🌺காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....🌺

உலக அளவில் Chloroquine மாத்திரை உற்பத்தியில் 40% மாத்திரைகள் 213 மருந்து கம்பெனிகள் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதாவது மார்ச்சு மாத நிலவரப்படி மாதத்திற்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்து வந்தது....
தற்போது மாதத்திற்கு 40 கோடி மாத்திரைகள் வரை உற்பத்தி செய்வதற்கான தயாரிப்பு பணிகள் முடிந்து அதிகளவில் உற்பத்தி தொடங்கிவிட்டன..

இந்த மாத்திரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியா கடந்த மாதம் இந்த மாத்திரையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தது...
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பிவைக்க தயார் என்று மோடி உலக நாடுகளுக்கு அறிவித்தார்.

மேலும்...உலக அளவில் மருத்துவம் சார்ந்த முகக்கவச உற்பத்தியில் இந்தியாவிற்கு தேவையான அளவு தயாரித்தது போக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவந்தோம்...
இந்தியாவின் கைவசம் தற்போது 20Cr முகக்கவசங்கள் உள்ளன. திருப்பூரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் உள்நாட்டு ஆர்டர் 20Cr கவசங்கள் கேட்கப்பட்டுள்ளன.

அயல் நாடுகளுக்கான ஆர்டர்கள் கோடிக்கணக்கில் குவிகின்றன. இதில் சாதாரண முகக்கவசங்களின் தயாரிப்பு அளவை கேட்டால் கிறுகிறுத்துப் போவீர்கள்!!
அது மட்டும் இல்லாமல் இந்திய ராணுவத்தின் DRDO 25 கோடி மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் 50 கோடி சாதா வகை முகக்கவசங்களை போர்க்கால அடிப்படையில் தயாரித்து வருகிறது.

மேலும்....

மருத்துவர்களுக்கான கவச உடைகள் திருப்பூரில் மட்டும் 5 கோடி அளவிற்கு ஆர்டர் குவிந்துள்ளது.
இந்தியாவிற்கான கவச உடைகளை இந்திய ராணுவத்தின் DRDO 2 கோடி தயாரித்து வருகிறது.

5 லடசம் வெண்டிலேட்டர்களை இந்திய அரசு நிறுவனமான BHEL. நிறுவனம் போர்க்கால அடிப்படையில் தயாரித்து வருகிறது.இந்திய ராணுவத்தின் DRDO வும் 2 லட்சம் வெண்டிலேட்டர்களை புதிதாக உற்பத்தி செய்துவருகின்றன.
2Cr ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிப்பு பணிகள், ஆக்ஸிஜன் உற்பத்தி பணி, நிரப்புதல் பணி உள்ளிட்டவைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

ஜூன் மாத இறுதிக்குள் 10Cr ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாராகிவிடும்.

இதுவரை 16 Lk கொரோனா சிறப்பு மருத்துவமனை வார்டு ரயில் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு விட்டன.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன; MBBS படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புதிய இளம் மருத்துவர்களுக்கு கொரானா சிகிச்சை அளிப்பது குறித்த சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
சுருங்கச்சொன்னால் இங்கு நிலைமை தீவிரமாகையில் சமாளிக்கத் தயார் நிலையில் இந்தியா உள்ளது.

அமெரிக்கா,இஸ்ரேல், இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடா, ஆஸ்திரேலியா,ஈரான்,சவுதி அரேபியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவைகளை அளிக்க தயாராய் உள்ளது இந்தியா...
இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியாமல்

"சீனாவைப்பார்,கியூபாவைப்பார்" என்று ஒரு கும்பலும்,

"கைத்தட்டினால் கொரானா போய்விடுமா? விளக்கு பிடித்தால் கொரானா போய்விடுமா?"

என்று ஒரு கும்பலும் கேள்விகளை எழுப்பிக்கொண்டுள்ளனர்...
இவர்களுக்கு காலம்தான் பதில் சொல்லும்...

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

நன்றி:

பதிவு Dr Karpagavel Chandrabose.
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: