@vikatan @AnandaVikatan @JuniorVikatan. @Suriya_offl

கொரோனா காலத்தில் கோவில் சர்ச்சை அவசியமா??
கோவில்களால் ஒரு பயனும் இல்லை ; நடிகை கூறியது சரிதானே !
கோவில்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சங்கிகள் ;
என பல்வேறு விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்ற வேளையில், இன்றைய ஆனந்தவிகடனில் ஒரு
கருத்துக்கணிப்பு (திணிப்பு) நம் பார்வையில் பட்டதன் விளைவு தான் இந்த பதிவு-
முதல்வாதம்-

1 A)கோயில்களுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறார்கள்.

1B)அதை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்

பதில்-

1A)- தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்புக்கு
ஆண்டுதோறும் 4 கோடி முதல் 6 கோடி ரூபாய் மட்டுமே மானியமாக அரசு வழங்குகிறது....

மாறாக தமிழக கோயில்கள் அரசிற்கு ஆண்டுதோறும் ரூ. 3000 கோடி வருவாய் ஈட்டுகிறது..
கோவில் பராமரிப்பு செலவு போக, மீதம் 2995 கோடி ரூபாய் அரசாங்கத்திடம் தான் உள்ளது!!
1B- கோயில்களுக்கு வழங்கப்படும் பணத்தில் அரசு மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் கட்டலாமே !

ஆம்.. ஏற்கனவே அரசாங்கம் அதைத்தான் செய்து வருகிறது.. கோயில்கள் மூலம் பெறப்படும் வருமானத்தில் சுமார் 2500 கோடி ரூபாய் ஆண்டுதோறும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும், அதில்
பணிபுரிபவர்களுக்கு சம்பளமாகவும் வழங்கப்பட்டு வருகிறது...
இதுதவிர கோவில்களின் நேரடி கண்காணிப்பில்
54 பள்ளிகள் (CBSE உட்பட),கல்லூரிகள் செயல்படுகின்றன...33 கருணை இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன...

இந்த உண்மை தெரியாமல் நடிகை கூறிய கருத்து அவரது அறியாமையை உணர்த்துகிறது
என்று நாம் கடந்து போகும் நேரத்தில் தான் விகடனின் விஷ பிரச்சாரம் கண்ணில் பட்டது.....

@vikatan ஆனந்த விகடன் குழுமத்தின் கருத்து திணிப்பு ஏன்???

இந்து சமய அறநிலையத் துறையின் கீழே உள்ள கோயில்களின் எண்ணிக்கை - 44,121
இதுதவிர கிராம பூசாரிகளின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை- 2,00,000

சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.... இவற்றுள் பெரும்பாலானவை ஆயிரம் வருடங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது... ஒரு சில கோயில்கள் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்டன...
திராவிட ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்தக் கோயிலும் கட்டப்படவில்லை.. நடிகை கூறியதுபோல 60 ஆண்டுகளாக கோயில்களில் தமிழக அரசு முதலீடு செய்யவில்லை....ஆனால் ஆண்டுதோறும் ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டக்கூடிய கோவில் சொத்துக்களை முழுமையாக
அனுபவித்தது.

தமிழ் மன்னர்கள் தங்கள் காலத்தில் கட்டியமைத்த கோவில்கள் தான் இன்றைய காலத்திலும் தமிழக மக்களுக்கு பயன் தருகிறது...

தமிழக கோயில்களின் கீழ் உள்ள நிலங்களின் சொத்துவிவரம் -

சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள்..
இவைகளுள் ஐந்து லட்சத்திற்கும் மேலான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது... மீதியுள்ள இரண்டு லட்சம் ஏக்கர் குத்தகை பணம் தான் தமிழக அரசுக்கு வருகிறது... பெரும்பாலான கோயில்களின் ஒரு ஏக்கர் குத்தகை நிலத்திற்கு ஆண்டுதோரும் 40 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது..
இந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினால், பல லட்சம் கோடிகள் தமிழக அரசிற்கு வரக்கூடும்... அந்தப் பணத்தில் எய்ம்ஸ் தரத்திலான மருத்துவமனைகளை மாவட்டம்தோறும் அமைக்க முடியும்... ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்லூரிகளை அதிக அளவில் தமிழகத்தில் நிறுவ முடியும்....
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில்

"மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்; வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்…" எனத் தொல்காப்பியம் நிலங்களுக்குரிய தெய்வங்களாக வகுத்துக் காட்டுகிறது...
1858-ல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பை குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. இதனால், 'மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு
தலையிடாது'என்ற வாக்குறுதியை அளித்தது... கோவில் நிர்வாகத்தை தமிழர்களே கவனித்துக்கொள்ள அனுமதி அளித்தது...

கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் தெரியவர, 1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, மதராஸ் மாகாணத்தில் (ஆந்திரா கேரளா மைசூர் உட்பட)இருந்த அனைத்து
திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார்.. அதிக வருமானம் ஈட்டிய திருப்பதியை ஆந்திர வலியுறுத்தியது இதனடிப்படையில்தான்(வரலாறு முக்கியம் மக்களே). ஒரு மாநிலத்தின் எல்லையை முடிவு செய்தது ஒரு
கோவில் தான் என்றால் நம்ப முடிகிறதா????????????

1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22, ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது...
திராவிட அரசு பொறுப்பேற்றதும் கோவில்களின் நிலங்கள் மற்றும் குளங்கள் காணாமல் போயின... 60 ஆயிரம் கோயில்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக சுருங்கியது... 50,000 கோயில் குளங்கள் 2000 ஆக குறைந்தது (அதிலும் பராமரிப்பு சரி இல்லை)... பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் 2 லட்சமாக சுருங்கியது...
பலநூறு தங்க ரதங்கள் வெறும் 63 ஆக குறைந்தது... கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.. கோவில்களில் உள்ள சாமி சிலைகள் திருடப்பட்டன.. பல கோடிக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன...

தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு கோயில்களின் மூலமாகத்தான் அடையாளம் காணப்படுகிறது..
பிற நாடுகளில் உள்ளது போல இங்கு அருங்காட்சியங்கள் அதிக அளவில் இல்லை... கோயில்களே அருங்காட்சியங்களாக இருக்கின்றன... செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நமது வரலாற்றை பறைசாற்றுகின்றன....

ராஜேந்திர சோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா மீதான படையெடுப்பின் மூலம்
நமது கப்பற்படையின் வலிமை தெரிகிறது... கங்கைகொண்ட சோழபுரம் என்ற கோயிலின் மூலமாக வடநாடு படையெடுப்பு தெரியவருகிறது... சேரன் செங்குட்டுவன் இமய மலை படையெடுப்பின் மூலம் தமிழரின் போர் வலிமை தெரியவருகிறது.. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் சிலை போல ஆப்கானிஸ்தானில் சிலை தோற்றமளிப்பதால்,
தமிழர்களின் நாகரிகம் ஹரப்பா மொகஞ்சதாரோ தாண்டி நிலைபெற்றதை உணரலாம்...இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேரூர்(கோயம்புத்தூர்) திருக்கோயில் கல்லணை கட்டிய கரிகால சோழனால் கட்டப்பட்டது... சிதம்பரத்திலுள்ள நடராஜர் சிலை உலக அறிவியல் கழகத்தின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி எண்ணற்ற வரலாற்று பொக்கிஷங்களாக நமது கோயில்கள் உள்ளன...
இது தவிர, கோயில்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில்தான் பல லட்சம் பேருக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது... கோயில்கள் நடத்தும் 54 பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு
கல்லூரி படிப்பிற்கு 100% scholarship வழங்கப்படுகிறது...
சமூகத்தால் நிராகரிக்கப் படுகின்ற, 3000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு திருக்கோயில் பாதுகாப்பு படையில் வேலை வழங்கப்பட்டு இருக்கிறது...
இதுதவிர மனநல காப்பகம் ,முதியோர் இல்லங்கள் ,சித்தா மருத்துவமனைகள், ஆங்கில மருத்துவமனைகளும்
கோயில்களால் நடத்தப்பட்டு வருகின்றன...

வருடந்தோறும் 1000 ஏழைகளுக்கு கோவில் பணத்தில் இலவச திருமணங்கள் நடைபெறுகின்றன.. 40 யானைகள் பராமரிக்கப்படுகின்றன...

இவற்றில் ஒரு சதவிகிதம் கூட சினிமா மற்றும் ஊடகத்துறையை சார்ந்த எவரும் செய்ததில்லை என்பது தான் உண்மை....
50 ஆண்டுகால தமிழக சினிமாவின் வருமானம் எவ்வளவு தெரியுமா???

சுமார் 5 லட்சம் கோடிகள்....

கோவில்கள் செய்த புண்ணிய காரியத்தில் சினிமா துறையை சார்ந்தவர்கள் எவ்வளவு செய்திருப்பார்கள்???? பகுமானமாக பேசும் நடிகர் நடிகைகள் இனியாவது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்..
தமிழர்களின் நாகரிகத்தின் மேல் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்... தமிழர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதை கைவிட வேண்டும்...

ஜமாத் மற்றும் சர்ச்களில் நடைபெறும் அரசியல் வகுப்புகள் போல எந்தக் கோயிலிலும் நடைபெறுவதில்லை... எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மூளை சலவை
கோவில்களில் செய்யப்படுவதில்லை...

எனவே கோவில்களின் மகத்துவத்தை தமிழ் கூறும் நல் உலகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.... விகடன் என்ற கோமாளி கூடத்தின் அரசியல் திணிப்பை @arivalayam புரிந்துகொண்டு புறக்கணிக்கவேண்டும் ( விகடன் என்றால் தமிழ் அகராதியில் கோமாளி என்று பொருள்)...
Posted as received.

@CMOTamilNadu @OfficeOfOPS @djayakumarfans @SPVelumanicbe நீங்கள் முழுமையாக கோயில் பராமரிப்பு, விசாரணை, புனரமைப்ப நீங்க முழுமையா ஆதரிச்சு மேற்கொள்ளோனும்ங்க.
@CMOTamilNadu அய்யா கலைஞர் ஒருக்கா ராஜ ராஜ சோழன் ஆட்சி தன்னோட ஆட்சியை போன்றதுன்னு பெரும பேசுனாருங்க. அவரே அப்படி சொன்னா உங்காட்சிய என்னன்னு சொல்றதுங்க?!!!!

எங்க கண்ணுக்கு நீங்க ராஜராஜ சோழன் அம்சமாத் தான் தெரியரீங்கோ. குடிமராமத்து, ஆஸுபத்திரி, கடல்கடந்து போய் தொழில புடிச்சிட்டு
வந்தவீக நீங்க. நல்லா சாமி கும்புடறவீக. புரட்சித் தலைவர், அம்மா ரொம்ப பக்தியா இருந்தவீக. நம்ம கோயிலீயும் நல்லா பண்ணிப்போட்டீங்கண்ணா அய்யா சாமியே உங்காட்சிக்கு வழியுடுமுங்கய்யா. பண்ணிப்போடுங்கய்யா. இப்படி கச கசன்னு பேசறவீகளுக்கு அது தான் பதிலா இருக்குமுங்கய்யா.
You can follow @krithiha.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: