#அம்மி

"அம்மி" இந்தக்கால குழந்தைகளுக்கு மம்மி என்றால் தெரியும் அம்மி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த காலத்தில் பெரும்பாலும் அடுப்படியை ஒட்டி வீட்டின் பின் புறத்திலும் வாய்ப்பில்லாத வீடுகளில் வாசல் புறத்திலும் பெரிய வீடுகளில் முற்றத்திலும் இடம் பிடித்திருக்கும்.
அம்மா அதில் அரைக்கும் மசாலாவை வைத்தே வீட்டில் சாம்பாரா, புளிக்குழம்பா, கறிக்குழம்பா என அறிந்து கொள்வோம்! எந்த ப்ரீத்தியும் கேரண்டி தராத காலம் அது! சட்னி அரைப்பதும் அதில் தான். அவசரத்திற்கு பழைய சாதத்திற்கு துவையல் அரைத்தும் தருவார்கள்
2.
தரையில் அமர்ந்து இரு கால்களுக்கு நடுவில் வருவது போல் வைத்து சட்னிக்கு இழுத்தரைப்பார்கள்! இப்போது தொப்பை குறைய இந்த முறையில் தான் பெரு நகரங்களில் உள்ள ஜிம்முகளில் பயிற்சியாக வைத்து மாதம் 3000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்!
3
அப்போதெல்லாம் அது அம்மா படும் கஷ்டம் என்பதறியாமல் அம்மியில் இருந்து எகிறி விழும் தேங்காய் பத்தைகளை கேட்ச் செய்ய எம்.எஸ் டோனியைப் போல அமர்ந்திருப்போம். சில நேரங்களில் தேங்காயை உடைத்த பின் நொறுக்குவதும் அம்மியில் தான். வீட்டில் பண்டிகை தினங்கள் வந்துவிட்டால் அம்மாவின் நேரம்
4
பெரும்பாலும் அம்மிக் கல்லுடனே இருக்கும்.

எந்த சக்தி மசாலாவும் இல்லாத காலத்தில் அம்மாவின் சக்தியில் அரைத்த மசாலா அல்லவா அது! அந்த அலாதியான சுவைக்கு அம்மாவின் நெற்றியில் இருந்து தவறி மசாலாவில் விழுந்த சில வியர்வைத்துளிகள் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
5
சில அக்காக்கள் இருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாக்களுக்கு அந்தளவு சுமை இருந்திருக்காது.. அந்த வேலை பகிர்ந்து கொள்ளப்படுவதால்.! அதிலும் அக்காக்களுக்கு அம்மி அரைக்கும் கலை கைவராது. அம்மா தான் சொல்லித் தருவார். நல்லா இழுத்து அரைடி.. இப்ப தண்ணி தெளிச்சுக்கோ..
6
குழவியை நிமித்தும் போது அடிப்பக்கம் விரலை வச்சுடாதே என்றெல்லாம் டிரைவிங் சொல்லித் தரும் மாஸ்டர் போல கூட இருந்து சொல்லித் தருவார்!

அந்த காலத்தில் இளம் பெண்கள் காலில் கட்டு போட்டு இருந்தா நிச்சயம் குழவியை கால்ல போட்டுகிட்டியான்னு கேட்பது சகஜம். சிறுவர்களை அம்மிக்கு
7
அருகே விளையாட அனுப்புவது இல்லை, அவர்கள் காலை நசுக்கிக் கொள்வார்கள்

மஞ்சள் அரைத்து அம்மியை செங்குத்தாக நிறுத்தி வழிக்கும் போது மஞ்சள்.. மிளகாய் அரைத்து வழிக்கும் போது சிவப்பு.. தேங்காய் அரைத்து வழிக்கும் போது வெண்மை.. என அவை எல்லாம் எனக்கு கோவிலில் சாமி
8
விக்ரகங்களுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நினைவு படுத்தும்.

அம்மி கொத்துவது என்று ஒரு தொழிலும் இருந்தது.. அவரும் கிரைண்டர் காலம் வரை வந்து கொத்தினார். இப்போது விஞ்ஞானம் அந்த தொழிலையே கொத்தித் தூக்கிப் போய்விட்டது. எங்கோ சில கிராமங்களில் மனிதனின் கோபத்தாலும்
9
சிலரின் தவறான மோகத்தாலும் அம்மி கொலைக் கருவியாக சிலர் தலையையும் அரைத்து இருக்கிறது

ஆனால் அது அம்மியின் தவறல்லவே! அம்மியில் அரைத்து செய்யப்படும் உணவுகள் பக்குவத்துடன் அலாதி ருசியில் இருக்கும். இப்போதும் அம்மியை சம்பிரதாயங்களுக்கு மட்டும்
10
திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்க்க.. நல்லவேளை இப்படி ஒரு சடங்காகவாவது இருக்கிறதே! அதை மறக்காது இருக்க என்று ஒரு சந்தோஷமே..!!! ❤
11
@roamingraman , @aarjeekaykannan , @GopalanVs , @rkmuthwho , @vimal043 , @VisheshOff , @umanathanvs , @badboybala_63 ,
You can follow @abinavbhargav.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: