அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
#PeopleLeaderMKStalin
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும். #PeopleLeaderMKStalin
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன். #PeopleLeaderMKStalin
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன். #PeopleLeaderMKStalin
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால். #PeopleLeaderMKStalin
10 மணிக்கு காலை உணவு.ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு!ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர்.அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே.விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்!சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது #PeopleLeaderMKStalin
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். #PeopleLeaderMKStalin
இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
#PeopleLeaderMKStalin
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
#PeopleLeaderMKStalin
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். #PeopleLeaderMKStalin
கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது. #PeopleLeaderMKStalin
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை. #PeopleLeaderMKStalin
You can follow @rahman_28.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: