தமிழக சுகாதரத் துறையின் அடித்தளம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் ( Department of public health - DPH) கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். தமிழகத்தில் 1848 க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், 20,000
1. எனவே பொது சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் போதுமான அளவு தனிநபர் பாதுகாப்புக்கான முகக் கவசங்கள், N95 masks, கையுறைகள், சானிட்டைசர்கள் மற்ற உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
2.நோய்த் தொற்றைக் குறைக்கும் பொருட்டு மருத்துவக் கல்வி இயக்குனரகம்(DME) , மருத்துவப் பணிகள் இயக்குனரகம் (DMS), இரண்டிற்கும் கீழுள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவு பணியிலிருக்கையில் மற்றொரு பிரிவினர்
Quarantine leave வழங்கப்பட்டு தனிமைப் படுத்திக் கொள்ள வழிவகை செய்துள்ளனர். அதைப் போலவே பொது சுகாதாரத் துறை (DPH) மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அட்டவணைப்படி தனிமைப் படுத்திக் கொள்ளுதலுக்கு Quarantine leave வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
3.கொரோனா நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்குவதற்கு இடம் மற்றும் உணவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் குடும்பத்தினர், மற்ற பிறருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
4. கொரோனா கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள பொது சுகாதாரத் துறைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கமாக வழங்க வேண்டும்.
5. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக களப்பணிக்குச் செல்லும் பொது சுகாதாரத் துறையினருக்கும், மருத்துவமனைகளில் பணியிலிருப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
6. முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கையில், களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களிடமிருந்து பொது மக்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் மிக அதிகம். இதன் மூலம் மிகப் பெரிய அளவில் சமூகத்தில் நோய்ப் பரவல் ஏற்படும்.
You can follow @DrSenthil_MDRD.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: