என் ஜூனியர் கூட வேலை செஞ்ச பொண்ணு. அண்ணா எனக்கு வயநாட்டில் கல்யாணம். இது தான் அட்ரஸ் வாங்கன்னு ஒரு message அனுப்புச்சு.

பகவதி அம்மன் கோயில்
Sussex
வயநாடு இவ்ளோ தான் அட்ரஸ்.ஓ https://twitter.com/imcomrade/status/1253581212272037888
பெருங்களத்தூர் ல தமிழ்நாடு govt பஸ் ஏறினோம் , கூடலூர் போக , செங்கல்பட்டு தாண்டும் போது செம மழை , பஸ் உள்ள பூரா shower கணக்கா தண்ணி கொட்டுது. அப்டி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி அடுத்த நாள் காலைல கூடலூர் போய்ட்டோம்.

அங்க இருந்து வயநாட்டுக்கு ஒரு பஸ்.
வயநாட்டில் இறங்கி சும்மா லோக்கல் சுத்திட்டு அடுத்த நாள் கல்யாணம் போலாம்ன்னு திட்டம். நயிட் ஹோட்டல் ல இந்த அட்ரஸ் சொல்லி கேட்டா இது எங்கன்னு தெர்ல சொல்லிட்டான். சுல்தான் பத்தெரி ல எவன கேட்டாலும் அட்ரஸ் தெர்ல. வெறுப்பு ல நான் என் தம்பி என் friend மூணு பேரும் okkanmani படத்துக்கு
போய்ட்டோம். அடுத்த நாள் காலைல அந்த பெண்ணுக்கு கால் அடிச்சா கால் போகல. சரின்னு முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் சஃபாரி போலாம் ன்னு விடிய காலைல கிளம்பி போய்ட்டோம். அங்க ஒருத்தன் எனக்கு இந்த இடம் தெரியும் , இது முதுமலை காட்டு பார்டர் , buffer zone வாங்க கூட்டிட்டு போறேன் ன்னு சொன்னான்.
அவன் கூட கிளம்பினோம். அந்த ஜீப் 1.30 மணி நேரம் காடு மலை கிராமம் ன்னு போய்ட்டே இருந்துச்சு. கடைசியா ஒரு எடத்துல நிறுத்தி இது தாம் sussex tea எஸ்டேட் , அந்த கோயில் எங்கன்னு கேட்டுக்கோங்க ன்னு சொன்னான்.
இறங்கி உள்ள போறோம் , ஒரு பெரிய மலபார் hornbill கீழ பறந்து போச்சு. மரத்தில் முதுமலை புலிகள் காப்பகம் buffer zone ன்னு இருந்துச்சு. அப்டியே எஸ்டேட் உள்ள போனா ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஒரு சின்ன கோயில் அதுக்கு கூரையும் இல்ல சிலையும் இல்ல.
என்னடா கல்யாணம் 8 மணிக்கு சொன்னானுங்க 730 ஆவுது ஒருதனையும் காணோமே ன்னு நெனச்சிட்டே , எஸ்டேட் உள்ள நடந்து போனா ஆள் நடமாட்டம் சத்தம் கேட்டுச்சு. அப்டியே சத்தம் வரும் திசை ல போனா , மக்கள் பொங்கல் வெச்சிட்டு இருந்தாங்க.
நாங்க இந்த எஸ்டேட் மக்கள் தான், இன்னிக்கு எங்க காவல் முனிக்கு திருநா நீங்க யாரு தம்பிங்களா ன்னு கேட்டாங்க. இந்த மாதிரி கல்யாணம் ன்னு சொன்னா அப்டி ஏதும் இல்லை. மாறி வந்து இருக்கீங்க போல. சரி வந்தது தான் வந்தீங்க இருந்து கெடா விருந்து சாப்பிட்டு தான் போகனும் ன்னு அன்பு கட்டளை
நாமளும் அப்டியே கூட சேர்ந்து பூண்டு உரிக்க , காய் நறுக்க ன்னு வேலை செய்ய ஆரமிச்சிட்டோம். ஒரு 830 க்கு பய ஒருத்தன் வந்து , அண்ணா அந்த பகவதி கோயில் ல கல்யாணம் தான் , இப்போ தான் எல்லாரும் வராங்க ன்னு சொன்னான். சரி ன்னு கெளம்பினா இவங்க , சாப்பிடாம போக கூடாதுன்னு அடம்.
அப்புறம் அந்த கல்யாணம் போய் தலைய காமிச்சிட்டு , இவங்க கிட்ட வந்து டாட்டா சொல்லிட்டு , சாப்பிட்டுட்டு , கெளம்பி ஊட்டி வந்து சேர்ந்தோம். அந்த மக்கள் அன்னிக்கு காமிச்ச பாசம் எனக்கு புதுசில்ல. ஏன்னா நான் அந்த மாதிரி கூட்டத்தோடு தான் வளர்ந்தேன்.
You can follow @tamilgramsi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: