சங்கிகள் சோனியா காந்தியை வெறுக்க நிறைய காரணங்கள் உண்டு. அந்தம்மா பல வருசமா மத்திய அமைச்சரவைல இருந்த so called உயர்சாதி and பிராமணர்கள் ஆதிக்கத்தை சல்லி சல்லியா உடைச்சது. எல்லாரும் பிரணாப் முகர்ஜி தான் பிரதமர்னு நினைச்சாப்போ சீக்கியரான மன்மோகன் சிங்கை பிரதமராக்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவை மாதிரி ஒரு பன்முகத்தன்மை கொண்ட அமைச்சரவையை எல்லாம் இந்திய வரலாற்றில் பார்க்கவே முடியாது. ஒரு சீக்கயர் பிரதமர்,கிறிஸ்தவர் ரானுவ அமைச்சர், தலித் ஒருவர் உள்துறை அமைச்சர், இஸ்லாமியர் ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்புறம் தமிழரான ப.சிதம்பரம்
நிதியமைச்சர்.மேல சொன்ன அத்தனை இலாக்கா மட்டுமல்ல பெரும்பான்மையான இலாக்கள் இன்னைக்கு பிராமணர்கள் வசம் தான் இருக்கிறது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆன மாதிரி பஸ்வான் ஆக முடியுமா? இல்ல ப சிதம்பரம் உள்துறை அமைச்சரா ஆன மாதிரி பொன்ராதா கிருஷ்ணன் குறைந்தபட்சம் இணை அமைச்சர் ஆக முடியுமா?
இது மட்டும் இல்லை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றிய அத்தனை Right based சட்டங்கள் அதாவது Right to education, right to information, right to food security, MGNREGA,DBT அத்தனை திட்டங்களுக்கும் சோனியா காந்தியும் ஒரு காரணம். சோனியா காந்தி பத்திலாம் தனியா ஒரு த்ரெட் போடனும்
