#Zombies - கவலை படாதிங்க தமிழ் படத்த பத்தி எழுத போறது இல்ல. போதுவா ஜோம்பிஸ் பத்தி பார்ப்போம். எனக்கு ஜோம்பிஸ் அறிமுகமானது #Resident evil படத்தில ஆரம்பிக்கிறப்ப சத்தியமா தெரியாது இது ஒரு சீரிஸ் ஆஃப் மூவினு. ஆனா 6 படம் எடுத்திருக்கான் இது வரை முதல் 3 படத்த தவிர. வேற எதையும் முழுசா
பார்த்தது இல்ல. நல்லா தான் இருக்கும். ஆனா சாப்பிட்ட சாப்படையே சாப்பிட்டா வர அழுப்பு தான் பார்க்கமுடியாம பண்ணிச்சு. அதுவும் இல்லாம டிசைன் டிசைனா ஜோம்பிஸ் இறக்குனான்.அதுக்கப்புறம் 2004ல வந்த #Dawn of the dead செம படம். ஒரு நார்மல் Humans என்ன பண்ணுவாங்கன்ற ஃபில் இந்த படத்தில வந்தது
படமும் நல்லா இருக்கும். திடிர்னு ஒரு நாள் ஒருத்தன ஒருத்தன் கடிச்சிட்டு ஒடுவாங்க இதுல வர ஜோம்பிஸ் நல்ல ஃபாஸ்ட்டா ஒடும் அவ்வளவுதான். இதுல கொஞ்சம் சீன்ஸ் பாக்குறப்ப நம்ம ஜெயம்ரவி நடிச்ச மிருதன் நியாபகம் வரும். அதுக்கு அடுத்து 2007ல வந்த #Iam legend. Will Smith நடிச்ச படம்.
ஒரு தனி மனுஷனோட சர்வைவல் மூவியா காட்டியிருந்தான். ஆனா இதுல வரது ஜோம்பியா இல்ல டிராகுலாவானு எனக்கு டவுட்டு. காலையில நேரத்தில வராது. நைட் ஆனா வரும். அதே மாதிரி இந்த படத்தோட கிளைமேக்ஸ் தான் மிருதன் கிளைமேக்ஸ். அடுத்த படம் 2009ல வந்த படம் #Zombieland சீரியஸா பாத்திட்டு இருந்த ஜோம்பிஸ
காமெடி ஆக்கி விளையாடுவானுங்க. நல்ல காமெடி மூவி. இதுல ஜோம்பிஸ ஸ்லோவா நடக்கிறாப்ல காட்டிருப்பாங்க. செம படம். இதுக்கு அடுத்து 2013ல Brad bit நடிச்சு வந்த படம் #World war Z. இதுல ஜோம்பிஸ்க்கு அப்டேட் ஆகிக்கிற மாதிரி காட்டிருப்பாங்க. இது தான் ஜோம்பிஸ்க்கு தடுப்பூசி கண்டு பிடிச்ச படம்.
நல்ல படம். இதுக்கு அடுத்து #Warm bodies 2013ல வந்த படம். ஜோம்பிஸ் வச்சி லவ் ஸ்டோரி எடுத்து வச்சிருந்தாங்க. எப்படிடானு கேட்டாலும், படம் நல்லா இருந்துச்சு. அதுக்கு அடுத்து நான் எப்போடா 2nd part வரும்னு காத்திட்டு இருக்கிற #Train to Busan;2016ல வந்தது. அதே ஃபார்ஸ்ட் ரன்னிங் ஜோம்பிஸ்
ஆனா ஒரு டிரெயின் உள்ளையே முழு படமும். திரில்லிங்ல கலக்கிருப்பானுங்க. செம படம். பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க. இன்னும் நிறைய படம் zombies பேஸ் பண்ணி வந்திருக்கு. வேற நல்ல படம் இருந்தா கமென்ட்ல Suggest பண்ணுங்க. எனக்கு தெரிஞ்சு இப்போ எந்த ஜோம்பி வந்தாலும் நான் சமாளிப்பேன்.
அவ்வளவு verity பார்த்தாச்சு. ஜோம்பி டே @rightclickcbe @girinath_2
You can follow @Karthicktamil86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: