அதிகாலை 5:30 மணி!

அமைச்சர் பொறுப்பை ஏற்று ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. நல்ல உறக்கம்.

செல்போன் ஒலி கேட்டது.

விடியற்காலைத் தூக்கத்தைத் தியாகம் செய்ய மனமில்லாமல் ஒரு கண்ணை மட்டும் லேசாகத் திறந்து செல்போனைத் துழாவி எடுத்தேன்.

கோபாலபுரம்!

இருளில் மின்னிய எழுத்துகளைப்

1/4
பார்த்ததும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தேன்.

“ என்னய்யா, பத்திரிகை எல்லாம் பார்த்தியா?”

“ ஆங்.. ஆமாங்கய்யா..படிச்சேன்”

“ என்ன பத்திரிகை எல்லாம் படிச்ச?”

தூக்கக்கலக்கத்திலும் மறவாமல் முரசொலியை முதலில் சொல்லிவிட்டு ஏனைய சில முன்னணிப் பத்திரிகைகளின் பேரையும் சொன்னேன்.

2/4
தீக்கதிர் படிச்சியா?”

“ இல்லங்கய்யா”

“ தீக்கதிர், ஜனசக்தி எல்லாம் வாங்கிப் பாருய்யா..அதுல தான் உன் துறையப் பத்தி விமர்சனம், பிரச்சனைகள் எல்லாம் வரும். அதை முதல்ல தெரிஞ்சுக்கோ”

“ சரிங்கய்யா..இனிமேல் படிச்சுடறேன்”

“ அப்புறம்”

“ அய்யா”

“ நீ இப்போ தான் எந்திரிச்சே

3/4
நீ எங்கிட்ட ஏற்கனவே படிச்சதா சொன்னபாரு.. அதை எல்லாம் அதிகாலையிலே படிச்சுட்டு பிரச்சனை ஏதாவது இருந்தா உடனே அதிகாரிகள் கிட்ட பேசு”

போனை வைத்துவிட்டார்.

அப்போதைக்கு ஏதாவது ஒன்றைச் சொல்லி சமாளிக்க நினைத்தால் அவரிடம் தப்பிக்க முடியாது என்பதற்கு அவரே எடுத்த பாடம் அதுhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😉" title="Winking face" aria-label="Emoji: Winking face">
- @TThenarasu
You can follow @IamTamizhachi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: