இந்தியா 75,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்து உதவுகிறது,

ஏற்கனவே 5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைத்துவிட்டது.

கொரோனாவால் ஆப்கானிஸ்தானில் இதுவரை 23 பேர் பலியாகி இருக்கிறார்கள் 714 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் பணியாற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தீவிரவாதத்தை எல்லையில் இருந்து ஒழிப்பதை விட எதிரியின் கோட்டைக்குள் புகுந்து அங்கிருந்து ஒழிப்பதற்காகவே இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவு
ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே பாராளுமன்ற வளாகம் - கிரிக்கெட் ஸ்டேடியம் - சாலை கட்டமைப்பு என இந்தியா செய்து உறவை மிக வலுவாக்கி விட்டது.

அதேபோல் இந்தியாவின் இராணுவ ஹெலிகாப்டர் - Intelligence - Army Startegic training உதவியால் - இராணுவ உறவிலும் வலுவாக உள்ளது.
உலகநாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு பொருளை அனுப்ப வேண்டுமானால் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திலிருந்தே சாலை வழியாக போக வேண்டும் என்ற நிலையை மாற்றி....

ஈரானில் உள்ள Chachabar துறைமுகத்தை இந்தியா குத்தகைக்கு எடுத்து - நவீன துறைமுகமாக மாற்றி.
அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இரயில் வழிதடத்தை அமைத்து அமெரிக்காவையும்,ஐரோப்பாவையும் தன் பக்கம் திருப்பி விட்டது.

அதோடு ஆப்கானிஸ்தானையும் தன் வசப்படுத்திவிட்டது.

தற்போது ஆப்கானிஸ்தான், இந்தியா & அமெரிக்கா இணைந்து தீவிரவாதத்தை ஒழித்து வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.
ஒருகாலத்தில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தது,

நேரம் பார்த்து அமெரிக்கா பின்லேடனை வைத்து உலக ஜாம்பவான் சோவியத் ரஷ்யாவை விரட்டியடித்தது,

தங்களது உலக புகழ்பெற்ற டாங்குகளை அப்படியே விட்டுவிட்டு உயிரை காப்பாற்றி கொள்ள ஓட்டம் பிடித்தனர்.
எண்ணெய் வளமில்லை எந்த வருமானமும் இல்லை இருப்பினும் பேரரசுகளிகிடையே போட்டி இந்நாட்டை நட்பாக்க,

அப்படியொரு மிக பூலோக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இந்த ஆப்கானிஸ்தான்.

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் ஆஃப்கானிஸ்தானை இணையவிடாது,
சீனாவின் திட்டத்தில் மண்ணை அள்ளி போடுவதோடு,இந்தியாவின் உதவி இல்லாமல் நடக்க்காது என்று இந்தியா தனது ஆளுமையை முன்னிறுத்துகிறது.

அதேபோல் மிக குறைந்த செலவில் அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பைப்லைன் மூலமாக சமையல் எரிவாயுவை கொண்டு வரம் கனவு திட்டத்திற்கும் இந்நாடு மிக முக்கியம்.
ஆப்கானிஸ்தானில் தங்கம்,லித்தியம்,மாங்கனீசு, நிக்கல் போன்ற கனிமங்களின் இருப்பு கிட்டத்தட்ட 3 ட்ரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப் பட்டிருக்கிறது.

இப்படியொரு கனிம புதையல் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள்,
இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி முதலிடத்தில் உள்ளது அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க முதலீடு அவசியமாக உள்ளது தேவையான முதலீடு கிடைத்தால் அடுத்த சில வருடங்களிலேயே உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும்,
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்ருக்கும்

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.
அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது கண் வைத்து விட்டன இரு நாடுகளும்
எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக இருந்தது

அனால் இப்பொழுது உள்ள நிலைமையோ தலைகீழ் இந்த கொரோனாவால் மருந்து,நிவாரண உதவி மூலம் இரு நாடு உறவு வலுப்படுத்தியுள்ளது,
கொரோனா விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவும் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்க்க ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உதவி செய்து கொண்டிருக்கிறது,

கொரோனா பேரழிவுக்கு பிறகு இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதை காலம் தான் தீர்மனிக்கும்.
#COVID19
#SSR
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: