ரஜினி எப்படிபட்ட மனிதர் ?
( ஒரு விரிவான தொகுப்பு )

இந்த பதிவு உலகமெங்கும் இருக்கும் @rajinikanth ரசிகர்களுக்காக இந்த தெறி கொடுக்கும் ஒரு சிறிய அன்பளிப்பு :) "Thread"

#ரஜினி_ஒரு_சகாப்தம்
அது 1973ஆம் ஆண்டு, நடிப்பின் மீது மிகுந்த ஈர்ப்புடன் ஒரு 23 வயது இளைஞன் நடிப்பு பயிற்சிக்காக தன்னை நடிப்பு பட்டறை மூலம் தயார் செய்து கொண்டிருந்த தருணம் அது, தன் இளமைக்கால நண்பர்களுடன் அந்த இளைஞன் நிறைய நேரத்தை ஒதுக்கிய காலமும் அதுதான்!

#ரஜினி_ஒரு_சகாப்தம்
பெரும்பாலும் தன் இளமை நாட்களை தன் நண்பர்களுடன் அனைத்து மொழி படங்களையும் திரையரங்கு சென்று பார்ப்பது, சினிமா பற்றி ஆரோக்கியமான விவாதங்களில் பங்கேற்பது, அப்போ அப்போ பெண்களை ஸ்டைலாக சைட் அடிப்பது என நாட்கள் வேகமாக நகர்கிறது!

#ரஜினி_ஒரு_சகாப்தம்
வருடம் 1974 அந்த நடிப்பு பயன்ற மாணவர்களை Interview செய்ய அந்த கால "iconoclastic filmmaker" C.V Sridhar அங்கே வருகிறார், அவர் 1973ல் இயக்கிய 'அலைகள்' மற்றும் 'Gehri Chaal' இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாக தோல்வியை தழுவியதால், 1974 அவர் புதிய முகங்களை கொண்டு!
#ரஜினி_ஒரு_சகாப்தம்
1974ல் புது முகங்களை வைத்து "பூபாளம்" என்று ஒரு மெல்லிய காதல் கதையை படமாக்க முயற்சி செய்து வந்தார் (இது அவரின் ஆருயிர் தோழர் க.செந்தாமரை எழுதிய ஒரு இளமை ததும்பிய காதல் கதை) அதற்கு முற்றிலும் புதுமுகமான ஒரு நடிகரை மற்றும் நடிகையை தேர்வு செய்ய அங்கே வந்தார்!

#ரஜினி_ஒரு_சகாப்தம்
சுமார் 100 பேரை நேர்காணல் செய்தவருக்கு யார் மீதும் திருப்தி இல்லை, அங்கே "சிவாஜி ராவ்" என்று ஒரு பையன் இருக்கான் சார் துரு துருண்ணு இருக்கான் பொண்ணுங்க கிட்ட நல்லா பேசுறான் அவனை நேர்காணல் செய்யுங்க என்று அங்கே வேலை பார்த்த் மூத்த ஆசிரியர் C.V Sridhar இடம்.

#ரஜினி_ஒரு_சகாப்தம்
உடனே அந்த சிவாஜி ராவ் எனும் இளைஞன் உள்ளே வருகிறார், என்னை தெரியுமா தம்பி உனக்கு என்று "C.V Sridhar" கேட்க, சார் உங்களை தெரியாமலா நீங்க எடுத்த " கல்யாண பரிசு" " வெண்ணிற ஆடை" எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று சிவாஜி ராவ் கூறுகிறார்! I'm Impressed என்றார் CV.

#ரஜினி_ஒரு_சகாப்தம்
பிறகு ரஜினியை நேர்காணல் எடுத்த பிறகு உன் கண்கள் காதல் படங்களுக்கு ஏற்றவாறு உள்ளது ஆனால் நீ உடனே தமிழ் கற்றுக்கொண்டு வந்தால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் CV Sridhar, அதற்கு நன்றி சார் நான் முயற்சி செய்கிறேன் என்று ரஜினி தமிழ் கற்றுக்கொள்ள தயாரானார்.

#ரஜினி_ஒரு_சகாப்தம்
தமிழ் கற்றுக்கொள்ள சிவாஜி ராவ் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலைமையில், எம்.ஜீ. அரின் அழைப்பில் அவரை சந்திக்க சென்ற இயக்குனர் "CV Sridhar"
என்ன ஸ்ரீதர் கடைசி இரண்டு படங்கள் சரியாக போகவில்லை என்று அறிந்தேன், என்னிடம் தயாரிப்பாளர் கண்ணையாவின் Call Sheet உள்ளது!
#ரஜினி_ஒரு_சகாப்தம்
என் கடைசி படம் "உலகம் சுற்றும் வாலிபன்" பெரிய வெற்றி அடைந்துவிட்டது நாம் இப்போது ஒரு படம் பண்ணுவோம், நீ "உரிமைக்குரல்" என்று ஒரு கதை சொன்னியே அதுவே பண்ணுவோம் என்றார் எம்.ஜீ.அர், MGR மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ஸ்ரீதர் அந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொண்டார்!
#ரஜினி_ஒரு_சகாப்தம்
"உரிமை குரல்" படத்தினால் புதுமுகங்களை வைத்து எடுக்க முயற்சி செய்த காதல் படத்தை கைவிட நேர்ந்தது, C.V Sridhar in நெருங்கிய நண்பர் கே. பாலச்சந்தர் அப்போது தான் புது முகங்களை தேடி நேர்காணல் செய்வதை அறிந்தார் C.V தான் ஏற்கனவே நேர்காணல் செய்த சிவாஜி ராவ் எனும்.

#ரஜினி_ஒரு_சகாப்தம்
சிவாஜி ராவ் எனும் இளைஞனின் துரு-துருப்பு மற்றும் கண்களை பற்றி கே.பியிடம் கூறிய சீ.வி, இவரை காதல் படங்களில் உபயோகித்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார், C.V இதுவரை யாரிடமும் யாறைப்பற்றியும் இப்படி இதற்குமுன் பரிந்துரை செய்ததில்லை என்பதால்..

#ரஜினி_ஒரு_சகாப்தம்
ஸ்ரீதர் பரிந்துரை செய்த சிவாஜி ராவ்வை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கே.பாலச்சந்தருக்கு ஒரு Curiousity பிறந்தது, விளைவு அந்த நேர்காணல் நாள், சிவாஜி ராவ் என்கிற பேரை மட்டும் அறிந்திருந்த K.B, அந்த இளைஞனை தானாகவே நேர்காணல் செய்கிறார்..

#ரஜினி_ஒரு_சகாப்தம்
பார்த்தவிடனே சிவாஜியை பிடித்து விடுகிறது K.Bக்கு(யாருக்குதான் இவரை பிடிக்காது ?) இதன் மூலம் "அபூர்வ ராகங்கள்" படத்தில் 1975ஆம் ஆண்டு பாழடைந்த கேட்டை திறந்து தமிழ் சினிமா உள்ளே நுழைகிறது அந்த நடமாடும் சரித்திரம்!
#ரஜினி_ஒரு_சகாப்தம்
ஏற்கனவே சிவாஜி என்று பெருமைமிக்க நடிகர் தமிழ் சினிமாவில் இருப்பதால் கே.பாலச்சந்தர் சிவாஜி ராவ் என்கிற பெயரை மாற்றி
'ரஜினிகாந்த்' என்கிற
புது பெயரை இவருக்கு ஆசையாக சூட்டுகிறார்! அந்த ரஜினி எனும் காந்தம் இழுத்த பல துகள்களில் நீங்களும் ஒருவர் தானே நண்பா?

#ரஜினி_ஒரு_சகாப்தம்
ஸ்ரீதர் இயக்கத்தில் " பூபாளம்" 1974 படத்தில் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய இந்த சிவாஜி ராவ், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் " அபூர்வ ராகங்கள்" படத்தில் 1975ஆம் ஆண்டு ரஜினிகாந்தாக அறிமுகம் ஆனது இறைவனின் சித்தம்!

#ரஜினி_ஒரு_சகாப்தம்
இயக்குனர் ஸ்ரீதர் தான் தன்னை கே.பியிடம் முதன் முதலாக பரிந்துரை செய்தார் என்பது ரஜினிக்கு 80களில் தான் தெரியவந்தது, ஆனால் அதற்கு முன்பே ரஜினிக்கு பாலசந்தரிடம் இருந்த அதே மரியாதை ஸ்ரீதர் மீதும் உண்டு, இந்த மரியாதைதான் ரஜினியை இவ்வளவு உயரம் வளர்ந்துள்ளது!

#ரஜினி_ஒரு_சகாப்தம்
C.V ஸ்ரீதருடன் 3 படங்களில் ரஜினிகாந்த் பணியாற்றியுள்ளார்,
1. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
2. Vayasu Pilichindi (1978)
3. Thudikkum Karangal (1983)

சிவாஜி ராவ் மிஸ் பண்ணிட்டார், ஆனா ரஜினிகாந்த் மிஸ் பண்ணாமாட்டார் அல்லவா ?

#ரஜினி_ஒரு_சகாப்தம்
வளர்ச்சி வந்தவுடன் மேலே ஏற்றி விட்டவர்களை மறக்கும் இந்த கெட்ட உலகத்தில் நன்றி மறவாத நல்ல மனிதர் இந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

Photos From C.V ஸ்ரீதர்'s Death Ceremony!
#ரஜினி_ஒரு_சகாப்தம்
You can follow @sandharpavathi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: