Corona Antibody

நமது உடம்பில் புதிதாக நுழையும் எந்த ஒரு கிருமியும் Antigen என்று சொல்லப்படும்

இந்த கிருமியை அழிப்பதற்காக இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கும் பொருள் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும்.
இந்த Antibody இரண்டு வகைப்படும்.

முதலாவது Ig M - இது கிருமி உள் நுழைந்த உடனடியாக உருவாவது. கிருமிகள் இருக்கும் வரை இது போராடும். எனவே இது இருந்தால் கிருமிகள் Active ஆக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளப்படும்.
இரண்டாவது Ig G இது கிருமிகள் முற்றிலும் அழியும் முன்பு உருவாகும். ஆனால் நமது உடலில் காலத்திற்கும் இருக்கும இந்த வைரஸ் திரும்ப வரும் போது இந்த IgG நினைவு வைத்து அழிக்கும் இயல்பு உடையது. இது பாசிடிவ் என்று வருபவர்கள் இந்த கிருமி பாதிப்பு மீண்டு விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்
அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1)RT PcR கொரோனா வைரஸ் மாதிரிகள் உடலில் இருக்கிறதா என்று கண்டு பிடிப்பது

2)IgM கொரோனா வைரஸ் Antibody

3)IgG கொரோனா வைரஸ் Antibody
இது ஒன்று ஒன்றும் என்றைக்கு பாசிடிவ் வரும் என்று இந்தப் படம் தெரிவிக்கிறது..
ஐந்து முதல் 14 நாட்கள்

இதில் IgM Antibody உருவாக ஆரம்பிக்கும். இது உச்சநிலையை அடையும் ஏழு முதல் பத்து நாட்கள், வைரஸ் கிருமிகள் அழிய ஆரம்பித்து இருக்கும். அது அழியும் போது இதுவும் இறங்க ஆரம்பித்து விடும்

இந்த நிலையில் RT PcR plus IgM இரண்டும் பாசிடிவ் ஆக இருக்கும்
15 நாட்கள் முதல் IgG உருவாக ஆரம்பிக்கும். இது நன்றாக உருவான பிறகு வைரஸ் கிருமிகள் முற்றிலும் அழிந்து விடும். வைரஸ் கிருமிகள் எல்லாம் அழிந்த பிறகு இது மட்டும் தான் இரத்தத்தில் இருக்கும்.

எனவே காய்ச்சல் வந்து ஏழு நாட்கள் கழித்து டெஸ்ட் பண்ண போகும் போது இது பாசிடிவ் ஆகும்
இந்த பரிசோதனை செய்வது மிகவும் எளிதானது. நோயாளிகள் இரத்தம் எடுத்து நாம் சர்க்கரை அளவு பார்ப்பது போல, கர்ப்பம் ஆகி இருப்பது பார்ப்பது போல கார்ட்டில் வைத்தால் வரும் கோடுகள் வைத்து இது கொரோனா பாசிடிவ்வா, நெகட்டிவ்வா என்று எளிதாக கண்டறியலாம். 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியும்
வீட்டில் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு இந்த டெஸ்ட் செய்யப்படும்.
நெகட்டிவ் என்றாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் டெஸ்ட் செய்யப்படும்
பாசிடிவ் என்றால் மருத்துவ மனையில் அட்மிஷன் போடப்பட்டு அவர்களைச் சார்ந்தவர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
You can follow @DrMubarak_Mbbs.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: