வீட்டை விட்டு வந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். இருவருக்கும் வேறு யாரும் இப்போது இல்லாத நிலமை. மனைவி நல்ல வேலைக்கு போகிறார், வீட்டு வேலை செய்கிறார், எல்லாவற்றையும் அவர்தான் பார்த்து கொள்கிறார். ஒரு பிரச்சினை விட்டு குடுக்க மாட்டார். தான் சொல்வது செரி என இருப்பார்.
கணவனோ பெரிதாக வேலை செய்யாமல் எதோ கூலிக்கு போகிறார். சோம்பேறி. மனைவியை நம்பி தான் குடும்பம்.என்ன ஆகும்? மனைவியின் சொல்லுக்கு கட்டுபட வேண்டும். என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். மனைவியால் infulence செய்ய படுவார் கணவர். இதே எடுத்துக்காட்டு நமக்கும் AI தொழில்நுட்பத்துக்கு பொருந்தும்

இதில் மனைவி தான் AI. போக போக அதன் செல்வாக்கு கூடும். நாம் அதை சார்ந்து இருப்பது அதிகரிக்கும். ஆனால் மனைவி நமக்கு கெடுதல் நினக்க மாட்டார். அதனால் infulence ஆகினால் தவறு இல்லை.AI? அப்படி அது நம்மை தவறான வழியில் கொண்டு சென்றால் ? அதனால் நாம் பாதிக்க பட்டால்??
இன்றைய AI நிபுணர்களின் முக்கிய பிரச்னைகளில் இது ஒன்று. ஆனால் பயப்பட வேண்டாம் அந்த நிலைக்கு இன்னும் மனைவிகள் சாரி மிஷின்கள் தயாராகவில்லை. மனிதனை விட வேகமாக சிந்திக்கும் மற்றும் கணக்கிடும் திறன் உள்ளதே தவிர சுயமாக சிந்திக்கும் திறன் இன்னும்வரவில்லை. ஆனால் மிஷின்களை தவறான வழியில்
கொண்டு செல்வது எளிது. March 23,2016 டிவிட்டரில் ஒரு பிரபலம் நுழைந்தார். அவர் பெயர் டே. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுக படுத்திய AI பாட் அது. 18 மணி நேரத்தில் அதை நீக்கியது மைக்ரோ சாஃப்ட். காரணம் AI மிசின்கள் நாம் அதனுடன் பேசும் உரையாடல்களை கற்று கொண்டு தன்னை மெர்க்கேற்றும் திறன்
கொண்டவை. ஆனால் நம் வன்ம டிவிட்டர் ஆசாமிகள் அதற்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி குடுக்க, சீக்கிரமே தவறான விஷயங்களை கற்று கொண்டது. ஹிட்லர் செய்தது சரி, jew க்காள் கொள்ள பட வேண்டியவர்கள், மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்று நிறவெறி மத வெறி கொண்டு பேச ஆரம்பித்தது.
IBM மிஷின்கள் jeopardy குவிஸ் போட்டியில் ஜெய்கிறதே, கூகுள் ரோபோ alpha கோ game மில் உலக சாம்பயன்ஷிப் வென்றவனை வெல்கிறதே? என்று கேட்கலாம். விடை ஏற்கனவே சொன்னது தான் அவை மனிதனை விடஅதிகமாகவே பிராசைசிங் செய்யும் . Go game மில் 30 லட்சம் move களி நினைவு வைக்கும் திறன் உள்ளது. ஆனால்
அந்த போட்டியின் போது அரங்கில் தீ விபத்து நடந்தால் மனிதன் அங்கிருந்து தப்பிபான், இந்த ரோபோ அடுத்த மூவை கணக்கிட்டு கொண்டு எரிந்து சாம்பல் ஆகும். சுய சிந்தனை கிடையாது. ஆனால் சிந்தனை தருவது ஆபத்தையே அதிகம் தருமே தவிர உபயோகம் தராது.
நாம் AI களை தயாரிக்கும் போது மனிதனை விட அதிக அறிவு பெறாத வாரு வடிவமைத்து கொள்வது கடமை. அதுவே நாம் சமுதாயத்திற்கு செய்யும் சிறிய தொண்டு. இது போன்ற விடயங்களை மேலும் எழுத விருப்பம். குறிப்பாக எதை பற்றி எழுதலாம் என்று உங்கள எண்ணங்களையும் பகிருங்கள்
நன்றி


நன்றி


