நல்ல ஒளிப்பதிவாளர்களுக்கு இருட்டு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா தேவையானதை மட்டும் படம்பிடிக்க இருட்டுதான் தேவை.

ட்விட்டர் பழக்கவழக்கங்களும் இப்படித்தான். தன்னை எவ்ளோ நல்லவனாக் காட்டிக்கமுடியுமோ அவ்ளோ நல்லவனாக் காட்டிக்கலாம்.

அதுதான் இங்க நிலவுற அதீத நம்பகத்தன்மைக்கு முக்கிய காரணம்.
இந்த அதீத நம்பகத்தன்மைதான் இங்க நடக்குற பணமோசடில தொடங்கி உறவுமோசடி வரைக்கும் காரணமாகுது.

என்னதான் நம்பகத்தன்மை இருந்தாலும் எது நம்ம எல்லைன்னு தெரிஞ்சுவச்சுருக்கவங்க தப்பிச்சுடறாங்க.

அதே நேரம் சக ஆள் எல்லை மீறினாலும் அதைப் பயன்படுத்தாம நாகரிகமா நடந்துக்கறவங்களும் இருக்காங்க.
பெரும்பாலான பண மோசடிகள் சில குறிப்பிட்ட வகைகள்லதான் நடக்குது.

தன் பரிதாப நிலையைச் சொல்லிப் பணம் கேக்குறது. இது பெரும்பாலும் ஆயிரங்கள்ல இருக்கும். டெம்ப்ளேட் என்னன்னா குழந்தைக்கு உடம்பு சரியில்ல, லவ்வர்க்கு கேன்சர், மனைவிக்குப் பிரசவம் இப்டிலாம்.

மீச்சிறு மோசடிகள் ரீசார்ஜ் வகை.
Netflix Amazon Prime Airtel ரீசார்ஜ்கள் புத்தகம் புடவை அனுப்பிப் பணம் தராமல் விடுதல் இப்டி சின்னச் சின்ன மோசடிகள் பல நேரங்கள்ல மோசடின்னே தெரியாத மோசடிகள் இருக்கும்.

ஆனா பெரிய லெவல் மோசடிகள் லட்சங்கள்ல நடக்குறதெல்லாம் பிஸினஸ் ஐடியாக்கள் அறுவை சிகிச்சைகள் MLM லஞ்சம் போன்றவை.
அதுல சில வகைகளைப் பாப்போம். அனாதை இல்லம் நடத்துறோம் டொனேஷன் கொடுங்கங்கறது நாசூக்கான மோசடி. இதுல பல பேர் சிக்கிருக்காங்க. இந்த மாதிரி யார் கேட்டாலும் நீங்க தரவேண்டியதில்லை. உங்களுக்கு உதவணும்னு தோனினால் கொஞ்சம் மெனக்கெட்டு அருகிலுள்ள ஏதாவது ஆசிரமத்தை அணுகலாம். இங்க வேணாம்.
MLM இதெல்லாம் சதுரங்கவேட்டையிலயே பாத்த டாபிக்தான். ஆனாலும் அதன் வீரியம் குறையாமத் தொடருது.

எப்போதுமே சலிக்காத ஒரு மோசடின்னா இதுதான். ஏன்னா இதுல நம்பகத்தன்மை பாதி பேராசை மீதிங்கறதால இந்த மாதிரி மோசடிகள் இயல்பா நடக்குது.

உபரிப் பணந்தான் இதுல போகுது. புகார்களும் வர்றதில்ல.
லஞ்சம் கொடுக்கறது. அரசு வேலை வாங்கித்தர்றேன்னு காசு வாங்குறது. அப்றம் அது MLAகிட்ட போயாச்சு மாவட்டத்துட்டப் போயாச்சு ரிசல்ட் வந்துரும்னு சொல்லிச் சொல்லியே காசு ஒலட்டிவிட்ருவாங்க. இதெல்லாம் போலிஸ் கம்ப்ளெயின்ட் கூட கொடுக்கமுடியாது.

கடன் கொடுத்தேன்னாலாவது ஒத்துக்குவாங்க. லஞ்சம்னா?
லஞ்சம் கொடுத்தேன் வேலையும் வரல லஞ்சமும் வரலன்னா நம்மைத்தான் உள்ள போடுவாங்க.

அதனால இருக்கறதிலயே ரிஸ்க் அதிகம் இதுதான்.அவனாக் கொடுத்தாத்தான் ஆச்சு.இல்லன்னா வேற வகையில மிரட்டி வாங்கணும்.

மொத்தத்துல திருடனுக்குத் தேள்கொட்டுன மாதிரி கப்பிக்கிட்டு இருக்கணும்.இதுல மட்டும் விட்றாதீங்க
மருத்துவ ரீதியான காரணங்கள் பாதி நிஜமாவும் இருக்கும்.ஏன்னா இப்பருக்க சூழல்ல மருத்துவத்துக்குச் செலவாகுற பணம் அளவுக்கு மீறுனதுதான்.

அதே நேரம் அது வெற்றியானாலும் அது மூலம் பணம் உற்பத்தியாகப் போறதில்ல.அதனால திரும்பி வர்ற வாய்ப்பு 50%தான்.வட்டியெல்லாம் எதிர்பாத்துடாதீங்க.வாய்ப்பில்ல.
மருத்துவத்துக்காகக் கொடுக்கறது அவங்கவங்க மனநிலைதான. ஆனா அதுக்கு முன்னாடி மெடிகல் ரிப்போர்ட்லாம் வாங்கிடுங்க. சரியான ஆளுக்குதான் போகுதான்னு செக் பண்ணிக்கங்க.

ஒருத்தர் ரெண்டு பேருக்குத் தெரியாமக் கொடுக்காதீங்க. என்னப் பொறுத்தவரை கொடுக்கவே கொடுக்காதீங்க. கொடுத்தாலும் கவனமா இருங்க.
பிஸினஸ் ஐடியாக்கள் தரேன் கூட்டாவோ தனியாவோ இன்வெஸ்ட் பண்ணு. மாசம் இவ்ளோ ரிடர்ன் வரும் இவ்ளோ உனக்கு இவ்ளோ லாபம்னு கேப்பாங்க. ஏற்கனவே பண்ண பிஸினஸோட வெற்றிக் கணக்குலாம் கொடுத்துதான் இதப் பேசுவாங்க.

ஆயிரங்கள் லட்சங்களாகுறது இங்கதான். இங்க பெரும்பாலும் நடுத்தர வயதுதான் இருக்காங்க.
அதனால எதாவது ஒரு தொழில்ல முன்னேறணும்னு வெறியோட இருக்க இளவயசுப் பசங்கதான் டார்கெட்.

வீட்லயும் பையன் உருப்படக் கேக்குறானேன்னு கொடுப்பாங்க. இல்லன்னா நகை எதாவது அடகு வச்சுக் கொடுப்போம்.

இது திரும்பிவர வாய்ப்பு இருக்கு. ஆனா இல்ல. இதுல முக்கியமான லாபம் ரொடேஷன் தான்.
ஒரு லட்சம் கொடுத்தா 2 வருசத்துல திருப்பி சில்ற சில்றயா ஒரு 50000 அப்றம் ஒரு மொக்கை பிசினஸ் ஐடியா கொடுத்துக் கணக்கை முடிச்சுடுவாங்க. இதுல லாபம்னு பாத்தா 2% வட்டி வச்சாக் கூட 2 வருசத்துல 40000+50000 லாபம். இது ஒரு ஓரளவு ஏத்துக்கமுடிஞ்ச நேர்மையா முடியற பிஸினஸ்.

அதுலயே 90% ஸ்வாஹா.
இதுல பல லட்சம் கொடுத்து அது திரும்பியும் வராமப் பிரச்சனையாச்சுன்னா அதனால ஏமாற்றப்படுற பணத்தோட அளவை நீங்களே போட்டுப் பாத்துக்கங்க.

சரி எப்டி இவ்ளோ ஏமாத்தமுடியுதுன்னா அதுதான் சோஷியல் மீடியாவின் வெற்றி.

இங்க இருட்டு சரியான அளவுல பயன்படுத்தப்படுது. எந்த விதத்துல வேணுமோ அந்த அளவுல.
இணையம் ஒரு மிகப்பெரிய இருட்டு. அதுல இவங்க தேவையான ஒளியைத் தேவையான அளவுல செலுத்தித் தங்களை நம்பவைக்கத் தேவையானதை மட்டும் காட்டுறாங்க. பலருக்குப் பேரே தெரியாது. பலருக்குப் பேரே கிடையாது. சொல்றதும் பொய். சொல்ற முகவரியும் பொய். எல்லாமே மாயா.

இது ஒர்க்அவுட்டும் ஆகுது செம்மயா...
காரணம் இங்க உருவாகுற நம்பகத்தன்மை. நாம பாக்குற விஷயங்களை அப்டியே நம்பிடுவோம். நாம என்ன பாக்குறோமோ அதுதான் உண்மைன்னு நினைக்குறோம்.

அதுக்கேத்தாற்போல அவங்க பண்ற ப்ளே நம்மை அவங்களோட ஒன்றவைக்குது.இதே ரியல் லைப்னா அங்க வேற கேள்விகள் வேற மாயை.

ஆனா இங்க எப்டியும் குறைவான கேள்விகள்தான்.
பணமாக் கையில செலவழிக்கறதைவிட ஆன்லைன்ல செலவழிக்கறது ரொம்பவே ஈஸியான விஷயமா இருக்கு. அதனாலதான் டிஜிடல் டிஜிடல்னு நம்மை அறியாமலேயே நம்மை வல்லிய நுகர்வோராக்கிடறாங்க.

அதேதான் இங்கயும் நடக்குது.இயல்பு வாழ்க்கையில நம்மோட சந்தேகங்கள் மிக அதிகம்.ஏன்னா ஏமாறுனா ஊருக்கே தெரிஞ்சுடும்னு பயம்.
ஏமாற்றத்தின் விளைவுகளைப் பற்றிய பயம்தான் நமக்கு இயல்பு வாழ்க்கையில ஏமாறாம இருக்கறதுக்கான காரணத்தை உருவாக்குது.

இங்க ஏமாந்தாலும் கவலையில்ல. காசோட போச்சு. மானம் போகாதுன்னு ஒரு நப்பாசை. அதனால இழப்பைப் பத்திப் பெருசா யோசிக்காம லாபத்தைப் பத்தி யோசிக்கறோம்.

அந்தக் குழியில விழறோம்.
இதெல்லாம் தடுக்க ஒரே வழி கேள்விகள்தான். இங்க கேள்விகள் கேட்டுட்டே இருந்தா நிறைய பேருக்குப் பிடிக்காது. விலகிடுவாங்க.

அது ஒரு வகையில நல்லது.பதில் வருதோ இல்லையோ சலிக்காமக் கேள்வி கேளுங்க.எதோ ஒரு கேள்வி உங்களைக் காப்பாத்திடும்.

ஒரு கட்டத்துல இவனை ஏமாத்தமுடியாதுன்னு தெரிஞ்சுடும்.
சரி பிஸினஸ் பண்ணப் போறோம். ஐடியா வரும்னா அதை ரெகார்ட் பண்ணுங்க. ரெஜிஸ்டர் பண்ணுங்க. நாலஞ்சு பேர்கிட்ட பேசிட்டு சொல்றது உண்மைதானா இது சரிதானான்னு ஒரு தடவைக்குப் பல தடவை யோசிங்க.

பொதுவா ஏற்கனவே பணத்தேவை இருக்கவங்கதான் ஏமாறுறாங்க. இன்னும் பெரிய குழியில விழறாங்க.
சின்னப் பணத்தேவை உள்ளவங்க அதை நீங்களாவே சரிபண்ணிக்கமுடியுமான்னு பாருங்க. இல்லன்னா அத ஈடுகட்டப் போய்ப் பெரிய பண மோசடில சிக்கி அதைச் சமாளிக்கப் பெரிய பணத்தேவைல மாட்டிக்காதீங்க.

உபரிப்பணம்தான போகுதுன்னு அசால்டா இருக்கவேணாம். இங்க உபரின்னு எதுவுமே இல்ல. எல்லாமே தேவைதான்.
வெற்றிக்கதைகள் இனிப்பா இருக்கும். அதனால தோல்விக்கதைகள் படிங்க. சரி எல்லாம் போச்சு இனி என்ன பண்ணலாம்னா பாதிக்கப்பட்டது எத்தனை பேருன்னு பாருங்க.

பணம் பெருசுன்னா நேரா வீட்டுக்குப் போயிடுங்க.தேவைப்பட்டால் மட்டுமே போலிஸ்கிட்ட போங்க.

ஆளப் பிடிங்க. வேற வழியே இல்ல.
நம்ம நாட்டுல மோசடிக் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகம்.செக் மோசடிலாம் வாய்தா வாய்தான்னு இழுத்துக்கிட்டே இருக்கும்.அதுவும் ஒழுங்கா செக் வாங்கிருந்தாத்தான்.

பழைய தேதி வராத தேதி தப்பான கையெழுத்து பெயர் மாற்றம் கணக்கு குளோஸ்னு 80க்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கு தப்பிக்க.
அதனால ப்ரோ நோட் DPN உருப்படியான வாய்ப்பு.அதுலயும் தேதி கவனமா இருக்கணும்.3 வருசம்தான் செல்லும். புதுப்பிக்கனும்.இல்லன்னா அதுக்குள்ள கேஸ் போடணும்.

ஒப்பந்தம் போட்டுக்கலாம்.அதுவே ஒரு வருசத்துக்கு மேல போனா பதிவுபண்ணனும்.

இவ்ளோ சிக்கல எதிர்கொள்ளணுமான்னா ஆமா வேற வழியே இல்ல.
இதைத் தவிர்க்க ஒரே வழி பணம் கொடுக்காம இருக்கறதுதான். என்னையெல்லாம் யாராவது ஏமாத்தமுடியுமான்னு யாரும் இருக்கவேணாம்.முதல் டார்கெட் நீங்கதான்.உங்க புத்திசாலித்தனமே உங்க கண்ணை மறைச்சுடும்.

அதனால எப்போதும் ஆன்லைன் சகவாசம் ஆன்லைன்லயே வச்சுக்கங்க.

நீங்க இல்லன்னா யாரும் அழியப்போறதில்ல.
இங்க பழகிட்டு நேர்ல மீட் பண்ணீங்கன்னா சரக்கு வாங்கிக்கொடுங்க. சாப்பாடு வாங்கிக்கொடுங்க. படத்துக்குப் போங்க. பாருக்குப் போங்க. ஜாலியாப் பேசிப் பழகிக் கொண்டாடுங்க.

ஆனாக் காசுன்னு வந்தா வணக்கம்தான். ஏன்னா இங்க யாரும் பில்கேட்ஸும் இல்ல. பில்கேட்ஸாவே இருந்தாலும் ஏமாறவேண்டியதில்ல.
அதுக்கும் மேல அடிப்படை இல்லாம எந்த வியாபார சகவாசமும் வச்சுக்காதீங்க. அப்டியே வியாபாரம் பண்றதா இருந்தா அதை முறையா ரெண்டு குடும்பத்துகிட்டயும் சொல்லி முறையாப் பதிவு பண்ணி நாலு பேருக்குத் தெரிஞ்சமாதிரி பண்ணுங்க. தப்பே இல்ல.

எந்த சூழலிலும் இவனு/ளுங்களுக்கு இரையாகிடாதீங்க. டாட்.
You can follow @BlitzkriegKK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: