பெரியாரை அடிக்க ஆள் தயார் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன்
👇👇👇
புதுவையில், "புதுவை முரசு' என்ற பெயரில், இதழ் நடத்திய புதுவை "திராவிடர் கழக" முதல் தலைவர்" ம.நோயலின் நண்பர் பாரதிதாசன்.

அன்று புதுவையில் பெரியார் பேசுவதாக இருந்தது.

1/
பாரதிதாசனுக்கு பெரியாரைப் பிடிக்காது. #நோயல் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக பாரதிதாசனும் ,பெரியார் பேச்சை கேட்க வருவதற்கு ஒப்புக்கொண்டார்.

ஒரு நிபந்தனையோடு...

"நான் வந்து கலகம் செய்வேன்" என்ற நிபந்தனையோடு அடியாட்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு பெரியாரின் நிகழ்ச்சிக்கு போகிறார்.
2/
1974 ல் பேராசிரியர் #நாகநாதன் சென்னைப் பல்கலையில் பொருளாதார ஆராய்ச்சி மாணவர்.

அப்போது அங்கு தமிழ்த்துறை தலைவராய் இருந்த பேராசிரியர் "ந. சஞ்சீவி"

#ந_சஞ்சீவி
#சஞ்சீவி
3/
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF
பாண்டிச்சேரிக்கு , #பாரதிதாசன் குறித்து தரவுகளை திரட்ட செல்ல ஆயத்தமாகும் சஞ்சீவி அவர்கள், நாகநாதனின் தமிழ் ஆர்வத்தை பார்த்து அவரையும் உடன் வருமாறு அழைக்கிறார்.

அவர்கள் இருவரும் பாரதிதாசனின் மகளைப் போய் பார்க்கிறார்கள்.

அந்த அம்மையார் இவர்களை , #நோயல் இடம் அனுப்புகிறார்.
4/
இந்தக் கதையை நோயல் அவர்களே #சஞ்சீவி மற்றும் #நாகநாதனிடம் நடந்தவைகளைச் சொல்கிறார்.

#பெரியார் சிறுகச் சிறுக , இடைவிடாமல் உழைத்த மனிதர்.

ஆறுபேர் இருக்கும் கூட்டம் என்றாலும் பயணித்து மணிநேரம் உரையாற்றுவார். தமிழனின் இழிவைப் போக்க அவர் உழைத்த உழைப்பு அது.

5/
அன்று நோயல் பேசிய பிறகு பெரியார் பேசுகிறார்.

#பாரதிதாசன் அடியாட்களோடு கலகம் செய்ய காத்து இருக்கிறார்.
***
ஆனால், பெரியாரின் பேச்சைக்கேட்டு பெரியாரின் தொண்டனாகிவிட்டார்.💐

ஆம், அடிக்க, கலகம் செய்ய வந்த பாரதிதாசன், அன்றுமுதல் பெரியாரின் மாணவனாகிறார்.

6/
சிறுகச் சிறுக உழைத்த உழைப்பு பெரியாருடையது. #திராவிடம் என்ன செய்தது என்பவன் வரலாறு அறியாதவன்

#வரலாறு தெரியாதவன் , அவன் அடுத்து எப்படி முன்னேற வேண்டும் என்று திசையறியாத ,இலக்கு அற்ற தக்கை போன்றவன்.

7/
பேராசிரியர் #நாகநாதன் அவர்களின் உரை கேட்டு சிறு தேடலில் எழுதிய குறிப்பு.

இந்த காணொளியில் @ 0:30:00 க்கு இந்த தகவல் வருகிறது.


8/8
You can follow @kalvetu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: