத்தனம் தொடங்குவதே சமையலில் தான் .. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற வழக்கு சொல்லின் அடிப்படையே https://twitter.com/Tweets_of_Fin/status/1259122619183501312">https://twitter.com/Tweets_of...
ஆணாதிக்கம்மும் ,பெண்கள் சமைக்கவே பிறந்தவர்கள் என்ற அதின் வெளிப்பாடும் தான் , நம் நாட்டில் தான் அதிகப்படியாக சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தோன்றலாம் ஆனால் இல்லை எல்லா நாடுகளிலும் இதே அளவு தான் ஆனால் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் எல்லாவற்றையும் வீட்லே செய்து
சாப்பிட மாட்டார்கள்( நான் கவனித்த வரை) முக்கியமான staple food மட்டும் வீட்ல செய்து கொண்டு விசேஷமான மற்ற உணவுகளை restaurant ல சாப்பிடுவார்கள் .. நம் நாட்டில் தான் 3 வேளையும் பெண்கள் சமைத்து தர வேண்டும் அது வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும்
சமையல் என்று சொல்லும் போது வெறும் சமைப்பது மட்டும் அல்ல பாத்திரம் விளக்குவது , kitchen ஐ சுத்தமாக வைத்து கொள்வது என்று இந்த ஒரு வேலை மட்டும் ஏழை முதல் upper middle class பெண்கள் வரை சரி சமமாக இருக்கும்.. @Nandhinimagesh எழுதிய இந்த கட்டுரை படி 75% வீட்டு வேலை செய்வது பெண்கள் தான்
துவைப்பதற்கு வாஷிங் machine வந்தது போல சமைப்பதற்கு என்று எளிய முறை எதுவும் வரவில்லை ( சக்தி மசாலன்னு சொல்லாதீங்க https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Face with tears of joy" aria-label="Emoji: Face with tears of joy">) , அப்படி கஷ்டப்பட்டு செய்யும் சமையலுக்கும் பல குறைகள் சொல்லி தான் ஓட்டுகிறோம் .பெண்கள் சமைப்பத்தை கட்டாயமாக்க நாம் சொல்லுகின்ற சில சாக்கு போக்குகள் எனக்கு வீட்டு
சாப்பாடு மட்டும் தான் ஒத்துக்கும் , வீட்ல வந்து ஒரு பிடி சாப்பிட்டா தான் மனசு நிரஞ்சு இருக்கும் போன்றது தான்
சரி பாயிண்ட்க்கு வருவோம் 132 பேரில் 77% ஆண்களுக்கு சமைக்க தெரியும் என்றால் கண்டிப்பாக நல்ல விஷயம் தான் இதில் எத்தனை பேர் வீட்டில் பெண்கள் சமையல் செய்யும் போது அந்த வேலையை
பகிர்ந்து கொள்கிறோம் என்பது தான் ரொம்ப முக்கியம் .. பெண்கள் empowerment ஆவதற்கு மிக பெரிய தடையாய் இருப்பது இந்த வேலைகள் தான் , அவர்கள் மட்டும் தான் இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை , முக்கிய உணவுகளை மட்டும் சமைத்து சாப்பிடும் போது restaurants ன் தேவைகள் பெருகும் இதன்
மூலம் உணவு துறையில் அதிக வேலை வாய்ப்புகளும் ஆராய்ச்சிகளும் பெருகும் .. நாம் இப்படி மூன்று வேளையும் பெண்களை அடிமைப்படுத்தி சமைத்து கொண்டு இருந்தோம் என்றால் எப்போதுமே அடுத்த நிலைக்கு போகவே முடியாது .. இது எல்லாவற்றிக்கும் மேல சமையல் என்ற விஷயத்தை வீட்டில் இருக்கும் ஆண் பெண் என
இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் .. பெண்கள் வேலைக்கு சென்றாலும் அவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற மனநிலை இன்னும் பல இடங்களில் இருக்கிறது அந்த எண்ணத்தை உங்கள் இல்லத்தில் முதலாவது மாற்றுங்கள் பிறகு மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள் ..வீட்டில் வளரும் பிள்ளைகளுக்கு பகிர்ந்து வேலை
செய்ய கற்று கொடுங்கள் ....இது சம்பந்தமாக ஒரு சில பிடித்த டீவீட்களை கீழே பகிர்கிறேன் ..

நன்றி ..https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
இதை தான் @MalavikaM_ தனது ஆதங்கத்தில் கூறிய போது அவர் அந்த டீவீட்டை delete செய்யும் அளவுக்கு தள்ளி விட்டோம் ..
https://twitter.com/ividhyac/status/1249619526959771648?s=19
இது">https://twitter.com/ividhyac/... போன்று நாம் பழக்கும் போது , அடுத்த தலைமுறை சிறப்பாக வர நிறையா வாய்ப்பு இருக்கு ..
https://twitter.com/MusicaDSan/status/1257672100569124864?s=19">https://twitter.com/MusicaDSa... THIS .
https://twitter.com/Janani_momof2/status/1259436583033290752?s=19">https://twitter.com/Janani_mo... இந்த விஷயத்தை role model ஆகவே எடுத்துக்கலாம்
https://twitter.com/Tweets_of_Fin/status/1226042560398782465?s=19">https://twitter.com/Tweets_of...
You can follow @Tweets_of_Fin.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: