தமிழ்நாட்டில் சைவர்கள், வைணவர்கள் என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகிறதே அதன் பொருள் என்ன?

'இந்து மதம்' என்ற சொல்லாடலுக்குள்ளே சைவர்கள்,வைணவர்கள், ஸ்மார்த்தர்கள், இந்த மூன்றும் அல்லாத நூற்றுக்கணக்கான வழிபாட்டு நெறிகளை உடைய பல மக்கள் திரளாக உள்ளனர். வேதத்தை மட்டுமே 1/n
நம்புகிற கடவுளாக மதிக்காத ஸ்மார்த்தப் பிராமணர்கள் ஒரு வகை, சைவர்கள் என்பவர்கள் சிவனை முழுமுதற் பொருளாக,கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள். சிவன் கோயில் கருவறைக்குள்ளே நுழைபவர்கள் பிராமணர்கள் அல்ல.அவர்கள் சிவப்பிராமணர்கள்.அவர்கள் ஒரு தனிப் பிரிவினர். தங்களுக்குள்ளேயே மட்டும் திருமணம் 2/n
செய்து கொள்ளும் பிரிவினர்(endogamous group).விஷ்ணுவை முழுமுதல் பொருளாகக் கடவுள் என்று சொல்லக் கூடியவர்கள் வைணவர்கள். அவர்கள் வைணவக் கோயில் கருவறையில் அர்ச்சனை செய்யும் வைணவ பிராமணர்கள்.அவர்களிலும் வைகானசம்,பஞ்சராத்திரம் என்ற 2 ஆகம நெறிகளைப் பின்பற்றுபவர்கள் உண்டு. 3/n
தங்களுக்குள் மட்டும் தான் அவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வார்கள்.அவர்கள் தனிப் பிரிவினர். இவ்விரண்டும் அல்லாமல் 'ஐயர்' என்ற பெயரோடு வேதங்களை மட்டும் நம்பும் பிரிவினர் உண்டு.பார்ப்பனர் அல்லாதோர் மக்களின் கண்ணுக்கும், காதுக்கும் தெரியாமல் மறைத்து விடுவதால் தான் வட மொழி 4/n
வேதத்துக்கு 'மறை'என்ற பெயர் வந்தது.அதைப் பார்ப்பனர்கள் மனப்பாடம் செய்து வைத்துக் கொள்வார்கள்.இந்த ஸ்மிருதியை(வேதம்) மட்டும் கடவுளைப் போல வணங்குபவர்கள் ஸ்மார்த்தர்கள்.இவர்கள் ஆதி சங்கரருக்குப் பிறகு பெரும்பாலும் அத்வைத மரபு சார்ந்தவர்கள்.இவர்களுக்குப் பரமார்த்திகத்திலேயே 5/n
அதாவது உயர்ந்த தத்துவத்திலேயே கடவுள் என்ற ஒருவர் கிடையாது. எனவே இது ஒருவகையில் "மறைமுக நாத்திகம்". இவர்கள் எல்லாம் கோயிலிலே வேதத்தை மட்டும் தான் சொல்வார்கள். அதிலும் வேதங்கள் கருவறைக்குள் செல்லக் கூடாது. கருவறைக்குள்ளே சொல்லப்படுவன எல்லாம் வட மொழியில் அமைந்த அருச்சனைகள் தான். 6/n
கோயிலில் இடைகழி மண்டபம் தாண்டி அடுத்தாற் போலுள்ள மண்டபத்திலிருந்து வேதம் சொல்ல வேண்டும்.வேதப்பார்ப்பனர்கள் வேறு, கோயில் பார்ப்பனர்கள் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.கோயிற் பார்ப்பனர்களில் சைவர்கள் வைணவர்கள் உண்டு. இவர்களைத் தான் சிவாச்சாரியார்கள்,பட்டாச்சாரியார்கள் 7/n
என்று சொல்வது வழக்கம்.அது அல்லாமல் பல்வேறு சாதிகளைச் சார்ந்த சைவர்கள், வைணவர்கள் உண்டு.இந்த நெறிகளுக்குள் வராமல் மாடனை, காடனை, அம்மனை வணங்கும் மக்கள் தான் பெரும்பான்மையானவர்கள்.இப்போது எல்லாக் கோயில் குடமுழுக்குகளிலும் சங்கராச்சாரியார்கள் முன்னே வந்து நிற்கிறார்கள். 8/n
இது ஆகமங்களைக் கேலி செய்வதைப் போன்று இருக்கிறது.இதை எதிர்த்து தான் திருநெல்வேலிச் சைவர்கள் நீதிமன்றம் போனார்கள். சங்கரச்சாரி திருநீறு பூசுவார்.ஆனால் சைவ மடாதிபதிகளைப் போலவோ, கோயில் அருச்சகரைப் போலவோ திருநீற்றை எடுத்து அடுத்தவர்களுக்குக் கொடுக்க மாட்டார்..அவர் கையெழுத்து 9/n
போடுவது 'நாராயண ஸ்மிருதி' என்று தான். இப்போது வேறு நோக்கத்திற்காகக் கோயிலுக்குப் போகிறார். அவருக்கு அருச்சகரைப் போல சிவபூசை, வைணவ ஆராதனை செய்ய சடங்கியல் தகுதி கிடையாது. அதனால் தான் சங்கராச்சாரியார் சாமியைத் தொட்டு பூசை செய்யக் கூடாது, மூலஸ்தானத்திற்குள் நுழையக் கூடாது என்று 10/n
திருநெல்வேலியில் 1960-களிலும், 80-களிலும் சைவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். காஞ்சி மடம் 'இந்து' என்ற பெயரில் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடுகளை நடத்தத் தொடங்கியது.உண்மையிலேயே அவர்கள் பூசை(வேதம் ஓதும்) செய்கிற 11/n
நேரத்தில் தமிழில் பேசக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள்.அவர்கள் பூசையிலே திருப்பாவை, திருவெம்பாவை பாடுவார்களா? பாடமாட்டார்கள். ஏன் என்றால் தமிழ்மொழி அவர்களுக்குத் தீட்டான மொழி.இந்தத் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு என்பது சைவர்களையும், வைணவர்களையும் ஏமாற்றுவதற்காகச் செய்த 12/n
ஏற்பாடு. முதலில் சைவர்கள் ஏமார்ந்தார்கள்.வைணவர்கள் ஏமாறுவதற்குத் தயாராகவில்லை. குறிப்பாகக் காஞ்சியிலே 96 வயது வரை வாழ்ந்து மறைந்த வைணவ அறிஞர் - பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்பவர் இவர்கள் நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை மாநாட்டுக்குக் கடைசி வரை வர மறுத்து விட்டார் 13/n
இன்னமும் ஏராளமான வைணவ நூல்களை வெளியிடும் புத்தூர் கிருஷ்ணசாமி ஐயங்காரிடம்(சுதர்சனம் பத்திரிக்கையின் ஆசிரியர்) கேட்டுப் பாருங்கள் ஸ்மார்த்தர்கள் திருப்பாவை மாநாடு நடத்தலாமா? வருவீர்களா என்றால் வரமாட்டார். ஆகையால் ஸ்மார்த்தர்கள் இப்போது அதைக் கைவிட்டு விட்டு இந்து என்பதை 14/n
மட்டும் கையில் எடுத்து உள்ளனர். இவர்கள் நோக்கம் எல்லாம் ஏதேனும் ஒரு போர்வையில் அரசியல் அதிகாரத்தை மறைமுகமாகத் தங்கள் கையில் வைத்திருப்பது தான் 15/15

~இந்து தேசியம்~
You can follow @paramasivan_tn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: