🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

பாரதம் பரந்து விரிந்தது. புராண இதிஹாஸங்களின் படி, பூமிப் பந்தின் வடகோளம் பெரும்பாலும் சமுத்திரத்தைக் கொண்டது.

மீதமுள்ள மிகப்பெரிய நிலப்பரப்பு **ஜம்புத்வீபம்** எனப்பட்டது. சமஸ்க்ருதத்தில் த்வீபம் என்றால் தீவு.
அதாவது ஜம்புத்தீவின் பகுதிகளாவன

Modern Asia, Europe, Africa and North America.

ஆகிய இந்நிலப் பரப்புகளைத் தற்போது உள்ளடக்கியது ஆகும். மேலும், ஜம்புத்வீபமானது **ஒன்பது (9) வர்ஷங்களாக** பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன...

1) பாரத வர்ஷம்
2) கேதுமுள வர்ஷம்
( இது கிட்டத்தட்ட முக்கால் பகுதி தற்போது அட்லாண்டிக் கடலில் மூழ்கி உள்ளது )

3) ஹரி வர்ஷம்
4) இளவ்ரித வர்ஷம்
( வட துருவம் இந்த வர்ஷத்தில் தான் சரியாக அமைந்துள்ளது )

5) குரு வர்ஷம்
( இது பாரத வர்ஷத்தின் நேர் எதிர்ப் புறத்தில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது )

6) ஹிரண்யக வர்ஷம்
7) ரம்யக வர்ஷம்
8) கிம்புருஷ வர்ஷம்
9) பத்ராஸ்வ வர்ஷம்
( இளவ்ரித வர்ஷத்தின் கிழக்கே, தற்போது முழுதும் பசிஃபிக் சமுத்திரத்தின் அடியில் உள்ளது )

பசிஃபிக் சமுத்திரம் , அட்லாண்டிக் சமுத்திரம் , மற்றும் இந்துமஹா சமுத்திரம் என அழைக்கப்படும் மூன்று சமுத்திரங்கள் மட்டுமே
அக்காலத்தின் புவியியல் வரையறையின்படி, இருந்ததாக அறிய முடிகின்றது. வேத நூல்களின் ஆதாரப்படி, அவற்றின் கூற்றுக்களை ஒட்டி, தோராயமாக ஜம்புத்வீபத்தையும், சமுத்திரங்களையும் வரைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட இது போல் தான் இருந்திருக்க வேண்டும் என்பது, அந்நூல்களின் படி தெரிய வருகின்றது!
Map of ” Jambu Dweepam ; Surrounded by Three Oceans ; and Nine (9) Varsham “ : (Pls open and see the pic)
அவற்றில், இளவ்ரித வர்ஷம் தான் வட துருவத்தில் உள்ள தற்போதைய ஆர்டிக் பகுதி !

ஹரி வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பாரத வர்ஷம் இவை மூன்றும் இளவ்ரித வரிஷத்தின் ஒரு பகுதியில் இருந்தன.

ரம்யக வர்ஷம், ஹிரண்யக வர்ஷம், குரு வர்ஷம் இவை மூன்றும் இளவ்ரித வர்ஷத்தின் மற்றோர் பகுதியில் இருந்தன.
தற்போதைய தென் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி , ஆஃப்ரிக்க கண்டத்தின் தென் பகுதி , மற்றும் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் அன்றைய காலத்தில், சமுத்திரத்தின் அடியில் முழுகி இருந்தன என்பதை அறிய முடிகின்றது !

மற்றொரு புறம், தற்போதைய அட்லாண்டிக் சமுத்திரம், பசிஃபிக் சமுத்திரம்
இவற்றின் பெரும்பலான பகுதிகளும், ஆர்க்டிக் சமுத்திரம் முழுவதும், கடல் மட்டத்தினின்று உயர்ந்து இருந்தன என்பதை அன்றைய குறிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகி்றது !

Source : “The Arctic Home in the Vedas” written by Lokamanya Bal Gangadhar Thilak !!
மேலும், தற்போது நாம் துல்லியமான புவியியல் வரைபடம் என நினைத்து/நம்பிக் கொண்டிருக்கும் தற்போதைய வரைபடம், உண்மையில் துல்லியமானதே அல்ல என்றும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

Source : “Incorrect Geographical Area Distribution in Modern World Map”

எனவே , இவற்றின் மூலம் பூமியில்,
1)நிலங்கள் எங்கே இருந்தன?
2)எத்தனை வர்ஷங்களாகப் பிரிக்கப்
பட்டன?
3)எங்கெங்கு இருந்த நிலங்களுக்கு
என்னென்ன பெயர்?
4)சமுத்திரங்கள் எவை?
5)அவை எங்கே இருந்தன?

என்பதைப் பார்த்து விட்டோம். அடுத்ததாக, நாம் பாரத வர்ஷத்தைப் பற்றிப் பார்ப்போம்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: