#Aravindhan #Keezhvenmani @realsarathkumar @rparthiepan @thisisysr @RathnaveluDop @TSivaAmma
1997ல் ஏழு வயதில் உதயம் திரையரங்கில் பார்த்தது. ”கோபாலகிருஷ்ண நாயுடு” என்று பெயரை சாதி அடையாளத்துடன் ஆண்டைகளின் வெறியாட்டத்தைத் தோலுரித்த திரைப்படம் (Thread)
”மனிதா மனிதா” - கண் சிவந்தால் மண் சிவக்கும் படப் பாடலைக் கேட்டு உணர்வு பொங்க தேடியதில், அரவிந்தன் படமும் இதே மையக்கருத்து சம்மந்தப்பட்டது தெரிய வர, மீண்டும் இணையத்தில் முழுப் படத்தையும் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு அற்புதமாக “Vigilante" டெம்ப்ளேட்டைக் கையாண்ட தமிழ்ப் படம் வேறில்லை.
யுவனின் முதல் படமாக இருந்தாலும் நாயகர்களுக்கு விறுவிறுப்பான பின்னணி இசையும், இன்றைக்கு பரபரப்பாக கருதப்படும் கிளைமேக்சில் மக்களிடம் வீரவசனம் பேசும் காட்சி, மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் Transformation காட்சி உட்பட படத்தில் உண்டு. ஆனாலும், படம் தோல்வியடைந்தது வேதனைக்குரியது.
சேது, நந்தா முதலாக எந்திரன், வாரணம் ஆயிரம், தற்போது இந்தியன் 2 வரைக்கும் வெற்றிப்படங்கள் வடிக்கிற ரத்னவேல் துடிப்பான அறிமுகப்படம் இது. சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, திலகன், தலைவாசல் விஜய், பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ், விசு, பொன்னம்பலம் என்று பெரிய நட்சத்திரங்களும் உண்டு.
கதைக்கரு, காட்சியமைப்பு, நடிகர்கள், துடிப்பான வசனம், நேர்த்தியான ஒளிப்பதிவு, இசை - அனைத்தும் ஒருசேர அமைந்தும், படம் ஏனோ சோபிக்கவில்லை. உச்சக்காட்சியில் நாயகன் இறக்கிற முடிவை மக்கள் ஏற்கவில்லையா அல்லது ஜெண்டில்மேன் போன்ற உணர்வெழுச்சிமிக்க திரைக்கதையில் குறைபாடா என்று புரியவில்லை.
கீழ்வெண்மணியில் நிகழ்ந்த சாதி மோதல், பிறகான வன்முறை, கடைசி வரை தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு கிடைக்காத நீதியை ”தட்டாமல் உடைத்து” கேட்கிற சராசரி vigilante படமாக அரவிந்தன் முடியவில்லை. இ.பா எழுதிய குருதிப்புனல்/ படமாக்கப்பட்ட க.சி.ம.சி இரண்டுமே அந்த இடத்தில் நிறைவ்டைகின்றன.
கிட்டத்தட்ட மெட்ராஸ் படத்தின் முடிவைப் போல, சமூக மாற்றத்திற்கு மக்களை அணிசேர்ப்பதும் விழிப்புணர்வு பெறுவதும் தான் என்கிற இலக்கை நோக்கி நகர்கிறது. வன்முறை நம்மை சாதியின் கோரப்பிடியிலிருந்தோ, பொருளாதாரச் சிக்கல்களிலிருந்தோ ஒருபோதும் மீட்டெடுக்காது என்பதில் மிகத் தெளிவாக முடிகிறது.
சிதையாமல் இதே கரு முருகதாசிடமோ, ஷங்கரிடமோ அகப்பட்டிருந்தால், மிகப்பெரிய வெற்றிப்படமாகியிருக்கக் கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஆகக்கொடிய முரணே, சமூகநீதி குறித்த குறைந்தபட்ச பிரக்ஞை அவர்களிடமில்லை, இப்படிப்பட்ட கரு அவர்களின் சிந்தனையில் கூட உதிப்பதில்லை.
ஏற்கனவே லட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்திற்கு ரோபோக்கள் தரும் ஷங்கர், மலக்குழியில் செத்துப்போகும் சக மனிதனை மீட்டெடுக்க ரோபோக்கள் உருவாக்கும் ஆற்றல்மிக்க விஞ்ஞானியை நாயகனாக்க முற்படமாட்டார். அவரது புனைவுலகம் முழுக்க சத்திரிய/சாணக்கிய நாயகர்கள் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள்.
இட ஒதுக்கீடுக்கு எதிராக பொறிபறக்க பேசி, வழிவழி வந்த ஆண்டபரம்பரை டி.என்.ஏ-வைச் சுண்டி எழுப்பும் விஞ்ஞானி வலம் வரும் முருகதாஸ் படத்தில், சாதி அடக்குமுறையில் தினம் தினம் செத்து மடிகிற மக்களில் ஒருவன் அப்படி வெகுண்டெழுந்து சூளுரைப்பாரா? ஆம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
ரஞ்சித்தின் வருகைக்கு பின்னர், நிலைமை 90கள் அளவிற்கு மோசமில்லை என்றாலும், இன்னும் நாம் சேரவேண்டிய தூரம் அதிகமே. ஒருசேர ரஞ்சித்தின் கூரிய சமூகப் பார்வையும், ஷங்கர்/ முருகதாசின் நேர்த்தியும் கூடிய மாபெரும் சமூகநீதி வெற்றிப்படம் தமிழில் வெளிவரவேண்டும் என்பதே என் விருப்பம் (11/11)