1967ல் முதல்வராக பதவியேற்ற அண்ணா அவர்கள் 14.1.1969ல் Madras மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். தமிழ்ப்புத்தாண்டு தை-1 தான் சரி என்றிருந்தால் அண்ணா அவர்கள் அன்றைக்கே அதையும் அரசிதழில் வெளியிட்டிருக்கலாமே ? நேரமில்லை-னு சொல்லிட்டீங்க..! https://twitter.com/kryes/status/1250288427389423616
அதுக்கப்புறம் 1969ல் இருந்து கலைஞர் 2006 வரை 5035 நாட்கள் ஆட்சியில் இருந்துள்ளார். 13/5/2006ல் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த அவர் தை 1 -யை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது 8/2/2008ல் தான். ஏன் 2008 வரை 1921ல் கூட்டம் நடத்தி தை1 தமிழ் புத்தாண்டாக தமிழ் அறிஞர்கள் சொன்னது தெரியவில்லையா ?
1921 மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள் யார் யார் ..அதற்கான அன்றைய பத்திரிக்கை பிரசுரம் ஏதாவது..? அவர்கள் தை 1-யை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுங்கள் என்று சொன்னதற்கான எழுத்துப்பூர்வ தகவல் உண்டா ? வாய்மொழி தகவல்கள் வரலாறு பேசாது ! திராவிட blogகளும்...
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னதை காட்டுவீர்கள் என்றால் அவர் எதன் அடிப்படையில் தை 1- றினை புத்தாண்டாக்கினார் என்பதற்கான தரவு ?
(யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பக்கூடாது.உன் அறிவை உபயோகப்படுத்தனும்னு தமிழறிஞர் பெரியார் சொல்லியிருக்கார்)
Article by Pala karuppaiah.. !
தொடர்ச்சி..

 கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள்.

 ...
...
இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது!

 பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.

....
....
சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே?

 "பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?

....
...

பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது!

 ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்!

...
....

ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்!

 தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும்.

....
....
ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.
....
திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?
....
....
ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?

 ....
...
திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்!

 சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்!

 ....
....
நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்!

 "காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!
- பழ. கருப்பையா.
Failed to load ?
You can follow @barathi91.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: