கோயில் வழிபாட்டிற்கும் சங்கரச்சாரிகளுக்கும் சம்பந்தமே இல்லையா?

காமாட்சியம்மன் கோயில் தவிர இவர்கள் கட்டுப்பாட்டில் வேறு பழமையான கோயில் இல்லை, இவர்களுடைய வேலை எல்லாம் ஸ்மார்த்தப் பார்ப்பனர்களுக்கு மட்டும் கல்வியும், வடமொழிக் கல்வியும் கொடுப்பது தான் 1/n
தங்கள் சாதிக்காரர்களுக்கு மட்டும் இவர்கள் சந்நியாச தீட்சை கொடுப்பார்கள்

ஆண்டுக்கு 4 மாதம் இவர்கள் வேறு இடத்தில் தங்க வேண்டும்,அதற்கு 'சதுர் மாஸ்ய விரதம்' என்று பெயர்,மறைந்த சங்கராச்சாரி இப்படித்தான் கலவையிலேயே தங்கினார், இவர்கள் தங்கும் இடம் மடம்தானே தவிர ஆலயம் அன்று 2/n
இவர்கள் துறவிகள் ஆன பிறகு சொந்த வீட்டிற்குச் செல்லக் கூடாது. இப்போது இருக்கிற சங்கராச்சாரியார்கள் சொந்த ஊருக்குப் போய் வந்திருக்கிறார்கள்,தன் செல்வாக்கால் சொந்த ஊருக்கு வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறார்கள்,அதனால் துறவிகளுக்குச் சொந்த ஊர்ப்பற்று போகவில்லை என்பது தெரியும் 3/n
இவர்களுடைய வழிபாட்டில் வடமொழியைத் தவிர மற்ற எந்த மொழிக்கும் அனுமதி இல்லை, அது தீட்டாகும். இவர்கள் விதவைகள் முகத்தில் விழிக்க மாட்டார்கள், ஆனால் இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்த போது மறைந்த சங்கராச்சாரியாரைப் பார்க்க விரும்பினார். இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? 4/n
நடுவில் நீர் இருந்தால் தீட்டு போய்விடும் என்று சொல்லி ஒரு சிறிய கிணற்றின் ஒருபுறமாக சங்கராச்சாரியாரையும் மறுபுறமாக இந்திரா காந்தி அம்மையாரையும் அமர வைத்தார்கள். துறவி என்பவன் எல்லோருக்கும் எளியவன் என்பது நம்முடைய கோட்பாடு, ஆனால் இவர்கள் அமர்கிற இடத்தில் இவர்களை விட உயரமாக 5/n
யாரும் ஆசனத்தில் அமரக் கூடாது. தரையில் அமைந்து கொண்டு அல்லது நின்று கொண்டு தான் பேச வேண்டும். சிறைச்சாலை வாசத்திலும் காவல்துறை வாகனத்திலும் இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை,இந்தியாவில் ஏராளமான மடங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மடமும் ஏதோ ஒரு இறைத் தத்துவத்தை 6/n
முன்னிறுத்துகிற மடங்கள்.ஜீயர் மடங்கள் இருக்கின்றன.திருவாடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று, சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன.எல்லா மடத்திற்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு.முதன்முதலாக இறைவன் ஒருவன் உண்டு என்பது தான் எல்லா மடத்திற்குமான உடன்பட்ட செய்தி. சங்கர மடத்திற்கு அப்படி 7/n
கிடையாது.எனவே தான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகர் ஆக முடியாது, சங்கராச்சாரிக்கும் காமாட்சி அம்மன் கோயிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது 8/n
அதுவும் காமாட்சி அம்மனை அவர்கள் வணங்க மாட்டார்கள்.காமாட்சி அம்மன் சன்னதியில் நின்று கையைத் தனியாக எடுத்து நெஞ்சுக்கு நேராக வைத்துக் கும்பிடும் வழக்கம் கிடையாது,கையினை நெஞ்சின் மேல் வைத்து நீ, நான்,நீ என்று தான் சொல்வார்கள்.அதாவது காமாட்சி நீதான் நான் என்று சொல்வார்கள்.9/n
இவர்கள் கும்பாபிஷேகம் போன்ற விஷயங்களுக்கு நாள் குறித்துத் தருவது அரசியல் ரீதியாக மறைமுக அதிகாரத்தை இவர்கள் கைப்பற்றிக் கொண்டதால் தான்.இதில் ஊடங்களின் பங்கு பெரியது.அறியாத பக்தர்கள் இவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள்,இவர்கள் ஆகமங்களை அறியாதவர்கள்,ஆகமங்கள் 10/n
சங்கராச்சாரிக்குத் தெரியாது.ஏனென்றால் இவர்கள் ஆகமங்களுக்கு எதிரானவர்கள்.கோயில் ஆகமங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவை. கும்பாபிஷகம் எல்லாம் ஆகம விதிப்படி நடக்க வேண்டியவை,இவர்களின் அதிகாரத்தின்படி அல்ல.ஆனால் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்துக்களின் தலைவர் என்று காட்டுகிறார்கள் 11/11
You can follow @paramasivan_tn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: