மாடு வளர்த்தால் மல்டி மில்லியனர் ஆகலாம் என்ற ரேஞ்சில் சிலர் விளம்பரம் செய்வதை கண்டு யாரும் வேலையை விட்டு வந்திடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவு.. குறைந்தது ஒரு 5 மாடுகள் வளர்க்கத் தேவையான முதலீடுகள் நடைமுறைகள் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றி பார்ப்போம். +
5 மாடுகள் வளர்க்க வேண்டும் என்றால் குறைந்தது 2 ஏக்கர் விவசாய நிலம் (தண்ணீர் வசதி + இலவச மின்சாரம் ) வேண்டும். இன்றைய சந்தை மதிப்பில் இதற்கு 20 லட்சம் ரூபாய் ஆகும். அடுத்து கொட்டகை அமைப்பதை பார்ப்போம். 5 மாடுகள் + 5 கன்றுகள் கட்டிவைக்க 25'×10' சைஸில் கொட்டகை அமைக்க வேண்டும். ++
நல்ல காற்றோட்டமாகவும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு உயரத்திலும் கொசுக்காலத்தில் கொசு அதிகம் பாதிக்காதவாறு வலை அமைப்புடன் கொட்டகை அமைக்க 3 லட்ச ரூபாய் தேவை. அடுத்து மாடு வாங்க போகலாம். மாடுகளின் விலை அதன் வயது அதன் தோற்றம் பால் கறக்கும் திறன் எத்தனை கன்று ஈன்றெடுத்துள்ளது +++
போன்றவற்றை பொருத்து விலை நிர்ணயம் செய்யப்படும். நாளொன்றுக்கு காலை மாலை என 7+7=14 லிட்டர் கறக்கும் இளம் வயது மாட்டின் விலை தோராயமாக 40000 ரூபாய். 5 மாட்டிற்கு 2லட்ச ரூபாய் தேவை. மாட்டை கொண்டு வந்து வீட்டில் கட்டியாயிற்று. அதற்கான தீவன செலவை பார்ப்போம். நெல் அறுவடை காலங்களில் ++++
மொத்தமாக வைக்கோலை விவசாயிகளிடம் இருந்து வாங்கி கொள்ள வேண்டும். ( நம்மிடம் தான் 2 ஏக்கர் நிலம் இருக்கேனு கேட்கக்கூடாது..அது பசுந்தீவனத்திற்காக) 5 மாடுகளுக்கு 1 வருடத்திற்கான வைக்கோல் 40000 ரூபாய் ஆகும். அந்த வருட மழையை பொருத்து சில வருடம் கூடலாம். அடுத்து பசுந்தீவனம் பற்றி +++++
நாம் ஏற்கனவே வாங்கிய 2 ஏக்கர் நிலத்தில் தீவன சோளம் நேப்பியர் புல் சூபா பூல் அகத்தி முதலியவற்றை மாடு வாங்கும் 3 மூன்று மாதங்களுக்கு முன்பே நடவு செய்து வைத்திருக்க வேண்டும். நடவு செலவு 10000 ரூ வரை ஆகும். அதுபோக தினமும் தண்ணீர் பாய்ச்சுவது புல் அறுவை செய்வது உரமிடுவது என ++++++
உடல் உழைப்பு தினமும் செலவிட வேண்டும். அடர் தீவனம் போதும். அடுத்து தண்ணீரோடு கலந்து தரும் அரிசி தவிடு கோதுமை தவிடு கடலை புண்ணாக்கு போன்றவற்றை அருகில் இருக்கும் மளிகை கடைகளில் வாங்கி கொள்ளலாம். மொத்தமாக வாங்கும் பட்சத்தில் ஒரு மாட்டிற்கு நாளொன்றுக்கு 30 ரூபாய் இதற்காக +++++
செலவு செய்ய வேண்டும். இது போக மருத்துவ செலவுகள், சினை ஊசி செலவு போன்றவை தேவைப்படும் போது மட்டும் செலவாகும். ஆக இதுவரை ஆன செலவுகளை கணக்கிட்டு கொள்ளுங்கள். இனி வரவு கணக்கை பார்ப்போம்.. நாம் வாங்கி மாடுகள் தினமும் 7+7=14 லிட்டர் பால் கறக்கும் என ஏற்கனவே சொன்னோம். அதில் ஒரு ++++
சின்ன திருத்தம். ஈன்ற முதல் 3 மாதங்களுக்கு மட்டுமே 7+7=14 லிட்டர் பால் தரும். அதன் பிறகு 4 முதல் 8 மாதங்கள் வரை 5+5=10 முதல் 3+3=6 லிட்டர் என்று குறைந்து கொண்டே வரும். எட்டாவது மாதத்தில் பால் கறப்பதை நிறுதிட வேண்டும். பால் குறைவதாலோ நிறுத்தியதாலோ தீவனத்தை நிறுத்திடக்கூடாது +++
இவ்வாறு 25 லட்சத்தை capitalஆகவும் 50000ரூபாயை ஒரு வருட அடர் தீவனத்திற்காகவும் 60000 ரூபாயை தவிடு புண்ணாக்கிற்காகவும் செலவு செய்தால் உங்களுக்கு தோராயமாக 11500 லிட்டர் பால் கிடைக்கும். இதன் மூலம் 3.5லட்சம் ரூ வரவு வரும். இதில் தீவன செலவு 1 லட்சம் மாட்டின் தேய்மானம் 50000 ++
ரூபாயை கழித்தால் 2 லட்ச ரூபாய் மிஞ்சும். 5 கன்றுகள் மூலம் 25000 ரூபாய் கிடைக்கும். 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தினமும் 6 மணி நேரம் வேலை செய்து வருடத்திற்கு 2.25 லட்சம் ரூபாய் ஈட்டுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.
இதில் நோய்களால் மாடு இறப்பதையோ, பால் அடியோடு குறைவதையோ +
கணக்கில் எடுக்கவில்லை. 10ல் ஒரு மாடு நோயால் உயிர் இழப்பதையோ அல்லது பால் கறவையை குறைப்பதையோ வாடிக்கையாக கொண்டுள்ளது என்பது நியதி..

ஆக ஏற்கனவே மல்டி மில்லியனராக இருக்கும் யாரும் இந்த தொழிலுக்கு வந்து உயர்ந்திட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
You can follow @4geeyar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: