ஒரு இளைஞன் விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பினான். அதற்கு அவரிடம் சென்று அனுமதி கேட்டான்.

அந்த விவசாயி சொன்னார், என் மகளை உனக்கு திருமணம் செய்து கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையப்பா.

ஆனால் அதற்கு முன்"உன் உடல் வலு மற்றும் மன வலு"வை நான் சோதிக்க விழைகிறேன்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான் இளைஞன்.

நீ என்ன செய்ய வேண்டும் என்றால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.

அதில் ஏதாவது ஒரு காளையை நான் அடக்க வேண்டுமா என்றான் இளைஞன்? ஆர்வமாக.

விவசாயி அதற்கு பதில் சொல்லவில்லை. அவன் ஆர்வத்தை ரசித்தார்.
பிறகு சிரித்துக்கொண்டே பதில் சொன்னார், அதில் எந்தக் காளையையும் நீ அடக்க வேண்டாம்.

அதில் "எதாவது ஒரு காளை வாலை மட்டுமாவது நீ தொட்டு விடு போதும்,
என் மகளை உனக்கு மணமுடிக்க சம்மதிக்கிறேன்" என்று சொன்னார்.

அவனும் ஒத்துக் கொண்டான் அந்தப் போட்டிக்கு மறுபேச்சில்லாமல்.

போட்டி தினம்.
மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு மாடு வந்தது.
மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்.
அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது.

அதைப் பார்த்த இளைஞன் திகைத்தான்.
அந்த மாட்டின் வாலைப் பிடிக்கப் பயந்து அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.

சிறிது நேரத்தில் முதலில் வந்த மாட்டை விட கொஞ்சம் வேகம் குறைவான, அப்படி ஒன்றும் அதிகம் பயமுறுத்தாத மாடு ஒன்று வேகமாக வெளியே ஓடி வந்தது.

இப்போதும் இளைஞன் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை.
ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

இளைஞன் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இதன் வாலை பிடித்திருக்கலாம் என்பது உண்மைதான்.

ஆனால் அவன் சிந்தனை வேறு மாதிரி இருந்தது.

முதலில் வந்தது அதி வேகமான காளை..?!

இரண்டாவது வந்தது சுமாரான வேகத்தில் வந்த காளை..?!
எனில், மூன்றாவதாக வரும் காளை படு சாதாரணமான ஒரு காளையாகத்தானே இருக்க வேண்டும்.?! என்று எண்ணினான்.

மனித மனம் விசித்ததிரமானதுதானே.?!

பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு வரப்போகும் மூன்றாவது காளை வாலைப் பிடிக்கத் தயாரானான்.

மூன்றாவது முறையாக கதவு திறந்தது. காளையும் வெளியே வந்தது.
வெளியே வந்த காளையைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது. அவன் கணக்கு தப்பவில்லை இந்த விஷயத்தில்.

அவன் வாழ்க்கையிலேயே இவ்வளவு பலவீனமான ஒரு காளையை பார்த்ததில்லை.

எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது சாரி ஊர்ந்து வந்தது அந்தக் காளை.
இந்தக் காளையை விடக்கூடாது என்று பாய்ந்து அந்த காளைக்கு பின்புறம் போனான் அந்த இளைஞன் அதன் வாலைப் பிடிக்க.

ஆனால் காளையின் பின்புறம் பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தான். ஆம், அந்தோ பரிதாபம்.

அந்த காளை மாட்டுக்கு வாலே இல்லை.

இப்போது இரண்டாவது காளையின் வாலை தொடாததை எண்ணி வருந்தினான்.
தன் தவறையும் உணர்ந்தான். அவன் விரும்பிய பெண்ணும் அவன் கையை விட்டுப் போனாள், அவனுடைய முயற்சியின்மையால், தவறான முடிவால்,அவன் கையாலாகாதத்தனத்தால்.

நீதி: "வாழ்க்கை நமக்கும் பல ஆச்சரியமான வாய்ப்புகளை எப்போதும் வழங்குகிறது நம் உயர்வுக்கு.

சில வாய்ப்புகள் நமக்கு எளிதாகத் தோன்றலாம்.?!
சில வாய்ப்புகள் கடுமையாக தோன்றலாம்?!
ஆனால் எளிதானவைகளுக்கு ஆசைப்பட்டு, ஜெயிக்க வாய்ப்பிருந்தும் கடுமையாக உள்ளது என்று மற்ற வாய்ப்புகளை நாம் தவற விட்டால் அந்த வாய்ப்புகள் நமக்கு மறுபடியும் வாய்க்கவே வாய்க்காது?"

🙏 #இந்த_நாள்_இனிய_நாள் ஆக எல்லோருக்கும் அமைய வாழ்த்துகள் நண்பர்களே🙏
You can follow @ChennaiViswa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: