இந்தியாவுல மட்டுமல்ல உலகத்தில நிறைய இடத்தில Affirmative action இருந்தாலும் இங்க மட்டும் தான் அது பெரிய போராட்டத்துக்கு பின்னாடியே வந்திருக்கு. மக்கள் போராட்டம் மட்டுமில்ல சட்டமியற்றும் பாராளுமன்றமும் சட்டத்த காப்பாத்த இருக்கும் நீதிமன்றத்துக்கும் நடக்கும் சண்டை இது
இந்த சண்டை ஆரம்பிச்ச முதல் இடம் மதராஸ் மாகாணம். நீதிக்கட்சியின் தொடர்ச்சியா மருத்துவ, பொறியியல் படிப்புக்கு சாதி அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் எதிர்த்து 1. The State Of Madras vs Srimathi Champakam 9 April, 1951 வழக்கு பதிவாகுது.
Equality நிலைநாட்ட வந்த நீதிமன்றம் Art 29(2), 14, 15 காரணம் காட்டி சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை invalidate பண்ணுது
இந்த தடையை மாற்ற 1st amendment மூலமா Art 15(4), 9th schedule insertபணணப்படுது
அடுத்த சண்டை அதுவும் Madras high court ல தான். 2. The General Manager, Southern Railway vs Rangachari on 28 April, 1961 Art 16(4) scope மத்திய தீர்ப்பு. Hiriyanna எனும் SC க்கு reservation மூலமா promotion கொடுத்தா தனக்கு seniority போயிடும்னு Rangachari போட்ட வழக்கு.
Reservation சரியான பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க appointment and promotion இரண்டிலுச reservation கொடுக்கலாம்னு தீர்ப்பு ஆயிடுச்சு.
அடுத்த 3. M. R. Balaji And Others vs State Of Mysore on 28 September, 1962 Naganadan committee போட்டு கர்நாடக அரசு 68% reservation கொடுக்குது. நீதிமன்றம் merit, efficiency ன்னு காரணம் சொல்லி வெறும் சாதி மட்டும் வச்சி இட ஒதுக்கீடு கொடுப்பது
சாதிய வளர்க்கும்னு பெரிய விளக்கம் இல்லாம 50% limit in reservation கொண்டு வருது
முன் promotion ல reservation கொடுத்ததுக்கு ஆப்பு வைக்க 4. T.Devadasan vs The Union Of India And Another on 29 August, 1963 ஒரு வருசத்துல reserved post fill ஆகலேனா அடுத்த வருசம் சேத்து வைச்சு கொடுக்கிற CARRY FORWARD 50% தாண்டினா தப்புன்னு தீர்ப்பு வழங்கியது.
1964 நாட்டில ஒழுங்கா பள்ளிக்கூடமே இல்ல. ஆனா 14 வருசத்துல எல்லா SC ST படிச்சு அந்தந்த வருச வேலையில் அந்தந்த வருசமே சேரனும். இல்லைனா அந்த வேலை general category க்கு போயிடும். இப்படி படிச்சவங்க தான் அப்போவே 1960s லயே அமெரிக்கால போய் settle ஆகி மோடி வாழ்க ன்னு கூவும் சங்கிகள்
அடுத்து 5. State Of Punjab vs Hiralal & Ors on 18 December, 1970 என்னோட உரிமை போச்சுன்னு hypothetical ground la case போட கூடாது. அதுக்கான onus of proof of violation complaint பண்றவங்க தான் கொடுக்கனும்னு தீர்ப்பு
அடுத்து 6. State Of Kerala & Anr vs N. M. Thomas & Ors on 19 September, 1975 கேரளா SC ST பணியாளர்களுக்கு promotion க்கான departmental test சில வருசம் விலக்கு கொடுத்தது எதிர்த்து போடப்பட்ட வழக்கு.
Art 16(9) not an exception but an emphatic statement ன்னு சொல்லி விலக்கு கொடுத்தது சரின்னு தீர்ப்பு வழங்கியது.
ஒரே ஒரு post தான் இருக்கு அதை எப்படி reservation செய்யவேண்டும்னு கேள்வி வர 7. Akhil Bharatiya Soshit ... vs Union Of India And Ors on 14 November, 1980
ஒரே பதவிக்கு reservation கொடுக்க கூடாது ஆனா அது அடுத்த வருசம் மாத்திக்கலாம். Carry forward 2-3 வருசம் நீட்டிப்பு செய்யலாம். அப்படி அதுல 64.4% reserved post ஆனாலும் செல்லுபடியாகும்னு தீர்ப்பு வழங்கியது.
அடுத்து Group A post போன்ற உயர் பதவிகளுக்கு reservation in promotionகொடுக்கலாமான்னு வந்த கேள்வி. 8. Dr. Chakradhar Paswan vs State Of Bihar & Ors on 8 March, 1988 9. Syndicate Bank Scheduled Castes ... vs Union Of India, Through Its ... on 10 August, 1990
இந்த இரண்டு வழக்குல method of selection காரணமா காட்டி promotion தடை பண்ண கூடாதுன்னு தீர்ப்பு வருது.
இந்த நேரத்தில தான் V.P.Singh Mandal commission report implement பண்ண G.O கொடுக்கிறார். BJP அதுக்கு போட்டியா அத்வானியேட இரத யாத்திரை தொடங்க Mandal Vs Kamandal politics ஆரம்பிக்குது
இப்பதான் புகழ் பெற்ற 10. Indra Sawhney Etc. Etc vs Union Of India And Others, Etc. ... on 16 November, 1992 Case வருது. இது எழுப்பிய கேள்விகள் எக்கச்சக்கம்.
•யாரு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறனும், அதை எந்த அடிப்படையில் பார்க்கனும்?
•Social+ educationally backward or ஏதாவது ஒன்றின் அடிப்படையில் reservation தரலாமா?.
•பொருளாதாரத்த வச்சி பிற்படுத்தப்பட்டோர் அடையாளம் பண்ணலாமா?
•50% guiding principle or compulsory
•Promotion reservation உண்டா?
அதுக்கு பதில்கள்
•Mandal commission order held valid.
•10% economic reservation ஏத்துக்கப்படல.
•OBC creamy layer criteria set பண்ண govt order போடப்பட்டது
•Art 16 (4) அடிப்படையில legislative மட்டுமல்ல executive too நடவடிக்கை எடுக்கலாம்.
OBC ய BC and MBC ன்னு பிரிக்கலாம்.
•50% reservation தான் சட்டம்
•Promotion ல reservation கிடையாது.
இந்த தீர்ப்பால தமிழ் நாட்டோட 69% இட ஒதுக்கீடு பாதிக்கும்னு 76th amendment பண்ணி 9th schedule போட்டு காப்பாத்தப்பட்டது.
இதுக்கடுத்து 77th amendment மூலமா 16(4)A add செய்யப்பட்டு reservation in promotion காப்பாத்தப்பட்டது.
இதுக்கடுத்து தொடர்ச்சியாக நிறைய case வந்தது.
11. R. K. Sabharwal And Ors vs State Of Punjab And Ors on 10 February, 1995
ஒரு வருசத்துல post reserved candidate fill பண்ண முடியாட்டி அடுத்த வருசம் carry forward பண்ணலாம். இதுல தான் reserved category candidate merit ல தேர்வானா அவர general category கணக்கில தான் சேக்கனுமு. அத்தோட roster system குறிப்பிட்ட 50% இலக்கு அடையிற வரை தான்
12. Union Of India And Ors. Etc vs Virpal Singh Chauhan Etc on 10 October, 1995 &
13. Ajit Singh Januja & Ors vs State Of Punjab & Ors on 1 March, 1996
Reservation மூலமா promotion கிடைச்சவங்களுக்கு seniority உண்டா என்பது அடுத்த வழக்கு.
Promotion மட்டும் தான் consequential seniority கிடையாதுன்னு தீர்ப்பு கொடுத்தது. இது என்ன consequential seniority ன்னா நீங்க reservation மூலமா assistant managerஆக உங்க general category senior முன்னாடியே promote ஆகலாம்.
ஆனா அடுத்த manager post ku உங்க assistant manager seniority கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. General category க்கு தான் seniority அடிப்படையில் manager post கிடைக்கும்
14. Jagdish Lal & Ors vs State Of Haryana & Ors on 7 May, 1997
இடைல consequential seniority ஆதரவாக இந்த வழக்கு தீர்ப்பு வந்த கொஞ்ச நாள்லயே 15. வழக்கு மூலமா overrule பண்ணி consequential seniority தூக்கியாச்சு.
இத மாத்த தான் 81st amendment மூலமா CARRY FORWARD rule 16(4)B, 85th amendment மூலமா consequential seniority amendment கொண்டு வரப்பட்டது.
16. S.Vinod Kumar And Anr vs Union Of India And Ors on 1 October, 1996 Promotion qualifying mark relaxation பண்ணலாமா வேணாமான்னு இந்த வழக்குல
அந்த மாதிரி relaxation பண்ண கூடாதுன்னு தீர்ப்பு வருது. இதுக்கு Art 335ல SC ST க்கு மட்டுமேயான பிரிவுல efficiency ன்னு இருக்கும் வார்த்தை தான் காரணம்.. அதாவது SC ST வேலைக்கு வந்தா efficiency குறையுமுன்னு இருக்கு. தீர்ப்ப நீர்த்து போக82 amend Art 335 ஒரு proviso சேர்க்கப்பட்டது
இந்த 77th,81st,82nd,85th, amendment எல்லாம் 17. M.Nagaraj & Others vs Union Of India & Others on 19 October, 2006 வழக்கில் challenge செய்யப்பட்டு upheld ஆச்சு.
இந்த வழக்கில
•Art 16(4)A, 16(4)B, Art 16(4) முரண்பாடு இல்லை
•Backlog vacancies க்கு 50% limit கிடையாது.
•Reserved candidate general category ல வேலை சேர்ந்தா reserved கணக்கில் வர மாட்டார்.
இது போக 3 condition போடப்பட்டது
http://1.SC  ST backwardness to be demonstrated for giving reservation
2.Prove they are inadequately represented.
3.Maintain overall efficiency.
இதே 18. Suraj Bhan Meena & Anr vs State Of Rajasthan & Ors on 7 December, 2010 இட ஒதுக்கீடு கொடுக்க ஒரு quantifiable data கொடுக்கனும்னு சொல்லுது.
ஆனா இப்ப வரை Socio Economic Caste Census data release பண்ணவே இல்லை. அதை பண்ணா general category பெரிய ஆப்பு வரும்.
M.nagaraj case ல சொன்ன condition பூர்த்தி செய்ய சிரமம்னு 19.Tripura Vs Jayant chakraborty case ல argue பண்ணி இருக்காங்க
அடுத்து 20. Jarnail Singh Vs lachhmi narain case மூலமா SC ST க்கும் creamy layer உருவாக்கலாம்னு சொல்லப்படுகிறது.
Three more cases on educational institutions will be added later
#JaiBhim
#AmbedkarJayanti
You can follow @subbu_q.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: